இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 1994

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இலங்கையின் 3வது அரசுத்தலைவர் தேர்தல்

← 1988 9 நவம்பர் 1994 1999 →
வாக்களித்தோர்70.47%
  Chandrika Kumaratunga.jpg
வேட்பாளர் சந்திரிக்கா குமாரதுங்க சிறிமா திசாநாயக்கா
கட்சி இலங்கை சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி
சொந்த மாநிலம் கம்பகா மாவட்டம் கண்டி மாவட்டம்
வென்ற மாநிலங்கள் 22 0
மொத்த வாக்குகள் 4,709,205 2,715,283
விழுக்காடு 62.28% 35.91%

Sri Lankan Presidential Election 1994.png
தேர்தல் மாவட்டங்கள் வாரியாக வெற்றியாளர்கள். குமாரதுங்க: நீலம், திசாநாயக்கா: பச்சை, வாக்களித்தோர் < 3%:: சாம்பல்.

முந்தைய அரசுத்தலைவர்

டி. பி. விஜேதுங்க
ஐக்கிய தேசியக் கட்சி

அரசுத்தலைவர் -தெரிவு

சந்திரிக்கா குமாரதுங்க
இலங்கை சுதந்திரக் கட்சி

மூன்றாவது இலங்கை அரசுத் தலைவர் தேர்தல் (சனாதிபதித் தேர்தல்) 1994 நவம்பர் 9ம் திகதி நடைபெற்றது. இத் தேர்தலுக்கான நியமனப்பத்திரங்கள் 1994 அக்டோபர் 7ம் திகதி ஏற்றுக் கொள்ளப்படுமெனவும், 1994 நவம்பர் 9ம் திகதி தேர்தல் நடைபெறுமெனவும் உத்தியோகபூர்வமான அறிவித்தல் ஜனாதிபதி விஜயதுங்க அவர்களின் பணிப்புரையின்படி தேர்தல் ஆணையாளர் திரு. ஆர். கே. சந்திரானந்த டி சில்வா அவர்களினால் 1994 செப்டெம்பர் 17ம் திகதி விடுக்கப்பட்டது.

பொருளடக்கம்

நியமனப்பத்திரம் தாக்கல்[தொகு]

பின்வரும் அபேட்சகர்கள் நியமனப்பத்திரங்களைத் தாக்கல் செய்தனர்.

  • சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க (பொதுசன ஐக்கிய முன்னணி)
  • நிஹால் கலப்பதி (ஸ்ரீலங்கா முற்போக்கு முன்னணி)
  • காமினி திசாநாயக்க (ஐக்கிய தேசியக்கட்சி)
  • ஏ.ஜே..ரணசிங்க (சுயேட்சை)
  • ஹரிச்சந்திர விஜேதுங்க (சிங்களே மகாசம்மத பூமிபுத்திர கட்சி)
  • ஹட்சன் சமரசிங்க (சுயேட்சை)

சின்னங்கள்[தொகு]

தேர்தலின்போது இவர்களுக்கு வழங்கப்பட்ட சின்னங்கள் முறையே

  • நாற்காலி
  • மலர்ச்செடி
  • யானை
  • அன்னப்பறவை
  • விமானம்
  • மேசை

முக்கிய நிகழ்வுகள்[தொகு]

அபேட்சகர் கொலை[தொகு]

தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த காமினி திசாநாயக்க 1994 அக்டோபர் 23ம் திகதி நள்ளிரவு 12.17 அளவில் கொழும்பு தொட்டலங்க (பாலத்தோட்டை) நாகலம் வீதியில் அமைந்துள்ள பொதுச் சந்தை மைதானத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிவிட்டு தமது இருக்கையை நோக்கிச் செல்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பினால் கொலை செய்யப்பட்டார். இக்குண்டு வெடிப்பின்போது காமினிதிசாநாயக்கவுடன், ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் டாக்டர் காமினி விஜேசேகர, முன்னாள் அமைச்சர்களான வீரசிங்க மல்லிமாராட்சி, ஜி. எம். பிரேமச்சந்திர உட்பட சுமார் 62 மனித உயிர்கள் பலியாக்கப்பட்டன.

