உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கை மாகாண சபைத் தேர்தல், 1999

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலங்கை மாகாணசபைகளுக்கான 3வது தேர்தல்

← 1993 25 சனவரி 1999, 6 ஏப்ரல் 1999, 10 சூன் 1999 2004 →

7 மாகாண சபைகளுக்கு 380 இடங்கள்
  First party Second party
 
தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ரணில் விக்கிரமசிங்க
கட்சி மக்கள் கூட்டணி ஐக்கிய தேசியக் கட்சி
மொத்த வாக்குகள் 3,133,658 2,761,864
விழுக்காடு 46.88% 41.31%
உறுப்பினர்கள் 187 152
சபைகள் 2 0


1999 இலங்கை மாகாண சபைத் தேர்தல்கள் 1999 ஆம் ஆண்டில் சனவரி 25, ஏப்ரல் 6, சூன் 10 ஆகிய நாட்களில் நடைபெற்றன. இலங்கையின் ஏழு மாகாணசபைகளுக்கு உறுப்பினர்களைத் தேர்தெடுப்பதற்காக நடைபெற்றது. எட்டாவது மாகாணமான வடக்கு கிழக்கு மாகாண சபைக்குத் தேர்தல்கள் இடம்பெறவில்லை. இம்மாகாணசபை 1990 மார்ச்சு முதல் தேசிய நடுவண் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தது. இலங்கையின் ஆளும் மக்கள் கூட்டணி வடமத்திய, வடமேற்கு சபைகளைக் கைப்பற்றியது. ஏனைய ஐந்து மாகாணங்களிலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போன்ற சிறிய கட்சிகளின் ஆதரவுடன் மக்கள் கூட்டணி கைப்பற்றியது.

பின்னணி

[தொகு]

ஈழப்போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு, இலங்கை-இந்திய ஒப்பந்தம் 1987 அக்டோபர் 29 இல் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம் இலங்கை அரசு அதன் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதாகும்.[1] இதன் படி 1987 நவம்பர் 14 இல் இலங்கை நாடாளுமன்றம் தனது அரசியலமைப்பில் 13வது திருத்தம் மற்றும் மாகாணசபைச் சட்டம் இல. 42 (1987) ஆகியவற்றை அறிவித்தது.[2][3] 1988 பெப்ரவரி 3 ஆம் நாள் ஒன்பது மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன[4]. மாகாணசபைகளுக்கான முதலாவது தேர்தல்கள் 1988 ஏப்ரல் 28 ஆம் நாள் வடமத்திய, வடமேல், சபரகமுவா, மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களுக்கு இடம்பெற்றன.[5] 1988 சூன் 2 இல் மத்திய, தெற்கு, மற்றும் மேற்கு மாகாணங்களுக்கு தேர்தல்கள் நடத்தப்பட்டன. அன்று இலங்கையின் ஆளும் கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சி (ஐதேக) ஏழு மாகாணசபைகளினதும் ஆட்சியைக் கைப்பற்றியது.

இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் படி கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு நிருவாகத்தின் கீழ் கொண்டுவர இணக்கம் காணப்பட்டது. இவ்விணைப்பு நிரந்தர இணைப்பாக இருப்பதற்கு கிழக்கு மாகாணத்தில் 1988 திசம்பர் 31 இற்குள் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. ஆனாலும், இந்த பொது வாக்கெடுப்பை ஒத்திவைக்க இலங்கை அரசுத்தலைவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.[1] 1988 செப்டம்பர் 2 இல் அரசுத் தலைவர் ஜே. ஆர். ஜெயவர்தனா இரு மாகாணங்களையும் இணைத்து வடக்கு கிழக்கு மாகாண சபை என்ற ஒரு மாகாணசபையாக நிருவகிக்க உத்தரவு பிறப்பித்தார்.[4] இந்த இணைந்த மாகாணசபைக்கான தேர்தல் 1988 நவம்பர் 19 இல் நடத்தப்பட்டது. இந்தியாவின் ஆதரவில் இயங்கிய ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இத்தேர்தலில் வெற்றி பெற்றது. தமிழர் விடுதலைக் கூட்டணி இத்தேர்தலில் பங்கேற்கவில்லை.

