இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2000
![]() | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||
இலங்கை நாடாளுமன்றத்துக்கான அனைத்து 225 இருக்கைகளுக்கும் அரசு அமைக்க குறைந்தது 113 இடங்கள் தேவை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்களித்தோர் | 75.63% | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||
![]() வெற்றியாளர்கள். மமு நீலத்திலும் ஐதேக பச்சையிலும் காட்டப்பட்டுள்ளது. | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
2000 இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் இலங்கையின் 11வது நாடாளுமன்றத்திற்கு 225 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 2000, அக்டோபர் 8 இல் இடம்பெற்றது[1]. அரசுத்தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க 10வது நாடாளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலுக்கான அறிவித்தலை விடுத்தார்.
ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்த அரசுத்தலைவர் சந்திரிக்கா குமாரதுங்கவின் தலைமையிலான மக்கள் கூட்டணி அரசு மீது இம்முறை இரு முனைகளில் விமரிசனங்கள் முன்வைக்கப்பட்டன: ஈழப்போரில் விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற மோதல்களில் பல முனைகளில் தோல்வி, பொருளாதாரத்தில் மந்தநிலை ஆகியவையே அவையாகும்.
பல வன்முறைகளின் மத்தியில் தேர்தல்கள் இடம்பெற்றன. தேர்தல் காலத்தில் இடம்பெற்ற வன்முறைகளில் 70 பேர் வரை கொல்லப்பட்டனர். இவர்களில் ஆறு பேர் தேதல் நாலன்று கொல்லப்பட்டனர்.[2] எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு ஆகிய கட்சிகள் தேர்தல் முறைகேடுகளுக்கு ஆளும் கட்சியைக் குற்றம் சாட்டின. 1983 இஆம் ஆண்டுக்குப் பின்னர் நடந்த தேர்தல்களைப் போலவே இம்முறையும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே தேர்தல்களில் வாகக்ளித்தனர்.
முடிவுகள்[தொகு]
சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆளும் கூட்டணி வெற்றியைத் தக்க வைத்துக் கொண்டது. ஆனாலும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் 2001 இல் மீண்டும் தேர்தல் நடைபெற்றது.
கூட்டணிகளும் கட்சிகளும் | வாக்குகள் | % | இடங்கள் | |||||
---|---|---|---|---|---|---|---|---|
மாவட்டம் | தேசியப் பட்டியல் | மொத்தம் | ||||||
மக்கள் கூட்டணி
|
3,900,901 | 45.11 | 94 | 13 | 107 | |||
ஐக்கிய தேசியக் கட்சி
|
3,477,770 | 40.22 | 77 | 12 | 89 | |||
மக்கள் விடுதலை முன்னணி | 518,774 | 6.00 | 8 | 2 | 10 | |||
தமிழர் விடுதலைக் கூட்டணி | 106,033 | 1.23 | 5 | 0 | 5 | |||
முஸ்லிம் தேசிய ஐக்கியக் கூட்டணி | 197,983 | 2.29 | 3 | 1 | 4 | |||
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | 50,890 | 0.59 | 4 | 0 | 4 | |||
தமிழீழ விடுதலை இயக்கம் | 26,112 | 0.30 | 3 | 0 | 3 | |||
சிங்கள மரபு | 127,863 | 1.48 | 0 | 1 | 1 | |||
சுயேட்சை | 67,288 | 0.78 | 1 | 0 | 1 | |||
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் | 27,323 | 0.32 | 1 | 0 | 1 | |||
புதிய இடது முன்னணி | 32,275 | 0.37 | 0 | 0 | 0 | |||
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்1 | 23,013 | 0.27 | 0 | 0 | 0 | |||
சனநாயக மக்கள் விடுதலை முன்னணி | 20,848 | 0.24 | 0 | 0 | 0 | |||
ஏனையோர் | 70,595 | 0.82 | 0 | 0 | 0 | |||
செல்லுபடியான வாக்குகள் | 8,647,668 | 100.00 | 196 | 29 | 225 | |||
நிராகரிக்கப்பட்டவை | 481,155 | |||||||
மொத்த வாக்குகள் | 9,128,823 | |||||||
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் | 12,071,062 | |||||||
வாக்குவீதம் | 75.63% | |||||||
Source: இலங்கை தேர்தல் திணைக்களம் பரணிடப்பட்டது 2010-08-26 at Archive.today 1. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் குருனாகலை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் ஆளும் மக்கள் கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது, ஏனைய மாவட்டங்களில் தனித்துப் போட்டியிட்டது. 2. சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் ஆளும் மக்கள் கூட்டணியிலும், ஏனைய மாவட்டங்களில் முஸ்லிம் தேசிய ஐக்கியக் கூட்டமைப்பிலும் போட்டியிட்டது. |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "6th Parliament Dissolved". News and Events. இலங்கை நாடாளுமன்றம். 10 February 2010. 13 பெப்ரவரி 2010 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "id=392758". 2006-05-19 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-12-15 அன்று பார்க்கப்பட்டது. Missing pipe in:
|title=
(உதவி)
- "Parliamentary General Election 2000 – All Island Result Composition of Parliament". Department of Elections, Sri Lanka. 2010-08-26 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-12-15 அன்று பார்க்கப்பட்டது.
- "Parliamentary General Election 2000 – All Island Result". Department of Elections, Sri Lanka. 2012-12-19 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-12-15 அன்று பார்க்கப்பட்டது.
- "Parliamentary General Election 10.10.2000 – Final District Results". Department of Elections, Sri Lanka. 2012-08-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-12-15 அன்று பார்க்கப்பட்டது.
- "General Election 2000 Preferences" (PDF). Department of Elections, Sri Lanka. 2015-09-24 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2012-12-15 அன்று பார்க்கப்பட்டது.
- election2000.jsp "2000 General Election Results" Check
|url=
value (உதவி). LankaNewspapers.com. - "Table 41 Parliament Election (Electoral District) (2000)". Sri Lanka Statistics. 10 February 2009.
- 00.htm "Sri Lanka Parliamentary Chamber: Parliament Elections Held in 2000" Check
|url=
value (உதவி). Inter-Parliamentary Union. - "2000 - Parliamentary General Election". Manthree.com. 2014-09-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-12-15 அன்று பார்க்கப்பட்டது.
- "REPUBLIC OF SRI LANKA PARLIAMENTARY ELECTIONS OF 12 OCTOBER 2000". Psephos - Adam Carr's Election Archive.
- "REPUBLIC OF SRI LANKA PARLIAMENTARY ELECTIONS OF 12 OCTOBER 2000". Psephos - Adam Carr's Election Archive.