இச் சம்பவத்தையடுத்து சனாதிபதியைத் தேர்ந்தெடுத்தல் தொடர்பான 1981ம் ஆண்டு 15ம் இலக்க பாராளுமன்ற சட்டமூலத்தின் 22ம் உறுப்புரையின் (1) (2) (3) உட்பிரிவுகளுக்கமைய 3 தினங்களுக்குள் சனாதிபதி வேட்பாளர் ஒருவரை நியமிக்குமாறு தேர்தல் ஆணையாளர் 1994 ஒக்டோபர் 24ம் திகதி ஐக்கிய தேசியக்கட்சியைக் கேட்டுக் கொண்டார். இதையடுத்து 1994 ஒக்டோபர் 25ம் திகதி சனாதிபதி திரு. டீ.பீ. விஜயதுங்க தலைமையில் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகமான ‘சிரிகொத’ வில் அவசரக்கூட்டமொன்று கூட்டப்பட்டது. கட்சியின் 42 பிரதானிகள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் சனாதிபதி அபேட்சகர்களாக காமினிதிசாநாயக்க அவர்களின் மனைவி திருமதி வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க அவர்களின் பெயரும், முன்னைய பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பெயரும் பிரஸ்தாபிக்கப்பட்டன.

புதிய வேட்பாளர்[தொகு]

இரண்டு பெயர்கள் பிரஸ்தாபிக்கப்பட்டமையினால் ஏற்பட்ட வாதப் பிரதிவாதங்களையடுத்து அரசுத் தலைவர் வேட்பாளரைத் தீர்மானிக்கும் பொறுப்பு ஒரு விசேட கமிட்டிக்கு விடப்பட்டது. இவ்விசேட குழு திருமதி ஸ்ரீமதி திசாநாயக்கவை அரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்துவது எனத் தீர்மானித்தது. இத்தீர்மானத்தை கட்சியின் நிர்வாகக் குழு ஏகமனதாக அனுமதித்துள்ளதென அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இம்முடிவினை கட்சியின் தற்காலிக செயலாளர் தஹம் விமலசேன அவர்களினால் அதே தினத்தில் தேர்தல் ஆணையாளர் அவர்களுக்கும் அறிவிக்கப்பட்டது.

1981ம் ஆண்டு 15ம் இலக்க பாராளுமன்ற சட்டமூலத்தின் 22 (2) உறுப்புரையின்படி தேர்தல் ஆணையாளர் பெற்றுள்ள அதிகாரங்களுக்கமைய வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க அவர்கள் ஐக்கியத் தேசியக் கட்சியின் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளப்பட்டார். இந்த உத்தியோகபூர்வமான அறிவித்தல் 1994 ஒக்டோபர் 27ம் திகதி தேர்தல் ஆணையாளரினால் விடுக்கப்பட்டது. அத்துடன், திட்டமிட்டபடி 1994 நவம்பர் 09ம் திகதி நாடுபூராவும் காலை 7.00 மணி தொடக்கம் 4.00 மணி வரை தேர்தல் நடத்தப்படுமெனவும் உறுதிப்படுத்தப்பட்டது.

அபேட்சகர் போட்டியிலிருந்து விலகிக் கொள்ளல்[தொகு]

3வது இலங்கை அரசுத் தலைவர் தேர்தலில் அபேட்சகர் நிஹால் கலப்பதி அவர்கள் போட்டியிலிருந்து விலகிக் கொண்டமை இத்தேர்தலின் மற்றுமொரு முக்கிய அம்சமாகும்.

நிறைவேற்று அதிகாரமிக்க அதாவது தனி அதிகாரமிக்க இலங்கை அரசுத் தலைவர்முறை ஒழிக்கப்படமெனவும், அதேநேரம், தனிப்பட்ட ஒரு நபருக்கு அதிகாரம் வழங்கப்படுவதைத் தடுத்து பாராளுமன்றத்தக்கு பூரணபொறுப்புச் சொல்லக்கூடிய ஒரு நிர்வாக முறை ஏற்படுத்தப்படுமெனவும் பொதுசன ஐக்கிய முன்னணி வேட்பாளரும், பிரதம மந்திரியுமான சந்திரிக்கா குமாரதுங்க அவர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் மக்களுக்கு உறுதியளித்து எழுத்து மூலமாக அறிவிப்பாராயின் தான் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக ஸ்ரீலங்கா முற்போக்கு முன்னணி வேட்பாளர் திரு. நிஹால் கலப்பதி அவர்கள் 1994.10.20ம் திகதியன்று பொதுசனத் தொடர்பு சாதனங்களினூடாக பகிரங்கமாக அறிவித்தல் விடுத்தார்.

