உள்ளடக்கத்துக்குச் செல்

தம்மிக பிரசாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தம்மிக பிரசாத்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்காரியவசம் திரான கமகே தம்மிக பிரசாத்
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பங்குபந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 110)ஆகத்து 8 2008 எ. இந்தியா
கடைசித் தேர்வுநவம்பர் 19 2010 எ. மேற்கிந்தியத் தீவுகள்
ஒநாப அறிமுகம் (தொப்பி 130)பிப்ரவரி 25 2006 எ. வங்காளதேசம்
கடைசி ஒநாபஆகத்து 9 2009 எ. பாக்கித்தான்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 6 5 63 60
ஓட்டங்கள் 113 17 1,255 299
மட்டையாட்ட சராசரி 22.60 5.66 20.91 11.96
100கள்/50கள் 0/0 0/0 1/6 0/0
அதியுயர் ஓட்டம் 47 8 103* 31
வீசிய பந்துகள் 1,046 216 8,186 2,434
வீழ்த்தல்கள் 13 5 187 68
பந்துவீச்சு சராசரி 60.30 43.40 27.77 28.94
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 5 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 1 n/a
சிறந்த பந்துவீச்சு 3/82 2/29 6/25 4/39
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/– 0/– 15/– 11/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், பிப்ரவரி 8 2011

காரியவசம் திரான கமகே தம்மிக பிரசாத் (Kariyawasam Tirana Gamage Dammika Prasad, பிறப்பு: மே 30 1983), இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் ராகமயைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் சிங்கள துடுப்பாட்ட சங்கம் மற்றும் வடக்கு பஸ்னஹீரா துடுப்பாட்ட அணிகளுக்காகவும் உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.[1]

இவர் கடைசியாக 2015 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் விளையாடினார். அதன்பின் அடிக்கடி ஏற்பட்ட காயங்களினால் இவருக்கு அணியில் நிலையான இடம் கிடைக்கவில்லை.[2][3][4]

சர்வதேச போட்டிகள்[தொகு]

இவர் உள்ளூர்ப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டார். குறிப்பாக இலக்கினை வீழ்த்துவதற்கு இவர் 23 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளார்.[5] இந்த சராசரியின் காரணமாக 2006 ஆம் ஆண்டில் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். பின் சிட்டகாங்கில் நடைபெற்ற முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 10 ஓவர்கள் வீசி 29 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் இலங்கை அணி 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[1][6]

பின் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இவரால் சில போட்டிகளில் விளையாட இயலவில்லை.பின் 2008 ஆம் ஆண்டில் இந்திய அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியது. இதில் இலங்கை அணியில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். ஆகஸ்டு மாதத்தில் நடைபெற்ற இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமனார். ராகுல் திராவிட் மற்றும் வீரேந்தர் சேவாக் ஆகியோர் தனக்குப் பிடித்தமான வீரர்கள் எனத் தெரிவித்திருந்தார்.[7][8] இந்தப் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட ஐந்து இலக்குகளைக் கைப்பற்றினார். பின் 2008 டிசம்பர் மாதத்தில் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத் தொடரின் முதல் ஆட்டப்பகுதியில் இவர் 4 இலக்குகளைக் கைப்பற்றினார். ஆனால் இவருக்கு இரண்டாவது போட்டியில் விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

[9][10]

சூன் 2011 ஆம் ஆண்டில் இசுக்காட்லாந்து துடுப்பாட்ட அணி மற்றும் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் துடுப்பாட்டத் தொடரில் இலங்கை அணியில் விளையாடும் அணியில் இடம்பெற்றார்.[11] இந்தத் தொடரில் இரு போட்டிகளில் விளையாடினார். இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு இலக்குகளையும் இசுக்காட்லாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் மூன்று இலக்குகளையும் கைப்பற்றினார்.[12] பின் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் இவர் இடம் பெற்றார். ஆனால் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்தத் தொடரில் அந்த அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் இவர் அறிமுகமானார்.[13][14] பின் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் விளையாடினார்.[15] 2011- 2012 ஆம் ஆண்டுகளில் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் சில பந்துவீச்சாளர்களுக்கு காயம் ஏற்பட்டதனால் இவருக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது. இதன் மூன்றாவது போட்டியில் 156 ஓட்டங்கள் கொடுத்து இரண்டு இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் இலங்கை அணி தோற்றது. இதே அணிக்கு எதிராக இரண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் விளையாடினார்.[16][17]

சான்றுகள்[தொகு]

 1. 1.0 1.1 "Dhammika Prasad: Sri Lanka". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 31 December 2011.
 2. "Uncapped Fernando to replace injured Prasad". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 11 March 2017.
 3. "Injured Prasad ruled out of first Test". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 11 March 2017.
 4. "Ford concerned about Sri Lanka's fast-bowling depth". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 11 March 2017.
 5. Sa'adi Thawfeeq (16 February 2006). "Pace rookie Prasad only newcomer for Bangladesh". Daily News (Sri Lanka) இம் மூலத்தில் இருந்து 4 August 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120804231847/http://www.dailynews.lk/2006/02/16/spo01.asp. பார்த்த நாள்: 31 December 2011. 
 6. "Sri Lanka tour of Bangladesh, 2005/06: 3rd ODI – scorecard". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 31 December 2011.
 7. "Sachin's wicket was special: Prasad". Sify Sports. 8 August 2008. http://www.sify.com/sports/sachin-s-wicket-was-special-prasad-news-cricket-jehb5Igjdbb.html. பார்த்த நாள்: 31 December 2011. 
 8. "India tour of Sri Lanka, 2008 – 3rd Test: scorecard". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 31 December 2011.
 9. "Sri Lanka tour of Bangladesh, 2008/09 – 1st Test: scorecard". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 31 December 2011.
 10. "Sri Lanka wins toss, bats vs. Bangladesh". தி இந்து. 3 January 2009 இம் மூலத்தில் இருந்து 25 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130125195442/http://www.hindu.com/thehindu/holnus/007200901030945.htm. பார்த்த நாள்: 31 December 2011. 
 11. "Dhammika to replace Fernando". Sky Sports. 22 June 2011. http://www.skysports.com/story/0,,12349_7000197,00.html. பார்த்த நாள்: 1 January 2012. 
 12. "Statistics / Statsguru / KTGD Prasad / One-Day Internationals". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 1 January 2012.
 13. "Statistics / Statsguru / KTGD Prasad / Twenty20 Internationals". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 1 January 2012.
 14. James, James. "S.Lanka name two rookies for Aussie Tests". sport.co.uk. http://www.sport.co.uk/news/Cricket/56084/SLanka_name_two_rookies_for_Aussie_Tests.aspx. பார்த்த நாள்: 1 January 2012. 
 15. "Statistics / Statsguru / KTGD Prasad / Test matches". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 1 January 2012.
 16. "Statistics / Statsguru / KTGD Prasad / Test matches". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 24 January 2012.
 17. "Statistics / Statsguru / KTGD Prasad / One-Day Internationals". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 24 January 2012.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தம்மிக_பிரசாத்&oldid=3792162" இலிருந்து மீள்விக்கப்பட்டது