இலங்கை மாகாண சபைத் தேர்தல், நவம்பர் 1988

இலங்கை மாகாண சபைத் தேர்தல்கள் 1988 நவம்பர் 19 இல் இலங்கையில் புதிதாக உருவாக்கப்பட்ட வடகிழக்கு மாகாணசபைக்கு நடைபெற்றது.
பின்னணி
[தொகு]ஈழப்போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு, இலங்கை-இந்திய ஒப்பந்தம் 1987 அக்டோபர் 29 இல் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம் இலங்கை அரசு அதன் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதாகும்.[1] இதன் படி 1987 நவம்பர் 14 இல் இலங்கை நாடாளுமன்றம் தனது அரசியலமைப்பில் 13வது திருத்தம் மற்றும் மாகாணசபைச் சட்டம் இல. 42 (1987) ஆகியவற்றை அறிவித்தது.[2][3] 1988 பெப்ரவரி 3 ஆம் நாள் ஒன்பது மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன[4]. மாகாணசபைகளுக்கான முதலாவது தேர்தல்கள் 1988 ஏப்ரல் 28 ஆம் நாள் வடமத்திய, வடமேல், சபரகமுவா, மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களுக்கு இடம்பெற்றன.[5] 1988 சூன் 2 இல் மத்திய, தெற்கு, மற்றும் மேற்கு மாகாணங்களுக்கு தேர்தல்கள் நடத்தப்பட்டன. அன்று இலங்கையின் ஆளும் கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சி (ஐதேக) ஏழு மாகாணசபைகளினதும் ஆட்சியைக் கைப்பற்றியது.
இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் படி கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு நிருவாகத்தின் கீழ் கொண்டுவர இணக்கம் காணப்பட்டது. இவ்விணைப்பு நிரந்தர இணைப்பாக இருப்பதற்கு கிழக்கு மாகாணத்தில் 1988 திசம்பர் 31 இற்குள் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. ஆனாலும், இந்த பொது வாக்கெடுப்பை ஒத்திவைக்க இலங்கை அரசுத்தலைவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.[1] 1988 செப்டம்பர் 2 இல் அரசுத் தலைவர் ஜே. ஆர். ஜெயவர்தனா இரு மாகாணங்களையும் இணைத்து வடக்கு கிழக்கு மாகாண சபை என்ற ஒரு மாகாணசபையாக நிருவகிக்க உத்தரவு பிறப்பித்தார்.[4] இந்த இணைந்த மாகாணசபைக்கான தேர்தல் 1988 நவம்பர் 19 இல் நடத்தப்பட்டது. இந்தியாவின் ஆதரவில் இயங்கிய ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இத்தேர்தலில் வெற்றி பெற்றது. தமிழர் விடுதலைக் கூட்டணி இத்தேர்தலில் பங்கேற்கவில்லை.
முடிவுகள்
[தொகு]மேலோட்டமான முடிவுகள்
[தொகு]கட்சி | கிழக்கு | வடக்கு | மொத்தம் | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்குகள் | % | இடங்கள் | வாக்குகள் | % | இடங்கள் | வாக்குகள் | % | இடங்கள் | |
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி | 215,230 | 55.00% | 17 | 24 | 215,230 | 55.00% | 41 | ||
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு | 168,038 | 42.94% | 17 | 168,038 | 42.94% | 17 | |||
ஐக்கிய தேசியக் கட்சி | 8,056 | 2.06% | 1 | 8,056 | 2.06% | 1 | |||
ஈழ தேசிய சனநாயக விடுதலை முன்னணி | 12 | 12 | |||||||
மொத்தம் | 391,324 | 100.00% | 35 | 36 | 391,324 | 100.00% | 71 | ||
மூலம்:[6] |
திருகோணமலை மாவட்டம்
[தொகு]கட்சி | தொகுதிகள் வாரியாக வாக்குகள் | மொத்தம் வாக்குகள் | % | இடங்கள் | ||
---|---|---|---|---|---|---|
மூதூர் | சேருவிலை | திருகோணமலை | ||||
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி | 12,311 | 4,840 | 25,379 | 42,530 | 54.50% | 5 |
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு | 24,006 | 3,764 | 7,732 | 35,502 | 45.50% | 5 |
தகுதியான வாக்குகள் | 36,317 | 8,604 | 33,111 | 78,032 | 100.00% | 10 |
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 810 | 295 | 1,272 | 2,377 | ||
மொத்த வாக்குகள் | 37,127 | 8,899 | 34,383 | 80,409 | ||
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் | 48,570 | 47,693 | 56,026 | 152,289 | ||
வாக்குவீதம் (%) | 76.44% | 18.66% | 61.37% | 52.80% | ||
மூலம்:[6] |
மட்டக்களப்பு மாவட்டம்
[தொகு]கட்சி | தொகுதிகள் வாரியாக வாக்குகள் | மொத்தம் வாக்குகள் | % | இடங்கள் | ||
---|---|---|---|---|---|---|
மட்டக்களப்பு | கல்குடா | பட்டிருப்பு | ||||
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி | 46,006 | 32,546 | 48,394 | 126,946 | 74.76% | 8 |
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு | 29,594 | 12,331 | 175 | 42,100 | 24.79% | 3 |
ஐக்கிய தேசியக் கட்சி | 476 | 194 | 86 | 756 | 0.45% | 0 |
தகுதியான வாக்குகள் | 76,076 | 45,071 | 48,655 | 169,802 | 100.00% | 11 |
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 1,495 | 629 | 610 | 2,734 | ||
மொத்த வாக்குகள் | 77,571 | 45,700 | 49,265 | 172,536 | ||
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் | 100,536 | 60,288 | 56,452 | 217,276 | ||
வாக்குவீதம் (%) | 77.16% | 75.80% | 87.27% | 79.41% | ||
மூலம்:[6] |
அம்பாறை மாவட்டம்
[தொகு]கட்சி | தொகுதிகள் வாரியாக வாக்குகள் | மொத்தம் வாக்குகள் | % | இடங்கள் | |||