இந்த சவாலை திருமதி சந்திரிக்கா குமாரதுங்க அவர்கள் ஏற்றுக் கொண்டார். 1995ம் ஆண்டு ஜுலை 15ம் திகதிக்கு தற்போதைய அரசியலமைப்பு மாற்றியமைக்கப்படுமெனவும், மாற்றியமைக்கப்படும் அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகாரம், கொண்ட நிறைவேற்று அதிகாரமிக்க இலங்கை அரசுத் தலைவர் பதவி ஒழிக்கப்படுமெனவும் 1994.10.21ம் திகதி இலங்கை ரூபவாஹினியில் இடம்பெற்ற விசேட பேட்டியில் குறிப்பிட்டார். 1994.10.19ம் திகதி பதுளை சேனநாயக்கா விளையாட்டரங்கில் பொதுக்கூட்டமொன்றில் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி பதவி நீக்கப்பட்ட வேண்டியதன் அவசியத்தை விரிவாக முறையில் இவர் ஏற்கனவே விளக்கியிருந்தார். சந்திரிக்கா குமாரதுங்கவின் இந்நிலைப்பாட்டால் திருப்தியடைந்த கலப்பதி அவர்கள் 1994.10.27ம் திகதியன்று தான் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார்.

மாவட்ட முடிவுகள்[தொகு]

கொழும்பு மாவட்டம்[தொகு]

  • சந்திரிக்கா குமாரதுங்க (பொதுசன ஐக்கிய முன்னணி) 557,708 (64.82 %)
  • நிஹால் கலப்பதி (ஸ்ரீலங்கா முற்போக்கு முன்னணி) 1,819 (0.21%)
  • வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (ஐக்கிய தேசியக்கட்சி) 288,741 (33.56%)
  • ஏ.ஜே. ரணசிங்க (சுயேட்சை) 3,533 (0,41%)
  • ஹரிச்சந்திர விஜேதுங்க (சிங்களே மகாசம்மத பூமிபுத்திர கட்சி) 6,059 (0.70%)
  • ஹட்சன் சமரசிங்க (சுயேட்சை) 2,526 (0.29%)
    • பதியப்பட்ட வாக்குகள் 1,235,959
    • செல்லுபடியான வாக்குகள் 860,386 (98.17 %)
    • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 16,060 (1.83%)
    • அளிக்கப்பட்ட வாக்குகள் 876,446 (70.91%)

கம்பஹா மாவட்டம்[தொகு]

  • சந்திரிக்கா குமாரதுங்க (பொதுசன ஐக்கிய முன்னணி) 550,654 (64.74%)
  • நிஹால் கலப்பதி (ஸ்ரீலங்கா முற்போக்கு முன்னணி) 1,832 (0.22%)
  • வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (ஐக்கிய தேசியக்கட்சி) 288,608 (33.93%)
  • ஏ.ஜே. ரணசிங்க (சுயேட்சை) 2,711 (0.32%)
  • ஹரிச்சந்திர விஜேதுங்க (சிங்களே மகாசம்மத பூமிபுத்திர கட்சி) 3,694 (0.43%)
  • ஹட்சன் சமரசிங்க (சுயேட்சை) 3,019 (0.35%)
    • பதியப்பட்ட வாக்குகள் 1,140,808
    • செல்லுபடியான வாக்குகள் 850,518 (98.48%)
    • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 13,137 (1.52%)
    • அளிக்கப்பட்ட வாக்குகள் 863,655 (75.71%)

களுத்துறை மாவட்டம்[தொகு]

  • சந்திரிக்கா குமாரதுங்க (பொதுசன ஐக்கிய முன்னணி) 295,686 (61.47%)
  • நிஹால் கலப்பதி (ஸ்ரீலங்கா முற்போக்கு முன்னணி) 1,388 (0.29%)
  • வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (ஐக்கிய தேசியக்கட்சி) 178,466 (37.10%)
  • ஏ.ஜே. ரணசிங்க (சுயேட்சை) 1,398 (0.39%)
  • ஹரிச்சந்திர விஜேதுங்க (சிங்களே மகாசம்மத பூமிபுத்திர கட்சி) 1,868 (0.39%)
  • ஹட்சன் சமரசிங்க (சுயேட்சை) 2,213 (0.46%)
    • பதியப்பட்ட வாக்குகள் 646,199
    • செல்லுபடியான வாக்குகள் 481,019 (98.50%)
    • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 7,309 (1.50%)
    • அளிக்கப்பட்ட வாக்குகள் 488,328 (75.57%)

