ஹபீபுல் பசர்
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | ஹபீபுல் பசர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலதுகை சுழல் பந்துவீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 4) | நவம்பர் 10 2000 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | பிப்ரவரி 22 2008 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 29) | ஏப்ரல் 6 1995 எ. இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | மே 12 2007 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 7 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் cricketarchive.com, ஆகத்து 30 2008 |
ஹபீபுல் பசர் (Habibul Bashar, பிறப்பு: ஆகத்து 17 1972), வங்காளதேசத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 50 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 111 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், வங்காளதேசத் தேசிய அணியினை 2000 – 2008 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். அணியின் அணித் தலைவராக 2004/2005, 2007 பருவ ஆண்டுகளில் கடமையாற்றியுள்ளார். வலதுகை மட்டையாளரான இவர் துவக்க வீரராக கள்ம் இறங்கினார்.மேலும் வலதுகை சுழற்பந்து வீச்சாளரான இவர் வங்காளதேச தேசிய அணி தவிர பிமான் வங்காளதேச துடுப்பாட்ட அணி ,தாக்கா வாரியர்ஸ் துடுப்பாட்ட அணி மற்றும் குல்னா மாகாணத் துடுப்பாட்ட அணி ஆகிய அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார்.
உள்ளூர்ப் போட்டிகள்
[தொகு]முதல்தரத் துடுப்பாட்டம்
[தொகு]201ஒ ஆம் ஆண்டில் நடைபெற்ற தேசிய லீக் கோப்பைத் துடுப்பாட்டத் தொடரில் இவர் குல்னா மாகாணத் துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார்.பெப்ர்வரி 8 , ராஜாஷியில் சசிட்டகொங் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல்தரத் துடுப்பட்டப்போட்டியில் இவர் விளையாடினார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 129 பந்துகளில் 103 ஓட்டங்களை எடுத்து எலியாஸ் சன்னி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதில் 19 நான்கு ஓட்டங்களும் அடங்கும் இந்தப் போட்டியில் குல்னா துடுப்பாட்ட அணி எட்டு இலக்குகளில் வெற்றி பெற்றது.[1]
பட்டியல் அ
[தொகு]2007 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேசிய லீக் கோப்பைத் துடுப்பாட்டத் தொடரில் இவர் குல்னா துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார். டிசம்பர் 18, குல்னா மைதானத்தில் சியல்காட் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பட்டியல் அ துடுப்பாட்டம் போட்டியில் இவர் இறுதியாக விளையாடினார். இந்தப் போட்டியில் 34 பந்துகளில் 14 ஓட்டங்களை எடுத்து அலோக் கபாலி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் சியல்கோட் துடுப்பாட்ட அணி 86 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.[2]
சர்வதேசப் போட்டிகள்
[தொகு]தேர்வுத் துடுப்பாட்டம்
[தொகு]2000 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது .நவமபர் 10, தாக்கா துடுப்பாட்ட அரங்கில் நடைபெற்ற இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 112 பந்துகளில் 71 ஓட்டங்களை எடுத்து சாகீர் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் 63 பந்துகளில் 30 ஓட்டங்கள் எடுத்து அகர்கர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் இந்திய அணி ஒன்பது இலக்குகளால் வெற்றி பெற்றது.[3] 2008 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கத் ந்தியத் துடுப்பாட்ட அணி வங்காளதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது .பெப்ரவரி 22, தாக்கா துடுப்பாட்ட அரங்கில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முத்ல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் இறுதியாக விளையாடினார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் இருபத்தி மூன்று பந்துகளில் பதிமூன்று ஓட்டங்களை எடுத்து மோர்னே மோர்கல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் எட்டு பந்துகளில் 2 ஓட்டங்கள் எடுத்து ஸ்டெயின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி ஐந்து இலக்குகளால் வெற்றி பெற்றது.
சான்றுகள்
[தொகு]- ↑ "Full Scorecard of Chittagong Division vs Khulna Division, National Cricket League, 2nd Innings - Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-03.
- ↑ "Full Scorecard of Khulna Division vs Sylhet Division, National Cricket League One-Day, Innings - Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-03.
- ↑ "Full Scorecard of Bangladesh vs India Only Test 2000 - Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-03.