காலி தேர்தல் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
காலி
இலங்கைத் தேர்தல் மாவட்டம்
மாகாணம் தெற்கு மாகாணம்
நிருவாக
மாவட்டங்கள்
காலி
தேர்தல்
தொகுதிகள்
10
வாக்காளர்கள் 761,815[1] (2010)
மக்கள்தொகை 1,063,000[2] (2008)
பரப்பளவு 1,652 கிமீ2[3]
உறுப்பினர்களின்
எண்ணிக்கை
10
உறுப்பினர்கள் பியசேன கமகே, ஐமசுகூ
சஜின் டி வாஸ் குணவர்தன, ஐமசுகூ
கயந்த கருணாதிலக்க, ஐதேமு
அஜித் குமார, ஜதேகூ
நிசாந்த முத்துகெட்டிகம, ஐமசுகூ
மனுசா நாணயக்கார, ஐக்கிய தேசிய முன்னணி
ரமேஷ் பத்திரான, ஐமசுகூ
மொகான் பிரியதர்சன சில்வா, ஐமசுகூ
சந்திமா வீரக்கொடி, ஐமசுகூ
குணரத்தின வீரக்கூன், ஐமசுகூ

காலி தேர்தல் மாவட்டம் (Galle electoral district) எனப்படுவது இலங்கையின் 1978 அரசியலமைப்பின் படி அமைக்கப்பட்ட 22 தேர்தல் மாவட்டங்களில் ஒன்றாகும். இலங்கை நாடாளுமன்றம், மாகாணசபைகள் போன்றவற்றுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு புவியியல் அலகு. இத்தேர்தல் மாவட்டம் தெற்கு மாகாணத்தின் காலி நிருவாக மாவட்டத்தை மட்டும் உள்ளடக்கிய அலகாகும். 225 இருக்கைகள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்திற்கு இத்தேர்தல் மாவட்டத்தில் இருந்து 10 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். இம்மாவட்டத்தில் 2010 ஆம் ஆண்டில் 761,815 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றனர்.[1]

தேர்தல் தொகுதிகள்[தொகு]

காலி தேர்தல் மாவட்டத்தில் அமைந்துள்ள தேர்தல் தொகுதிகள் பின்வருமாறு:

  1. அக்மீமன தேர்தல் தொகுதி
  2. அம்பலாங்கொடை தேர்தல் தொகுதி
  3. பத்தேகமை தேர்தல் தொகுதி
  4. பலப்பிட்டி தேர்தல் தொகுதி
  5. பெந்தாரை எல்ப்பிட்டிய தேர்தல் தொகுதி
  6. காலி தேர்தல் தொகுதி
  7. அபரதுவ தேர்தல் தொகுதி
  8. இனிதும தேர்தல் தொகுதி
  9. கரந்தெனிய தேர்தல் தொகுதி
  10. ரத்கமை தேர்தல் தொகுதி

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Presidential Election - 2010 Badulla District". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  2. "Estimated mid year population by district, 2004 – 2008". Statistical Abstract 2009. Department of Census and Statistics, Sri Lanka.
  3. "Area of Sri Lanka by province and district". Statistical Abstract 2009. Department of Census and Statistics, Sri Lanka.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காலி_தேர்தல்_மாவட்டம்&oldid=1371362" இருந்து மீள்விக்கப்பட்டது