கண்டி மாவட்டம்[தொகு]

  • சந்திரிக்கா குமாரதுங்க (பொதுசன ஐக்கிய முன்னணி) 320,110 (56.64%)
  • நிஹால் கலப்பதி (ஸ்ரீலங்கா முற்போக்கு முன்னணி) 1,370 (0.24%)
  • வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (ஐக்கிய தேசியக்கட்சி) 235,519 (41.68%)
  • ஏ.ஜே. ரணசிங்க (சுயேட்சை) 1,752 (0.31%)
  • ஹரிச்சந்திர விஜேதுங்க (சிங்களே மகாசம்மத பூமிபுத்திர கட்சி) 2,618 (0.46%)
  • ஹட்சன் சமரசிங்க (சுயேட்சை) 3,748 (0.66%)
    • பதியப்பட்ட வாக்குகள் 726,192
    • செல்லுபடியான வாக்குகள் 565,117 (97.55%)
    • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 14,179 (2.45%)
    • அளிக்கப்பட்ட வாக்குகள் 579,296 (79.77%)

மாத்தளை மாவட்டம்[தொகு]

  • சந்திரிக்கா குமாரதுங்க (பொதுசன ஐக்கிய முன்னணி) 121,449 (60.98%)
  • நிஹால் கலப்பதி (ஸ்ரீலங்கா முற்போக்கு முன்னணி) 680 (0.34%)
  • வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (ஐக்கிய தேசியக்கட்சி) 73,324 (36.82%)
  • ஏ.ஜே. ரணசிங்க (சுயேட்சை) 608 (0.31%)
  • ஹரிச்சந்திர விஜேதுங்க (சிங்களே மகாசம்மத பூமிபுத்திர கட்சி) 992 (0.50%)
  • ஹட்சன் சமரசிங்க (சுயேட்சை) 2,111 (1.06%)
    • பதியப்பட்ட வாக்குகள் 250,816
    • செல்லுபடியான வாக்குகள் 199,164 (97.40%)
    • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 5,317 (2.60%)
    • அளிக்கப்பட்ட வாக்குகள் 204,481 (81.53%)

நுவரெலியா மாவட்டம்[தொகு]

  • சந்திரிக்கா குமாரதுங்க (பொதுசன ஐக்கிய முன்னணி) 168,929 (57.14%)
  • நிஹால் கலப்பதி (ஸ்ரீலங்கா முற்போக்கு முன்னணி) 1,044 (0.35%)
  • வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (ஐக்கிய தேசியக்கட்சி) 116, 928 (39.55%)
  • ஏ.ஜே. ரணசிங்க (சுயேட்சை) 1,083 (0.37%)
  • ஹரிச்சந்திர விஜேதுங்க (சிங்களே மகாசம்மத பூமிபுத்திர கட்சி) 1,332 (0.45%)
  • ஹட்சன் சமரசிங்க (சுயேட்சை) 6,314 (2.14%)
    • பதியப்பட்ட வாக்குகள் 386,668
    • செல்லுபடியான வாக்குகள் 295,630 (96.15%)
    • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 11,840 (3.85%)
    • அளிக்கப்பட்ட வாக்குகள் 307,470 (79.52%)

காலி மாவட்டம்[தொகு]

  • சந்திரிக்கா குமாரதுங்க (பொதுசன ஐக்கிய முன்னணி) 285,398 (61.40%)
  • நிஹால் கலப்பதி (ஸ்ரீலங்கா முற்போக்கு முன்னணி) 1,487 (0.32%)
  • வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (ஐக்கிய தேசியக்கட்சி) 173,282 (37.28%)
  • ஏ.ஜே. ரணசிங்க (சுயேட்சை) 1,179 (0.25%)
  • ஹரிச்சந்திர விஜேதுங்க (சிங்களே மகாசம்மத பூமிபுத்திர கட்சி) 1,584 (0.34%)
  • ஹட்சன் சமரசிங்க (சுயேட்சை) 1,885 (0.41%)
    • பதியப்பட்ட வாக்குகள் 632,412
    • செல்லுபடியான வாக்குகள் 464,815 (98.49%)
    • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 7,112 (1.51%)
    • அளிக்கப்பட்ட வாக்குகள் 471,927 (74.62%)

மாத்தறை மாவட்டம்[தொகு]

