ஜனநாயக மக்கள் முன்னணி
| ஜனநாயக மக்கள் முன்னணி | |
|---|---|
| Democratic People's Front | |
| தலைவர் | மனோ கணேசன் |
| முன்னர் | மேலக மக்கள் முன்னணி |
| தலைமையகம் | 72 பாங்க்சால் வீதி, கொழும்பு 11 |
| தேசியக் கூட்டணி | தமிழ் முற்போக்கு கூட்டணி |
| தேர்தல் சின்னம் | |
| ஏணி | |
| இலங்கை அரசியல் | |
ஜனநாயக மக்கள் முன்னணி (Democratic People's Front, முன்னர் மேலக மக்கள் முன்னணி (Western People's Front), என்பது இலங்கையின் ஓர் அரசியல் கட்சி. இது முக்கியமாக மேற்கு மாகாணத்தில் மட்டுமே தேர்தல்களில் போட்டியிடுகிறது.[1]
மேலக மக்கள் முன்னணி ஆரம்பத்தில் ஒரு தொழிற்சங்கமாகவே ஆரம்பிக்கப்பட்டது, பின்னர் அரசியல்கட்சியாக மாற்றப்பட்டது. இக்கட்சி கொழும்பு மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்கள் இடையே பெரும் செல்வாக்குப் பெற்றுள்ளது. இக்கட்சியின் தலைவர் மனோ கணேசன்.
2011 உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள்
[தொகு]2011 இல் 322 உள்ளூராட்சி சபைகளுக்கு இடம்பெற்ற தேர்தல்களில் மகிந்த ராசபக்ச தலைமையில் ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணி 270 சபைகளைக் கைப்பற்றியது. மனோ கணேசன் தலைமையில் ஜனநாயக மக்கள் முன்னணி எந்த ஒரு சபையையும் கைப்பற்றவில்லை. ஆனாலும் 4 சபைகளில் போட்டியிட்டு 10 உறுப்பினர்களைப் பெற்றது. ஜனநாயக மக்கள் முன்னணியின் கூட்டணியில் விக்கிரமபாகு கருணாரத்தினவின் இடது முன்னணியும் போட்டியிட்டிருந்தது. கொழும்பு மாநகரச்பைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது முழுமையான ஆதரவை ஜனநாயக மக்கள் முன்னணிக்கு வழங்கியிருந்தது.
ஜமமு வென்ற உறுப்பினர்கள்
| உள்ளூராட்சி சபை |
வாக்குகள் | % | ஜமமு உறுப்பினர்களின் எண்ணிக்கை |
ஜமமு உறுப்பினர்களின் பெயர்களும் பெற்ற வாக்குகளும் | |
|---|---|---|---|---|---|
| கொழும்பு மாநகரசபை | 26,229 | 11.07% | 6 | மனோ கணேசன் (28,433) எஸ். குகவரதன் (4,223), கே. ரி. குருசாமி (3,978), கங்கைவேணியன் (3,389), சி. பாஸ்கரா (3,156), லோரன்ஸ் பெர்னாண்டோ (1,531) | |
| அம்பகமுவ பிரதேச சபை | 4,855 | 6.93% | 2 | விபரம் இல்லை | |
| தெகிவளை - கல்கிசை மாநகர சபை | 2,167 | 2.86% | 1 | விக்கிரமபாகு கருணாரத்தின (2,171) | |
| கொலன்னாவ நகர சபை | 938 | 3.9% | 1 | அரவிந்தன் முத்துவீரன் ராஜகுமாரன் (904) | |
| மொத்தம் | 34,189 | - | 10 | - | |
| மூலம்:"உள்ளூராட்சித் தேர்தல்கள், 2011". Department of Elections, Sri Lanka. Archived from the original on 2011-10-06. Retrieved 2011-10-18. | |||||
வெளி இணைப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ekanayake, Charudaththa (2017). Mapping Sri Lanka's Political Parties: Actors and Evolutions. Colombo: Verité Research. p. 30.