அம்பாந்தோட்டை தேர்தல் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்பாந்தோட்டை
இலங்கைத் தேர்தல் மாவட்டம்
மாகாணம் தெற்கு
நிருவாக
மாவட்டங்கள்
அம்பாந்தோட்டை
தேர்தல்
தொகுதிகள்
4
வாக்காளர்கள் 421,186[1] (2010)
மக்கள்தொகை 558,000[2] (2008)
பரப்பளவு 2,609 கிமீ2[3]
உறுப்பினர்களின்
எண்ணிக்கை
7
உறுப்பினர்கள் மஹிந்த அமரவீர, ஐமசுகூ
பி. கே. இந்திக்க, ஐமசுகூ
சஜித் பிரேமதாச, ஐதேமு
சமல் ராஜபக்ச, ஐமசுகூ
நாமல் ராசபக்ச, ஐமசுகூ
நிருபமா ராஜபக்ச, ஐமசுகூ
திலீப் வெதாராச்சி, ஐதேமு

அம்பாந்தோட்டை தேர்தல் மாவட்டம் (Hambantota electoral district) எனப்படுவது இலங்கையின் 1978 அரசியலமைப்பின் படி அமைக்கப்பட்ட 22 தேர்தல் மாவட்டங்களில் ஒன்றாகும். இலங்கை நாடாளுமன்றம், மாகாணசபைகள் போன்றவற்றுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு புவியியல் அலகு. இத்தேர்தல் மாவட்டம் தென் மாகாணத்தின் அம்பாந்தோட்டை நிருவாக மாவட்டத்தை மட்டும் உள்ளடக்கிய அலகாகும். 225 இருக்கைகள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்திற்கு இத்தேர்தல் மாவட்டத்தில் இருந்து 7 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். இம்மாவட்டத்தில் 2010 ஆம் ஆண்டில் 421,186 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றனர்.[1]

தேர்தல் தொகுதிகள்[தொகு]

அம்பாந்தோட்டை தேர்தல் மாவட்டத்தில் அமைந்துள்ள தேர்தல் தொகுதிகள் பின்வருமாறு:

  1. பெலியத்தை தேர்தல் தொகுதி
  2. முல்கிரிகலை தேர்தல் தொகுதி
  3. தங்காலை தேர்தல் தொகுதி
  4. திசமகராமை தேர்தல் தொகுதி

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Presidential Election - 2010 Badulla District". இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original on 2010-01-28. பார்க்கப்பட்ட நாள் 2013-01-18.
  2. "Estimated mid year population by district, 2004 – 2008" (PDF). Statistical Abstract 2009. Department of Census and Statistics, Sri Lanka.
  3. "Area of Sri Lanka by province and district" (PDF). Statistical Abstract 2009. Department of Census and Statistics, Sri Lanka.