  • சந்திரிக்கா குமாரதுங்க (பொதுசன ஐக்கிய முன்னணி) 227,865 (64.69%)
  • நிஹால் கலப்பதி (ஸ்ரீலங்கா முற்போக்கு முன்னணி) 1,397 (0.40%)
  • வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (ஐக்கிய தேசியக்கட்சி) 118,224 (33.56%)
  • ஏ.ஜே. ரணசிங்க (சுயேட்சை) 1,134 (0.32%)
  • ஹரிச்சந்திர விஜேதுங்க (சிங்களே மகாசம்மத பூமிபுத்திர கட்சி)1,564 (0.44%)
  • ஹட்சன் சமரசிங்க (சுயேட்சை) 2,055 (0.58%)
    • பதியப்பட்ட வாக்குகள் 503,470
    • செல்லுபடியான வாக்குகள் 352,239 (98.40%)
    • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 5,731 (1.60%)
    • அளிக்கப்பட்ட வாக்குகள் 357,970 (71.10%)

ஹம்பாந்தோட்டை மாவட்டம்[தொகு]

  • சந்திரிக்கா குமாரதுங்க (பொதுசன ஐக்கிய முன்னணி) 132,873 (61.52%)
  • நிஹால் கலப்பதி (ஸ்ரீலங்கா முற்போக்கு முன்னணி) 1,685 (0.78%)
  • வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (ஐக்கிய தேசியக்கட்சி) 77,735 (35.99%)
  • ஏ.ஜே. ரணசிங்க (சுயேட்சை) 750 (0.35%)
  • ஹரிச்சந்திர விஜேதுங்க (சிங்களே மகாசம்மத பூமிபுத்திர கட்சி) 1,538 (0.71%)
  • ஹட்சன் சமரசிங்க (சுயேட்சை) 1,414 (0.65%)
    • பதியப்பட்ட வாக்குகள் 326,913
    • செல்லுபடியான வாக்குகள் 215,995 (98.18%)
    • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 4,013 (1.82%)
    • அளிக்கப்பட்ட வாக்குகள் 220,008 (67.30%)

யாழ்ப்பாண மாவட்டம்[தொகு]

  • சந்திரிக்கா குமாரதுங்க (பொதுசன ஐக்கிய முன்னணி) 16,934 (96.35%)
  • நிஹால் கலப்பதி (ஸ்ரீலங்கா முற்போக்கு முன்னணி) 25 (0.14%)
  • வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (ஐக்கிய தேசியக்கட்சி) 223 (1.27%)
  • ஏ.ஜே. ரணசிங்க (சுயேட்சை) 16 (0.09%)
  • ஹரிச்சந்திர விஜேதுங்க (சிங்களே மகாசம்மத பூமிபுத்திர கட்சி) 36 (0.20%)
  • ஹட்சன் சமரசிங்க (சுயேட்சை) 341 (1.94%)
    • பதியப்பட்ட வாக்குகள் 596,366
    • செல்லுபடியான வாக்குகள் 17,575 (99.20%)
    • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 141 (0.80%)
    • அளிக்கப்பட்ட வாக்குகள் 17,716 (2.97%)

வன்னி மாவட்டம்[தொகு]

  • சந்திரிக்கா குமாரதுங்க (பொதுசன ஐக்கிய முன்னணி) 33,585 (85.30%)
  • நிஹால் கலப்பதி (ஸ்ரீலங்கா முற்போக்கு முன்னணி) 118 (0.30%)
  • வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (ஐக்கிய தேசியக்கட்சி) 4,493 (11.41%)
  • ஏ.ஜே. ரணசிங்க (சுயேட்சை) 77 (0.20%)
  • ஹரிச்சந்திர விஜேதுங்க (சிங்களே மகாசம்மத பூமிபுத்திர கட்சி) 96 (0.24%)
  • ஹட்சன் சமரசிங்க (சுயேட்சை) 1,003 (2.55%)
    • பதியப்பட்ட வாக்குகள் 178,697
    • செல்லுபடியான வாக்குகள் 39,372 (98.30%)
    • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 681 (1.70%)
    • அளிக்கப்பட்ட வாக்குகள் 40,053 (22.41%)

மட்டக்களப்பு மாவட்டம்[தொகு]