1990, மார்ச்சு 1 அன்று, இந்திய அமைதி காக்கும் படையினர் இலங்கையை விட்டுப் புறப்படும் தறுவாயில், வடகிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் அ. வரதராஜப் பெருமாள் மாகாணசபைக் கூட்டத்தில் தமிழீழத்தைப் பிரகடனப்படுத்தி விட்டு அமைதிப் படையினருடன் சேர்ந்து இந்தியா சென்றார்.[6] இதனை அடுத்து அரசுத்தலைவர் பிரேமதாசா மாகாணசபையைக் கலைத்து, நடுவண் அரசின் நேரடி ஆட்சியைக் கொண்டு வந்தார்.

1993 ஆம் ஆண்டில் வட-கிழக்குத் தவிர்ந்த ஏழு மாகாணங்களுக்கு 2வது தேர்தல்கள் இடம்பெற்றன. ஆறு மாகாணங்களில் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. மேற்கு மாகாணசபையை முக்கிய எதிர்க்கட்சிக் கூட்டணியான மக்கள் கூட்டணி கைப்பற்றியது. தெற்கு மாகாணத்தில் ஐதேகவின் சில உறுப்பினர்கள் கட்சி மாறியதை அடுத்து அங்கு 1994 ஆம் ஆண்டில் சிறப்புத் தேர்தல் நடத்தப்பட்டது. மக்கள் கூட்டணி வெற்றி பெற்றது.

முடிவுகள்

[தொகு]

ஆளும் மக்கள் கூட்டணி வடமத்திய, வடமேற்கு சபைகளைக் கைப்பற்றியது. ஏனைய ஐந்து மாகாணங்களிலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போன்ற சிறிய கட்சிகளின் ஆதரவுடன் மக்கள் கூட்டணி கைப்பற்றியது.

மேலோட்டமான முடிவுகள்

[தொகு]
கட்சி / கூட்டணி வாக்குகள் % இடங்கள்
மக்கள் கூட்டணி1 3,133,658 46.88% 187
ஐக்கிய தேசியக் கட்சி 2,761,864 41.31% 152
மக்கள் விடுதலை முன்னணி 417,168 6.24% 25
தொழிலாளர் தேசிய ஒன்றியம் (இதொகா, DWC) 145,350 2.17% 9
மகாஜன எக்சத் பெரமுன 87,165 1.30% 3
புதிய இடது முன்னணி 63,578 0.95% 1
மலையக மக்கள் முன்னணி 25,369 0.38% 2
சுயேட்சைகள் 22,494 0.34% 0
முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி 10,051 0.15% 0
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு1 7,230 0.11% 1
இலங்கை லிபரல் கட்சி 5,329 0.08% 0
இலங்கை முன்னேற்ற முன்னணி 2,557 0.04% 0
சிங்கள மகாசம்மத பூமிபுத்ர கட்சி 1,540 0.02% 0
மக்கள் விடுதலை ஒற்றுமை முன்னணி 1,216 0.02% 0
மக்கள் விடுதலை முன்னணி 340 0.01% 0
செல்லுபடியான வாக்குகள் 6,684,909 100.00% 380
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்
மொத்த வாக்குகள்
பதிவு செய்த வாக்காளர்கள் 9,991,293
வாக்குவீதம்
1. சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு களுத்துறை மாவட்டத்தில் தனித்தும், ஏனைய மாவட்டங்களில் மக்கள் கூட்டணியுடன் இணைந்தும் போட்டியிட்டது.

மத்திய மாகாணம்

[தொகு]

1999 ஏப்ரல் 6 இல் நடந்த மத்திய மாகாணசபைத் தேர்தல் முடிவுகள்:

கட்சி / கூட்டணி கண்டி மாத்தளை நுவரெலியா கூடுதல்
இடங்கள்
மொத்தம்
வாக்குகள் % இடங்கள் வாக்குகள் % இடங்கள் வாக்குகள் % இடங்கள் வாக்குகள் % இடங்கள்
மக்கள் கூட்டணி 247,250 47.54% 95,115 51.38% 79,264 29.18% 2 421,629 43.17% 26
ஐக்கிய தேசியக் கட்சி 232,934 44.79% 70,705 38.20% 88,020 32.41% 391,659 40.10% 23
தொழிலாளர் தேசிய ஒன்றியம் (இதொகா) 16,954 3.26% 9,306 5.03% 69,441 25.57% 95,701 9.80% 6
மக்கள் விடுதலை முன்னணி 16,065 3.09% 1 8,010 4.33% 4,909 1.81% 28,984 2.97% 1
மலையக மக்கள் முன்னணி 22,896 8.43% 2 22,896 2.34% 2
மகாஜன எக்சத் பெரமுன 4,433 0.85% 1,453 0.78% 811 0.30% 6,697 0.69% 0
சுயேட்சைகள் 853 0.16% 516 0.28% 2,731 1.01% 4,100 0.42% 0
புதிய இடது முன்னணி 3,541 1.30% 3,541 0.36% 0
இலங்கை லிபரல் கட்சி 881 0.17% 881 0.09% 0
இலங்கை முன்னேற்ற முன்னணி 689 0.13% 689 0.07% 0
செல்லுபடியான வாக்குகள் 520,059 100.00% 185,105 100.00% 271,613 100.00% 2 976,777 100.00% 58
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 45,000 16,257 30,853 92,110
மொத்த வாக்குகள் 565,059 201,362 302,466 1,068,887
பதிவு செய்த வாக்காளர்கள் 780,232 281,089 391,585 1,452,906
வாக்குவீதம் 72.42% 71.64% 77.24% 73.57%

