உள்ளடக்கத்துக்குச் செல்

சூனியக்காரிகள் வேட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவிட்சர்லாந்தில் மூன்று சூனியக்காரிகள் எரிக்கப்படல் (1585), யொகான் யாக்கோபு விக் என்பவர் வரைந்தது.

சூனியக்காரிகளுக்கான வேட்டை (Witch-hunt) என்பது சூனியக்காரிகளையோ (அதாவது மாயமந்திரம் தெரிந்தவர் என்று அஞ்சப்படும் பெண்களை) அல்லது செய்வினைக்கான சான்றுகளையோ தேடி நடத்தப்படும் வேட்டையாகும். இது பெரும்பாலும், திகில், "அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்" அனைத்த மனப்பாங்கு, நினைத்தவாக்கில் பிறரை சாடல் முதலிய மனிதனின் அடிப்படை பண்புகள் போலவே தோற்றினாலும், பிற்காலங்களில் இது அரசினரின் உடன்பாட்டுடன் சட்டரீதியாகவும் நடந்தேறியதுண்டு. 1480 - 1750 க்கு இடைப்பட்ட காலத்திலேயே ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் இவ்வாறு நாற்பதாயிரம் தொடங்கி நூறாயிரத்துக்கு இடைப்பட்டோர் செய்வினை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, இறப்பு ஒறுப்பும் வழங்கப்பட்டனர். இதுவே முப்பதாண்டுப் போருக்கும், சீர்திருத்தத்திற்கும் உந்துதலாகவும் ஆயிற்று.

பதினெட்டாம் நூற்றாண்டு ஐரோப்பாவின் இறுதி செய்வினை விசாரணை நிகழ்ந்தேறியது. 1735 இன் செய்வினை பற்றிய சட்டம் (Witchcraft Act) மூலம் இத்தகைய செய்கைகள் இனிமேலும் குற்றமாகாது என்று பிரித்தானியாவில் சட்டமூலமாக்கப்பட்டது. செருமனியில் 18ம் நூற்றாண்டு வரை இவ்வழக்கம் தொடர்ந்த போதும் பின் ஒழிந்துவிட்டது. செய்வினை செய்வோரைத் தேடும் வேட்டைகள் தற்காலத்தில் சகாரா பாலைவனத்தின் தெற்காயுள்ள பகுதிகளிலும், இந்தியாவிலும், பாப்புவா நியூகினியாவில் இருந்தும் வரும் செய்திகளில் காணப்படுகின்றன. சவூதி அரேபியாவிலும், கமெருனிலும் இதற்கெதிரான சட்டமியற்றப்பட்டுள்ளது.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Golden, Richard M. (1997). "Satan in Europe: The Geography of Witch Hunts". In Wolfe, Michael (ed.). Changing Identities in Early Modern France. Duke University Press. p. 234.
  2. "witch hunt".. Simon & Schuster. 
  3. Goode, Erich; Ben-Yehuda, Nachman (2010). Moral Panics: The Social Construction of Deviance. Wiley. p. 195. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781444307931.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூனியக்காரிகள்_வேட்டை&oldid=4099068" இலிருந்து மீள்விக்கப்பட்டது