---|---|---|---|---|---|---|---|
அம்பாறை | கல்முனை | பொத்துவில் | சம்மாந்துறை | ||||
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு | 40 | 26,441 | 34,972 | 28,983 | 90,436 | 63.03% | 9 |
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி | 20 | 12,626 | 25,140 | 7,968 | 45,754 | 31.89% | 4 |
ஐக்கிய தேசியக் கட்சி | 5,338 | 111 | 1,704 | 147 | 7,300 | 5.09% | 1 |
தகுதியான வாக்குகள் | 5,398 | 39,178 | 61,816 | 37,098 | 143,490 | 100.00% | 14 |
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 219 | 460 | 932 | 1,020 | 2,631 | ||
மொத்த வாக்குகள் | 5,617 | 39,638 | 62,748 | 38,118 | 146,121 | ||
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் | 94,068 | 44,075 | 82,833 | 44,975 | 265,951 | ||
வாக்குவீதம் (%) | 5.97% | 89.93% | 75.75% | 84.75% | 54.94% | ||
மூலம்:[6] |
யாழ்ப்பாண மாவட்டம்
[தொகு]போட்டி எதுவும் இல்லாததால் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அனைத்து 19 இடங்களையும் கைப்பற்றியது.[6]
கிளிநொச்சி மாவட்டம்
[தொகு]போட்டி எதுவும் இல்லாததால் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அனைத்து 3 இடங்களையும் கைப்பற்றியது.[6]
மன்னார் மாவட்டம்
[தொகு]போட்டி எதுவும் இல்லாததால் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அனைத்து 5 இடங்களையும் கைப்பற்றியது.[6]
முல்லைத்தீவு மாவட்டம்
[தொகு]போட்டி எதுவும் இல்லாததால் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அனைத்து 5 இடங்களையும் கைப்பற்றியது.[6]
வவுனியா மாவட்டம்
[தொகு]போட்டி எதுவும் இல்லாததால் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அனைத்து 4 இடங்களையும் கைப்பற்றியது.[6]
தேர்தலின் பின்னர்
[தொகு]1988 டிசம்பர் 10 இல் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் அ. வரதராஜப் பெருமாள் வடகிழக்கு மாகாணசபையின் முதலாவது முதலமைச்சரானார்.[7]
1990 மார்ச்சு 1 அன்று, இந்திய அமைதி காக்கும் படையினர் இலங்கையை விட்டுப் புறப்படும் தறுவாயில், வடகிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் அ. வரதராஜப் பெருமாள் மாகாணசபைக் கூட்டத்தில் தமிழீழத்தைப் பிரகடனப்படுத்தி விட்டு அமைதிப் படையினருடன் சேர்ந்து இந்தியா சென்றார்.[8] இதனை அடுத்து அரசுத்தலைவர் பிரேமதாசா மாகாணசபையைக் கலைத்து, நடுவண் அரசின் நேரடி ஆட்சியைக் கொண்டு வந்தார்.
2006 சூலை 14-இல், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்புக்கு எதிராக தெற்குப் பகுதியில் நீண்ட காலம் இடம்பெற்று வந்த போராட்டங்களை அடுத்து, சிங்களத் தேசியவாத அரசியல் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி, வட, கிழக்கு மாகாணங்களைப் பிரிக்க உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.[4] 2006 அக்டோபர் 16 இல் வடகிழக்கு இணைப்பு செல்லுபடியாகாதென உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.[4] இதனை அடுத்து 2007 சனவரி 1-இல் இரு மாகாணங்களும் மீண்டும் பிரிக்கப்பட்டன.
2008 மே மாதம் வரை இரு மாகாணங்களும் இலங்கை நடுவண் அரசின் நேரடி நிருவாகத்தின் கீழ் இருந்து வந்தன. கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் 2008-ஆம் ஆண்டில் இடம்பெற்றது. வடக்கில் தேர்தல்கள் இடம்பெறவில்லை.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Indo Sri Lanka Agreement, 1987". TamilNation.
- ↑ "Introduction". Official Website of the Government of Sri Lanka. இலங்கை அரசு. Archived from the original on 2009-07-07. Retrieved 2013-07-20.
- ↑ "Amendments to the 1978 Constitution". Official Website of the Government of Sri Lanka. இலங்கை அரசு. Archived from the original on 2009-08-17. Retrieved 2013-07-20.
- ↑ 4.0 4.1 4.2 4.3 "North-East merger illegal: SC". LankaNewspapers.com. 17 October 2006. http://www.lankanewspapers.com/news/2006/10/8947.html.
- ↑ "Ethnic Conflict of Sri Lanka: Time Line - From Independence to 1999". International Centre for Ethnic Studies. Archived from the original on 12 December 2009. Retrieved 28 June 2009.
- ↑ 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 6.6 6.7 6.8 "Election Results". Tamil Times VIII (1): 4. December 1988. பன்னாட்டுத் தர தொடர் எண்:0266-4488.
- ↑ K T Rajasingham (20 April 2002). "Sri Lanka" The Untold Story". Asia Times. Archived from the original on 27 April 2002. Retrieved 28 June 2009.
- ↑ Ferdinando, Shamindra (10 செப்டம்பர் 2000). "I'm no traitor, says Perumal". ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 2009-05-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090501173226/http://www.priu.gov.lk/news_update/features/20000912no_traitor.htm.