  • சந்திரிக்கா குமாரதுங்க (பொதுசன ஐக்கிய முன்னணி) 144,275 (87.30%)
  • நிஹால் கலப்பதி (ஸ்ரீலங்கா முற்போக்கு முன்னணி) 484 (0.29%)
  • வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (ஐக்கிய தேசியக்கட்சி) 14,812 (8.93%)
  • ஏ.ஜே. ரணசிங்க (சுயேட்சை) 381 (0.23%)
  • ஹரிச்சந்திர விஜேதுங்க (சிங்களே மகாசம்மத பூமிபுத்திர கட்சி) 349 (0.21%)
  • ஹட்சன் சமரசிங்க (சுயேட்சை) 5,028 (3.03%)
    • பதியப்பட்ட வாக்குகள் 261,897
    • செல்லுபடியான வாக்குகள் 165,779 (98.42%)
    • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 2,664 (1.58%)
    • அளிக்கப்பட்ட வாக்குகள் 168,443 (64.32%)

திகாமடுல்லை மாவட்டம்[தொகு]

  • சந்திரிக்கா குமாரதுங்க (பொதுசன ஐக்கிய முன்னணி) 168,289 (72.36%)
  • நிஹால் கலப்பதி (ஸ்ரீலங்கா முற்போக்கு முன்னணி) 574 (0.25%)
  • வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (ஐக்கிய தேசியக்கட்சி) 59,074 (25.40%)
  • ஏ.ஜே. ரணசிங்க (சுயேட்சை) 496 (0.21%)
  • ஹரிச்சந்திர விஜேதுங்க (சிங்களே மகாசம்மத பூமிபுத்திர கட்சி) 471 (0.20%)
  • ஹட்சன் சமரசிங்க (சுயேட்சை) 3,677 (1.58%)
    • பதியப்பட்ட வாக்குகள் 312,006
    • செல்லுபடியான வாக்குகள் 232,581 (98.47%)
    • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 3,621 (1.53%)
    • அளிக்கப்பட்ட வாக்குகள் 235,202 (75.70%)

திருகோணமலை மாவட்டம்[தொகு]

  • சந்திரிக்கா குமாரதுங்க (பொதுசன ஐக்கிய முன்னணி) 77,943 (71.62%)
  • நிஹால் கலப்பதி (ஸ்ரீலங்கா முற்போக்கு முன்னணி) 324 (0.30%)
  • வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (ஐக்கிய தேசியக்கட்சி) 28,006 (25.74%)
  • ஏ.ஜே. ரணசிங்க (சுயேட்சை) 195 (0.18%)
  • ஹரிச்சந்திர விஜேதுங்க (சிங்களே மகாசம்மத பூமிபுத்திர கட்சி) 279 (0.26%)
  • ஹட்சன் சமரசிங்க (சுயேட்சை) 2,074 (1.91%)
    • பதியப்பட்ட வாக்குகள் 184,090
    • செல்லுபடியான வாக்குகள் 108,821 (98.44%)
    • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1,726 (1.56%)
    • அளிக்கப்பட்ட வாக்குகள் 110,547 (60.05%)

குருநாகலை மாவட்டம்[தொகு]

  • சந்திரிக்கா குமாரதுங்க (பொதுசன ஐக்கிய முன்னணி) 403,838 (59.36%)
  • நிஹால் கலப்பதி (ஸ்ரீலங்கா முற்போக்கு முன்னணி) 1,842 (0.27%)
  • வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (ஐக்கிய தேசியக்கட்சி) 266,740 (39.21%)
  • ஏ.ஜே. ரணசிங்க (சுயேட்சை) 1,714 (0.25%)
  • ஹரிச்சந்திர விஜேதுங்க (சிங்களே மகாசம்மத பூமிபுத்திர கட்சி) 2,211 (0.32%)
  • ஹட்சன் சமரசிங்க (சுயேட்சை) 3,999 (0.59%)
    • பதியப்பட்ட வாக்குகள் 876,591
    • செல்லுபடியான வாக்குகள் 680,344 (98.48%)
    • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 10,511 (1.52%)
    • அளிக்கப்பட்ட வாக்குகள் 690,855 (78.81%)

புத்தளம் மாவட்டம்[தொகு]

  • சந்திரிக்கா குமாரதுங்க (பொதுசன ஐக்கிய முன்னணி) 165,795 (62.65%)
  • நிஹால் கலப்பதி (ஸ்ரீலங்கா முற்போக்கு முன்னணி) 625 (0.24%)
  • வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (ஐக்கிய தேசியக்கட்சி) 95,211 (35.98%)
  • ஏ.ஜே. ரணசிங்க (சுயேட்சை) 591 (0.22%)
  • ஹரிச்சந்திர விஜேதுங்க (சிங்களே மகாசம்மத பூமிபுத்திர கட்சி) 617 (0.23%)
  • ஹட்சன் சமரசிங்க (சுயேட்சை) 1,796 (0.68%)
    • பதியப்பட்ட வாக்குகள் 380,872
    • செல்லுபடியான வாக்குகள் 264,635 (98.26%)
    • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 4,689 (1.74%)
    • அளிக்கப்பட்ட வாக்குகள் 269,324 (70.71%)