வடமத்திய மாகாணம்

[தொகு]

1999 ஏப்ரல் 6 இல் நடந்த வடமத்திய மாகாணசபைத் தேர்தல் முடிவுகள்:

கட்சி / கூட்டணி அனுராதபுரம் பொலன்னறுவை கூடுதல்
இடங்கள்
மொத்தம்
வாக்குகள் % இடங்கள் வாக்குகள் % இடங்கள் வாக்குகள் % இடங்கள்
மக்கள் கூட்டணி 156,291 54.09% 75,466 52.01% 2 231,757 53.39% 19
ஐக்கிய தேசியக் கட்சி 111,285 38.51% 60,022 41.37% 171,307 39.46% 12
மக்கள் விடுதலை முன்னணி 14,197 4.91% 8,498 5.86% 22,695 5.23% 2
புதிய இடது முன்னணி 4,259 1.47% 4,259 0.98% 0
மகாஜன எக்சத் பெரமுன 1,150 0.40% 394 0.27% 1,544 0.36% 0
சுயேட்சைகள் 861 0.30% 861 0.20% 0
முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி 798 0.28% 798 0.18% 0
இலங்கை லிபரல் கட்சி 388 0.27% 388 0.09% 0
சிங்கள மகாசம்மத பூமிபுத்ர கட்சி 334 0.23% 334 0.08% 0
இலங்கை முன்னேற்ற முன்னணி 131 0.05% 131 0.03% 0
செல்லுபடியான வாக்குகள் 288,972 100.00% 145,102 100.00% 2 434,074 100.00% 33
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 22,153 10,255 32,408
மொத்த வாக்குகள் 311,125 155,357 466,482
பதிவு செய்த வாக்காளர்கள் 448,098 217,318 665,416
வாக்குவீதம் 69.43% 71.49% 70.10%

வடமேல் மாகாணம்

[தொகு]

1999 சனவரி 25 இல் நடந்த வடமேற்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள்:

கட்சி / கூட்டணி குருநாகல் புத்தளம் கூடுதல்
இடங்கள்
மொத்தம்
வாக்குகள் % இடங்கள் வாக்குகள் % இடங்கள் வாக்குகள் % இடங்கள்
மக்கள் கூட்டணி 405,431 56.16% 20 160,722 56.97% 8 2 566,153 56.39% 30
ஐக்கிய தேசியக் கட்சி 273,892 37.94% 13 105,876 37.53% 6 379,768 37.82% 19
மக்கள் விடுதலை முன்னணி 31,221 4.32% 2 10,759 3.81% 1 41,980 4.18% 3
புதிய இடது முன்னணி 9,456 1.31% 0 3,361 1.19% 0 12,817 1.28% 0
முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி 971 0.13% 0 542 0.19% 0 1,513 0.15% 0
இலங்கை லிபரல் கட்சி 676 0.09% 0 202 0.07% 0 878 0.09% 0
சுயேட்சைகள் 309 0.04% 0 540 0.19% 0 849 0.08% 0
இலங்கை முன்னேற்ற முன்னணி 126 0.04% 0 126 0.01% 0
செல்லுபடியான வாக்குகள் 721,956 100.00% 35 282,128 100.00% 15 2 1,004,084 100.00% 52
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்
மொத்த வாக்குகள்
பதிவு செய்த வாக்காளர்கள் 960,241 398,055 1,358,296
வாக்குவீதம்

சபரகமுவா மாகாணம்

[தொகு]

1999 ஏப்ரல் 6 இல் நடந்த சபரகமுவா மாகாணசபைத் தேர்தல் முடிவுகள்:

கட்சி / கூட்டணி கேகாலை இரத்தினபுரி கூடுதல்
இடங்கள்
மொத்தம்
வாக்குகள் % இடங்கள் வாக்குகள் % இடங்கள் வாக்குகள் % இடங்கள்
மக்கள் கூட்டணி 165,041 47.70% 191,502 47.92% 2 356,543 47.82% 22
ஐக்கிய தேசியக் கட்சி 158,503 45.81% 175,912 44.02% 334,415 44.85% 19
மக்கள் விடுதலை முன்னணி 15,537 4.49% 1 17,200 4.30% 1 32,737 4.39% 2
தொழிலாளர் தேசிய ஒன்றியம் (இதொகா) 4,351 1.26% 7,586 1.90% 11,937 1.60% 1
புதிய இடது முன்னணி 5,047 1.26% 5,047 0.68% 0
மகாஜன எக்சத் பெரமுன 1,552 0.45% 1,624 0.41% 3,176 0.43% 0
இலங்கை லிபரல் கட்சி 983 0.28% 983 0.13% 0
சுயேட்சைகள் 592 0.15% 592 0.08% 0
இலங்கை முன்னேற்ற முன்னணி 194 0.05% 194 0.03% 0
செல்லுபடியான வாக்குகள் 345,967 100.00% 399,657 100.00% 2 745,624 100.00% 44
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 23,749 29,362 53,111
மொத்த வாக்குகள் 369,716 429,019 798,735
பதிவு செய்த வாக்காளர்கள் 528,107 584,998 1,113,105
வாக்குவீதம் 70.01% 73.34% 71.76%

தெற்கு மாகாணம்

[தொகு]

1999 சூன் 10 இல் நடந்த தெற்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள்:

கட்சி / கூட்டணி காலி அம்பாந்தோட்டை மாத்தறை கூடுதல்
இடங்கள்
மொத்தம்
வாக்குகள் % இடங்கள் வாக்குகள் % இடங்கள் வாக்குகள் % இடங்கள் வாக்குகள் % இடங்கள்
மக்கள் கூட்டணி 214,714 46.70% 11 89,483 39.11% 6 157,762 46.36% 8 2 461,959 44.90% 27
ஐக்கிய தேசியக் கட்சி 188,921 41.09% 9 82,786 36.19% 5 130,843 38.45% 7 402,550 39.13% 21
மக்கள் விடுதலை முன்னணி 38,817 8.44% 2 47,296 20.67% 3 40,276 11.84% 2 126,389 12.28% 7
சுயேட்சைகள் 5,120 1.11% 0 2,824 1.23% 0 6,041 1.78% 0 13,985 1.36% 0
புதிய இடது முன்னணி 4,981 1.08% 0 4,869 2.13% 0 2,906 0.85% 0 12,756 1.24% 0
மகாஜன எக்சத் பெரமுன 5,496 1.20% 0 1,044 0.46% 0 1,160 0.34% 0 7,700 0.75% 0
மக்கள் விடுதலை ஒற்றுமை முன்னணி 444 0.10% 0 324 0.14% 0 448 0.13% 0 1,216 0.12% 0
இலங்கை லிபரல் கட்சி 340 0.07% 0 150 0.07% 0 298 0.09% 0 788 0.08% 0
முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி 739 0.16% 0 739 0.07% 0
சிங்கள மகாசம்மத பூமிபுத்ர கட்சி 399 0.12% 0 399 0.04% 0
மக்கள் விடுதலை முன்னணி 197 0.04% 0 143 0.04% 0 340 0.03% 0
செல்லுபடியான வாக்குகள் 459,769 100.00% 22 228,776 100.00% 14 340,276 100.00% 17 2 1,028,821 100.00% 55
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்
மொத்த வாக்குகள்
பதிவு செய்த வாக்காளர்கள் 652,734 342,498 510,310 1,505,542

ஊவா மாகாணம்

[தொகு]

1999 ஏப்ரல் 6 இல் நடந்த ஊவா மாகாணசபைத் தேர்தல் முடிவுகள்:

கட்சி / கூட்டணி பதுளை மொனராகலை கூடுதல்
இடங்கள்
மொத்தம்
வாக்குகள் % இடங்கள் வாக்குகள் % இடங்கள் வாக்குகள் % இடங்கள்
மக்கள் கூட்டணி 140,293 44.69% 66,870 45.35% 2 207,163 44.90% 17
ஐக்கிய தேசியக் கட்சி 137,437 43.78% 65,340 44.31% 202,777 43.95% 14
மக்கள் விடுதலை முன்னணி 12,106 3.86% 10,292 6.98% 22,398 4.85% 2
தொழிலாளர் தேசிய ஒன்றியம் (இதொகா) 19,224 6.12% 1,927 1.31% 21,151 4.58% 1
மகாஜன எக்சத் பெரமுன 1,980 0.63% 419 0.28% 2,399 0.52% 0
மலையக மக்கள் முன்னணி 2,473 0.79% 2,473 0.54% 0
புதிய இடது முன்னணி 2,182 1.48% 2,182 0.47% 0
சுயேட்சைகள் 407 0.13% 374 0.25% 781 0.17% 0
இலங்கை முன்னேற்ற முன்னணி 50 0.03% 50 0.01% 0
செல்லுபடியான வாக்குகள் 313,920 100.00% 147,454 100.00% 2 461,374 100.00% 34
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 29,396 13,976 43,372
மொத்த வாக்குகள் 343,316 161,430 504,746
பதிவு செய்த வாக்காளர்கள் 454,913 224,077 678,990
வாக்குவீதம் 75.47% 72.04% 74.34%

மேற்கு மாகாணம்

[தொகு]

1999 ஏப்ரல் 6 இல் நடந்த மேற்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள்:

கட்சி / கூட்டணி கொழும்பு கம்பகா களுத்துறை கூடுதல்
இடங்கள்
மொத்தம்
வாக்குகள் % இடங்கள் வாக்குகள் % இடங்கள் வாக்குகள் % இடங்கள் வாக்குகள் % இடங்கள்
மக்கள் கூட்டணி 313,576 38.98% 17 376,176 48.30% 17 198,702 44.08% 10 2 888,454 43.68% 46
ஐக்கிய தேசியக் கட்சி 362,636 45.07% 19 317,698 40.79% 15 199,054 44.16% 10 879,388 43.23% 44
மக்கள் விடுதலை முன்னணி 55,361 6.88% 3 58,277 7.48% 3 28,347 6.29% 2 141,985 6.98% 8
மகாஜன எக்சத் பெரமுன 43,008 5.35% 2 15,492 1.99% 1 7,149 1.59% 0 65,649 3.23% 3
புதிய இடது முன்னணி 9,140 1.14% 1 8,409 1.08% 0 5,427 1.20% 0 22,976 1.13% 1
தொழிலாளர் தேசிய ஒன்றியம் (DWC) 12,510 1.55% 1 4,051 0.90% 0 16,561 0.81% 1
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு 7,230 1.60% 1 7,230 0.36% 1
முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி 5,087 0.63% 0 1,347 0.17% 0 567 0.13% 0 7,001 0.34% 0
இலங்கை லிபரல் கட்சி 1,411 0.18% 0 1,411 0.07% 0
இலங்கை முன்னேற்ற முன்னணி 495 0.06% 0 663 0.09% 0 209 0.05% 0 1,367 0.07% 0
சுயேட்சைகள் 1,326 0.16% 0 1,326 0.07% 0
சிங்கள மகாசம்மத பூமிபுத்ர கட்சி 807 0.10% 0 807 0.04% 0
செல்லுபடியான வாக்குகள் 804,550 100.00% 43 778,869 100.00% 36 450,736 100.00% 23 2 2,034,155 100.00% 104
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 50,435 48,262 28,441 127,138
மொத்த வாக்குகள் 854,985 827,131 479,177 2,161,293
பதிவு செய்த வாக்காளர்கள் 1,326,487 1,213,589 676,962 3,217,038
வாக்குவீதம் 64.45% 68.16% 70.78% 67.18%

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Indo Sri Lanka Agreement, 1987". TamilNation.
  2. "Introduction". Official Website of the Government of Sri Lanka. இலங்கை அரசு. Archived from the original on 2009-07-07. பார்க்கப்பட்ட நாள் 2013-07-20.
  3. "Amendments to the 1978 Constitution". Official Website of the Government of Sri Lanka. இலங்கை அரசு. Archived from the original on 2009-08-17. பார்க்கப்பட்ட நாள் 2013-07-20.
  4. 4.0 4.1 "North-East merger illegal: SC". LankaNewspapers.com. 17 October 2006. http://www.lankanewspapers.com/news/2006/10/8947.html. 
  5. database/ethnic conflict/time line.shtml "Ethnic Conflict of Sri Lanka: Time Line - From Independence to 1999". International Centre for Ethnic Studies9. {{cite web}}: Check |url= value (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  6. Ferdinando, Shamindra (10 செப்டம்பர் 2000). "I'm no traitor, says Perumal". ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 2009-05-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090501173226/http://www.priu.gov.lk/news_update/features/20000912no_traitor.htm.