புத்தளம் தேர்தல் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
புத்தளம்
இலங்கைத் தேர்தல் மாவட்டம்
மாகாணம் வடமேற்கு
நிருவாக
மாவட்டங்கள்
புத்தளம்
தேர்தல்
தொகுதிகள்
5
வாக்காளர்கள் 495,575[1] (2010)
மக்கள்தொகை 760,000[2] (2008)
பரப்பளவு 3,072 கிமீ2[3]
உறுப்பினர்களின்
எண்ணிக்கை
8
உறுப்பினர்கள் பாலித ரங்கேபண்டார, ஐதேமு
அருந்திக்க பெர்னாண்டோ, ஐமசுகூ
மில்ரோய் பெர்னாண்டோ, ஐமசுகூ
பியங்கரா ஜயரத்ன, ஐமசுகூ
நிரோஷன் பெரேரா, ஐதேமு
நியோமல் பெரேரா, ஐமசுகூ
விக்டர் அந்தோனி பெரேரா, ஐமசுகூ
தயாசிரித திசேரா, ஐமசுகூ

புத்தளம் தேர்தல் மாவட்டம் (Puttalam electoral district) எனப்படுவது இலங்கையின் 1978 அரசியலமைப்பின் படி அமைக்கப்பட்ட 22 தேர்தல் மாவட்டங்களில் ஒன்றாகும். இலங்கை நாடாளுமன்றம், மாகாணசபைகள் போன்றவற்றுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு புவியியல் அலகு. இத்தேர்தல் மாவட்டம் வடமேல் மாகாணத்தின் புத்தளம் நிருவாக மாவட்டத்தை மட்டும் உள்ளடக்கிய அலகாகும். 225 இருக்கைகள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்திற்கு இத்தேர்தல் மாவட்டத்தில் இருந்து 8 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். இம்மாவட்டத்தில் 2010 ஆம் ஆண்டில் 495,575 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றனர்.[1]

தேர்தல் தொகுதிகள்[தொகு]

புத்தளம் தேர்தல் மாவட்டத்தில் அமைந்துள்ள தேர்தல் தொகுதிகள் பின்வருமாறு:

  1. ஆனைமடு தேர்தல் தொகுதி
  2. சிலாபம் தேர்தல் தொகுதி
  3. நாத்தாண்டியா தேர்தல் தொகுதி
  4. புத்தளம் தேர்தல் தொகுதி
  5. வென்னப்புவை தேர்தல் தொகுதி

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Presidential Election - 2010 Badulla District". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  2. "Estimated mid year population by district, 2004 – 2008". Statistical Abstract 2009. Department of Census and Statistics, Sri Lanka.
  3. "Area of Sri Lanka by province and district". Statistical Abstract 2009. Department of Census and Statistics, Sri Lanka.