அநுராதபுர மாவட்டம்[தொகு]

  • சந்திரிக்கா குமாரதுங்க (பொதுசன ஐக்கிய முன்னணி) 200,146 (63.99%)
  • நிஹால் கலப்பதி (ஸ்ரீலங்கா முற்போக்கு முன்னணி) 1,083 (0.35%)
  • வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (ஐக்கிய தேசியக்கட்சி) 107,342 (34.32%)
  • ஏ.ஜே. ரணசிங்க (சுயேட்சை) 678 (0.22%)
  • ஹரிச்சந்திர விஜேதுங்க (சிங்களே மகாசம்மத பூமிபுத்திர கட்சி) 1,014 (0.32%)
  • ஹட்சன் சமரசிங்க (சுயேட்சை) 2,534 (0.81%)
    • பதியப்பட்ட வாக்குகள் 406,926
    • செல்லுபடியான வாக்குகள் 321,797 (98.05%)
    • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 6,205 (1.95%)
    • அளிக்கப்பட்ட வாக்குகள் 319,002 (78.39%)

பொலநறுவை மாவட்டம்[தொகு]

  • சந்திரிக்கா குமாரதுங்க (பொதுசன ஐக்கிய முன்னணி) 88,907 (59.08%)
  • நிஹால் கலப்பதி (ஸ்ரீலங்கா முற்போக்கு முன்னணி) 469 (0.31%)
  • வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (ஐக்கிய தேசியக்கட்சி) 59,287 (39.40%)
  • ஏ.ஜே. ரணசிங்க (சுயேட்சை) 258 (0.17%)
  • ஹரிச்சந்திர விஜேதுங்க (சிங்களே மகாசம்மத பூமிபுத்திர கட்சி) 428 (0.28%)
  • ஹட்சன் சமரசிங்க (சுயேட்சை) 1,126 (0.75%)
    • பதியப்பட்ட வாக்குகள் 200,192
    • செல்லுபடியான வாக்குகள் 150,475 (97.43%)
    • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 3,966 (2.57%)
    • அளிக்கப்பட்ட வாக்குகள் 154,441 (77.15%)

பதுளை மாவட்டம்[தொகு]

  • சந்திரிக்கா குமாரதுங்க (பொதுசன ஐக்கிய முன்னணி) 182,810 (55.27%)
  • நிஹால் கலப்பதி (ஸ்ரீலங்கா முற்போக்கு முன்னணி) 1,372 (0.41%)
  • வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (ஐக்கிய தேசியக்கட்சி) 139,611 (42.21%)
  • ஏ.ஜே. ரணசிங்க (சுயேட்சை) 1,387 (0.42%)
  • ஹரிச்சந்திர விஜேதுங்க (சிங்களே மகாசம்மத பூமிபுத்திர கட்சி) 1,745 (0.53%)
  • ஹட்சன் சமரசிங்க (சுயேட்சை) 3,847 (1.16%)
    • பதியப்பட்ட வாக்குகள் 435,260
    • செல்லுபடியான வாக்குகள் 330,772 (95.91%)
    • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 14,093 (4.09%)
    • அளிக்கப்பட்ட வாக்குகள் 344,865 (79.23%)

மொனராகலை மாவட்டம்[தொகு]

  • சந்திரிக்கா குமாரதுங்க (பொதுசன ஐக்கிய முன்னணி) 96,620 (63.20%)
  • நிஹால் கலப்பதி (ஸ்ரீலங்கா முற்போக்கு முன்னணி) 824 (0.54%)
  • வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (ஐக்கிய தேசியக்கட்சி) 52,026 (34.03%)
  • ஏ.ஜே. ரணசிங்க (சுயேட்சை) 556 (0.36%)
  • ஹரிச்சந்திர விஜேதுங்க (சிங்களே மகாசம்மத பூமிபுத்திர கட்சி) 877 (0.57%)
  • ஹட்சன் சமரசிங்க (சுயேட்சை) 1,966 (1.27%)
    • பதியப்பட்ட வாக்குகள் 199,391
    • செல்லுபடியான வாக்குகள் 152,867 (97.46%)
    • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 3,977 (2.54%)
    • அளிக்கப்பட்ட வாக்குகள் 156,846 (78.66%)

