உள்ளடக்கத்துக்குச் செல்

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்
All Ceylon Tamil Congress
අකිල ඉලංකෙයි තමිල් කොංග්‍රස්
நிறுவனர்ஜி. ஜி. பொன்னம்பலம்
செயலாலர்கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தொடக்கம்29 ஆகத்து 1944 (82 ஆண்டுகள் முன்னர்) (1944-08-29)
தலைமையகம்15 இராணி வீதி, கொள்ளுப்பிட்டி, கொழும்பு 3
கொள்கைதமிழ்த் தேசியம்
தேசியக் கூட்டணிதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
நாடாளுமன்றம்
1 / 225
தேர்தல் சின்னம்
மிதிவண்டி
கட்சிக்கொடி
இலங்கை அரசியல்

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் (All Ceylon Tamil Congress) என்பது இலங்கையின் மிகப் பழமையான தமிழ் அரசியல் கட்சி ஆகும்.

வரலாறு

[தொகு]

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசுக் கட்சியை ஜி. ஜி. பொன்னம்பலம் 1944 ஆம் ஆண்டில் தொடங்கினார். பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் 50-50 பிரதிநிதித்துவத்தை (பெரும்பான்மை சிங்களவர்களுக்கு 50%, ஏனைய அனைத்து இனக்குழுக்களுக்கும் 50%) கோரினார்.[1] அன்றைய பிரித்தானிய ஆளுநர் சோல்பரி பிரபு "மக்களாட்சியைக் கேலி செய்வது" என்று இக்கோரிக்கையை நிராகரித்தார். காங்கிரசுக் கட்சி அன்றைய ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒத்துழைக்க முடிவு செய்ததால், சா. ஜே. வே. செல்வநாயகம் இக்கட்சியில் இருந்து 1940 ஆம் ஆண்டில் விலகி இலங்கைத் தமிழரசுக் கட்சியைத் தொடங்கினார். காங்கிரசின் கூட்டாளியான ஐக்கிய தேசியக் கட்சி இருமொழிக் கொள்கைகளிலிருந்து சிங்களவர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை நோக்கி நகர்ந்தபோது தமிழ்க் காங்கிரசுக் கட்சி பெருமளவில் மதிப்பிழந்தது. 1976 இல் தமிழ்க் காங்கிரசும் தமிழரசுக் கட்சியும் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற பெயரில் அரசியல் கூட்டணி ஒன்றைத் தொடங்கின.

2001 தேர்தல்களுக்கு முன்னதாக, விடுதலைப் புலிகளின் ஆதரவு பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தமிழ்க் காங்கிரசு இணைந்தது. 2004 தேர்தலில் ததேகூ நாடாளுமன்றத்தில் உள்ள 225 இடங்களில் 22 இடங்களை வென்றது. 2010 தேர்தலில் தமிழ்க் காங்கிரசு ததேகூ இலிருந்து வெளியேறி, புதிய அரசியல் கூட்டணியான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத் தொடங்கியது.

தலைவர்கள்

[தொகு]

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் தலைவர்களாக இருந்தவர்கள்:

தேர்தல் வரலாறு

[தொகு]

1947 நாடாளுமன்றத் தேர்தல்

[தொகு]

இலங்கை விடுதலை பெற்று நடைபெற்ற முதலாவது 1947 தேர்தலில், தமிழ்க் காங்கிரசுக் கட்சி நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 95 இடங்களில் 7 ஐக் கைப்பற்றியது.

தேர்தல் தொகுதிவாக்குகள்%இருக்கைகள்வாக்குவீதம்காங்கிரசு நா.உ.
சாவகச்சேரி11,81385.51%149.34%வே. குமாரசுவாமி
யாழ்ப்பாணம்14,32473.28%146.26%ஜி. ஜி. பொன்னம்பலம்
காங்கேசன்துறை12,12655.39%157.69%சா. ஜே. வே. செல்வநாயகம்
ஊர்காவற்றுறை5,23029.21%055.69%
கோப்பாய்9,61958.90%150.33%கு. வன்னியசிங்கம்
பருத்தித்துறை10,39643.51%158.39%தா. இராமலிங்கம்
திருகோணமலை5,25256.15%156.10%சுப்பிரமணியம் சிவபாலன்
வட்டுக்கோட்டை11,72161.24%152.00%கந்தையா கனகரத்தினம்
வவுனியா2,01833.39%055.64%
மொத்தம்82,4994.37%7
மூலம்:[2]

1952 நாடாளுமன்றத் தேர்தல்

[தொகு]

1952 தேர்தலில் தமிழ்க் காங்கிரசு கட்சி நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 95 இடங்களில் 4 ஐக் கைப்பற்றியது.

தேர்தல் தொகுதிவாக்குகள்%இருக்கைகள்வாக்குவீதம்காங்கிரசு நா.உ.
சாவகச்சேரி14,80172.33%167.22%வே. குமாரசுவாமி
யாழ்ப்பாணம்12,72660.48%171.66%ஜி. ஜி. பொன்னம்பலம்
ஊர்காவற்றுறை9,51743.44%173.36%அல்பிரட் தம்பிஐயா
கோப்பாய்9,20043.88%064.57%
பருத்தித்துறை11,60941.54%165.80%தா. இராமலிங்கம்
வட்டுக்கோட்டை5,26122.64%069.54%
வவுனியா1,39815.52%069.59%
மொத்தம்64,5122.77%4
மூலம்:[3]

1956 நாடாளுமன்றத் தேர்தல்

[தொகு]

1956 தேர்தலில் தமிழ்க் காங்கிரசு ஒரு இடத்தில் மட்டும் போட்டியிட்டது, தலைவர் ஜி. ஜி. பொன்னம்பலம் யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டு, 8,914 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[4]

1960 (மார்ச்) நாடாளுமன்றத் தேர்தல்

[தொகு]

மார்ச் 1960 தேர்தலில் தமிழ்க் காங்கிரசுக் கட்சி நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 151 இடங்களில் 1 இடத்தை மட்டும் கைப்பற்றியது.

தேர்தல் தொகுதிவாக்குகள்%இருக்கைகள்வாக்குவீதம்காங்கிரசு நா.உ.
சாவகச்சேரி6,93032.52%083.20%
யாழ்ப்பாணம்5,31230.56%071.91%
காங்கேசன்துறை1,4487.23%071.22%
கோப்பாய்4,93623.35%077.13%
நல்லூர்6,80834.82%073.12%
பருத்தித்துறை2,52117.91%073.33%
உடுப்பிட்டி7,36534.70%174.84%மு. சிவசிதம்பரம்
வட்டுக்கோட்டை2,95513.72%075.37%
மொத்தம்38,2751.32%1
மூலம்:[5]

1960 (சூலை) நாடாளுமன்றத் தேர்தல்

[தொகு]

சூலை 1960 தேர்தலில் தமிழ்க் காங்கிரசுக் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிட்டு நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 151 இடங்களில் 1 இடத்தை மட்டும் கைப்பற்றியது.[6] மு. சிவசிதம்பரம் உடுப்பிட்டித் தொகுதியில் போட்டியிட்டு 9,080 வாக்குகள் பெற்று மீண்டும் தெரிவானார்.

மேற்கோள்கள்

[தொகு]