கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.
இலங்கை அரசியல் வரலாற்றில் முதலாவது இலங்கை அரசுத் தலைவர் தேர்தல் (சனாதிபதித் தேர்தல்) 1982.அக்டோபர் 20ம் திகதி நடைபெற்றது. இத்தேர்தலின் நியமனப்பத்திரங்கள் 1982செப்டம்பர் 17ம் திகதி கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் காலை 8.00 மணி முதல் 11 மணிவரை தேர்தல் ஆணையாளர் திரு. சந்திரானந்த டி. சில்வா அவர்களினால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளினூடாக 6 வேட்பாளர்கள் நியமனப்பத்திரங்களைத் தாக்கல் செய்தனர்.
ஆகியோரும் சுயேட்சை வேட்பாளர்களாக நியமனப்பத்திரங்களை தாக்கல் செய்தனர். இருப்பினும் சட்ட ஏற்பாடுகளுக்கமைய இவர்களின் நியமனப் பத்திரங்கள் தேர்தல் ஆணையாளரினால் நிராகரிக்கப்பட்டன.
1982ம் ஆண்டு அரசுத் தலைவர் தேர்தலின் போது ஐக்கிய தேசியக்கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றுக்கிடையே போட்டி நிலவிய போதிலும்கூட மக்கள் மத்தியில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பு நிலையே மிகைத்திருந்தது.
இக்கால கட்டத்தில் இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவியும், முன்னாள் பிரதமருமான சிறிமாவோ பண்டாரநாயக்காவின் குடியுரிமை நீக்கப்பட்டிருந்தது. இதனால் அக்கட்சியின் வேட்பாளராக ஹெக்டர் கொப்பேகடுவ நிறுத்தப்பட்ட போதிலும் தேசிய ரீதியில் மக்கள் மத்தியில் பிரபலமற்றவராக இருந்தார்.
1970-77 இற்கிடைப்பட்ட இலங்கை சுதந்திரக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் கடைபிடிக்கப்பட்ட சோசலிசப் பொருளாதாரக் கொள்கையினால் நாட்டில் எதிர்நோக்கப்பட்ட பஞ்சநிலையின்போது பாதிப்புற்ற மக்கள் அக்கட்சியின் மீது அதிருப்தி நிலையில் இருந்தமையும், 1977ம் ஆண்டில் பதவிக்கு வந்த ஜே. ஆர். ஜெயவர்த்தனா அரசாங்கம் இலங்கையில் முன்வைத்திருந்த திறந்த பொருளாதாரக் கொள்கையினால் மக்கள் மத்தியில் ஏற்பட்ட கவர்ச்சி நிலைமையும், இலங்கை சுதந்திரக்கட்சி மீண்டும் பதவிக்கு வருமிடத்து 1970-1977க்கிடைப்பட்ட கால பஞ்சநிலை மீண்டும் தொடரலாம் என்ற அச்சநிலை காணப்பட்டது.
20 அக்டோபர் 1982 நடைபெற்ற 1வது இலங்கை அரசுத்தலைவர் தேர்தலில் அகில இலங்கை ரீதியாக வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த வாக்காளர் எண்ணிக்கை 8, 144, 015 ஆகும். ( அரசுத்தலைவர் தேர்தலின்போது இலங்கை பூராவும் ஒரு தொகுதியாகவே கருதப்படும்) இவர்களுள் 6, 602, 612 (81.06 %) வாக்காளர்கள் வாக்களித்த போதிலும்கூட, 6, 522, 147 (79.84 %) வாக்குகளே செல்லுடியான வாக்குகளாக இருந்தன. யாப்பு விதிகளுக்கிணங்க அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படக்கூடியவர் செல்லுபடியான வாக்குகளில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்றாக வேண்டும். அதாவது இத்தேர்தலில் 3, 261, 074 வாக்குகளுக்கு மேல் பெறுபவரே அரசுத்தலைவராக தெரிவு செய்யப்படுவர். ஜே. ஆர். ஜெயவர்த்தனா 3, 450, 811 வாக்குகளை அதாவது 52.91 சதவீத வாக்குகளை பெற்றதினால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரமிக்க சனாதிபதியாக 1983 பெப்ரவரி 04ம் திகதி மீளவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.