இரத்தினபுரி மாவட்டம்[தொகு]

  • சந்திரிக்கா குமாரதுங்க (பொதுசன ஐக்கிய முன்னணி) 257,265 (58.07%)
  • நிஹால் கலப்பதி (ஸ்ரீலங்கா முற்போக்கு முன்னணி) 1,279 (0.29%)
  • வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (ஐக்கிய தேசியக்கட்சி) 177,924 (40.16%)
  • ஏ.ஜே. ரணசிங்க (சுயேட்சை) 1,235 (0.28%)
  • ஹரிச்சந்திர விஜேதுங்க (சிங்களே மகாசம்மத பூமிபுத்திர கட்சி) 1,877 (0.42%)
  • ஹட்சன் சமரசிங்க (சுயேட்சை) 3,451 (0.78%)
    • பதியப்பட்ட வாக்குகள் 554,607
    • செல்லுபடியான வாக்குகள் 443,031 (98.31%)
    • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 7,595 (1.69%)
    • அளிக்கப்பட்ட வாக்குகள் 450,626 (81.25%)

கேகாலை மாவட்டம்[தொகு]

  • சந்திரிக்கா குமாரதுங்க (பொதுசன ஐக்கிய முன்னணி) 211,676 (56.06%)
  • நிஹால் கலப்பதி (ஸ்ரீலங்கா முற்போக்கு முன்னணி) 1,028 (0.27%)
  • வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (ஐக்கிய தேசியக்கட்சி) 159,707 (42.30%)
  • ஏ.ஜே. ரணசிங்க (சுயேட்சை) 1,020 (0.27%)
  • ஹரிச்சந்திர விஜேதுங்க (சிங்களே மகாசம்மத பூமிபுத்திர கட்சி) 1,402 (0.37%)
  • ஹட்சன் சமரசிங்க (சுயேட்சை) 2,759 (0.73%)
    • பதியப்பட்ட வாக்குகள் 500,947
    • செல்லுபடியான வாக்குகள் 377,592 (98.14%)
    • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 7,139 (1.86%)
    • அளிக்கப்பட்ட வாக்குகள் 384,731 (76.80%)

இறுதித் தேர்தல் முடிவுகள்[தொகு]

  • சந்திரிக்கா குமாரதுங்க (பொதுசன ஐக்கிய முன்னணி) 4,709,205 (62.28%)
  • வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க (ஐக்கிய தேசியக்கட்சி) 2,715,283 (35.91%)
  • ஹட்சன் சமரசிங்க (சுயேட்சை) 58,886 (0.78%)
  • ஹரிச்சந்திர விஜேதுங்க (சிங்களே மகாசம்மத பூமிபுத்திர கட்சி) 32,651 (0.43%)
  • ஏ.ஜே. ரணசிங்க (சுயேட்சை) 22.752 (0.30%)
  • நிஹால் கலப்பதி (ஸ்ரீலங்கா முற்போக்கு முன்னணி) 22,749 (0.30%)
    • பதியப்பட்ட வாக்குகள் 10,937,279
    • செல்லுபடியான வாக்குகள் 7,561,526 (98.03%)
    • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 151,706 (1.97%)
    • அளிக்கப்பட்ட வாக்குகள் 7,713,232 (70.52%)
  • இம்முடிவின் படி ஜனாதிபதியாகத் தெரிவாக குறைந்த பட்சமாகப் பெறவேண்டிய வாக்குகள் (செல்லுபடியான வாக்குகளில் 50% வீதத்துக்கும் அதிகமான வாக்குகள்)
  • 3,780,763
  • குறைந்த பட்ச வாக்குகளை விட சந்திரிக்கா குமாரதுங்க அவர்கள் பெற்ற மேலதிக வாக்குகள்
  • 928,442
  • இரண்டாம் இடத்தைப் பெற்ற வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க அவர்களை விட சந்திரிக்கா குமாரதுங்க அவர்கள் பெற்ற மேலதிக வாக்குகள்
  • 1,993,922

ஆதாரம்[தொகு]

  • 1981ம் ஆண்டு 15ம் இலக்க பாராளுமன்ற சட்டமூலம்

வெளி இணைப்புகள்[தொகு]