இலங்கை மாகாண சபைத் தேர்தல்கள், 2014

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
6வது இலங்கை மாகாணசபைத் தேர்தல்

← 2013 29 மார்ச் 2014

2 மாகாணசபைகளுக்கு 159 இடங்கள்
வாக்களித்தோர்66.35%
  First party Second party
 
தலைவர் மகிந்த ராசபக்ச ரணில் விக்கிரமசிங்க
கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி ஐக்கிய தேசியக் கட்சி
மொத்த வாக்குகள் 2,063,083 990,113
விழுக்காடு 54.86% 26.33%
உறுப்பினர்கள் 89 42
சபைகள் 2 0

2014 மாகாணசபைத் தேர்தல்கள் (2014 Provincial Council elections) இலங்கையின் மேற்கு மற்றும் தெற்கு ஆகிய இரண்டு மாகாண சபைகளுக்கு 159 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2014 மார்ச் 29 இல் நடைபெற்றன. 5.9 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றனர்.[1] இலங்கை மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் படிநிலையில் நடைபெற்று வருகின்றன. இவ்வகையில் இவ்விரண்டு மாகாண சபைகளும் 2014 சனவரி மாதத்தில் கலைக்கப்பட்டன. ஊவா மாகாணத்திற்கான தேர்தல் 2014 செப்டம்பர் 20 இல் நடத்தப்பட்டது. ஏனைய ஆறு சபைகளின் தேர்தல்கள் 2012, 2013 ஆம் ஆண்டுகளில் நடைபெற்றன.

மத்தியில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (ஐமசுக) எதிர்பார்த்தது போல தெற்கு, மற்றும் மேற்கு மாகாணசபைகளைக் கைப்பற்றியது. ஆனாலும், மேல் மாகாணசபையில் ஐமசுக, மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவை பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளன. சிறிய கட்சிகளான மக்கள் விடுதலை முன்னணி, சனநாயகக் கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியன தமது வாக்குகளை அதிகரித்திருந்தன.

பின்புலம்[தொகு]

ஈழப்போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு, இலங்கை-இந்திய ஒப்பந்தம் 1987 அக்டோபர் 29 இல் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம் இலங்கை அரசு அதன் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதாகும்.[2] இதன்படி 1987 நவம்பர் 14 இல் இலங்கை நாடாளுமன்றம் தனது அரசியலமைப்பில் 13வது திருத்தம் மற்றும் மாகாணசபைச் சட்டம் இல. 42 (1987) ஆகியவற்றை அறிவித்தது.[3][4] 1988 பெப்ரவரி 3 ஆம் நாள் ஒன்பது மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன[5].

முடிவுகள்[தொகு]

மொத்தம்[தொகு]

மத்தியில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி தெற்கு மற்றும் மேற்கு மாகாணசபைகளைக் கைப்பற்றியது.

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள் சபைகள்
  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 2,063,083 54.86% 89 2
  ஐக்கிய தேசியக் கட்சி 990,113 26.33% 42 0
சனநாயகக் கட்சி 279,299 7.43% 12 0
  மக்கள் விடுதலை முன்னணி 265,240 7.05% 11 0
ஜனநாயக மக்கள் முன்னணி 51,000 1.36% 2 0
  சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு[8] 50,934 1.35% 2 0
அகில இலங்கை மக்கள் காங்கிரசு[6] 15,491 0.41% 1 0
  Independents 18,283 0.49% 0 0
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்[7] 8,216 0.22% 0 0
ஐக்கிய இலங்கை மக்கள் கட்சி 3,696 0.10% 0 0
ஜன செத்த பெரமுன 3,176 0.08% 0 0
தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி 2,084 0.06% 0 0
ஐக்கிய இலங்கை பாரிய பேரவை 2,065 0.05% 0 0
புதிய சனநாயக முன்னணி 1,696 0.05% 0 0
  நவ சமசமாஜக் கட்சி 1,387 0.04% 0 0
ஐக்கிய சோசலிசக் கட்சி 1,343 0.04% 0 0
இலங்கை மக்கள் கட்சி 854 0.02% 0 0
நமது தேசிய முன்னணி 649 0.02% 0 0
இலங்கை தொழிற் கட்சி 569 0.02% 0 0
அனைவரும் குடிமக்கள், அனைவரும் அரசர்கள் அமைப்பு 375 0.01% 0 0
ஐக்கிய அமைதி முன்னணி 292 0.01% 0 0
புதிய சிங்கள மரபு 245 0.01% 0 0
சோசலிச சமத்துவக் கட்சி 220 0.01% 0 0
லிபரல் கட்சி 155 0.00% 0 0
தாய்நாடு 136 0.00% 0 0
செல்லுபடியான வாக்குகள் 3,760,601 100.00% 159 2
நிராகரிக்கப்பட்டவை 161,011
மொத்த வாக்குகள் 3,921,612
பதிவு செய்ய்யப்பட்ட வாக்காளர்கள் 5,910,877
வாக்கு வீதம் 66.35%

மேற்கு மாகாணம்[தொகு]

6வது மேல் மாகாணசபை தேர்தல் 2014 March 29 இல் நடைபெற்றது:[9]

கூட்டணிகளும் கட்சிகளும் கொழும்பு கம்பகா களுத்துறை கூடுதல்
இடங்கள்
மொத்தம்
வாக்குகள் % இடங்கள் வாக்குகள் % இடங்கள் வாக்குகள் % இடங்கள் வாக்குகள் % இடங்கள்
  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 443,083 45.33% 18 582,668 57.98% 23 337,924 58.91% 13 2 1,363,675 53.35% 56
  ஐக்கிய தேசியக் கட்சி 285,538 29.21% 12 249,220 24.80% 10 144,924 25.26% 6 0 679,682 26.59% 28
சனநாயகக் கட்சி 71,525 7.32% 3 88,557 8.81% 4 43,685 7.62% 2 0 203,767 7.97% 9
  மக்கள் விடுதலை முன்னணி 74,437 7.62% 3 56,405 5.61% 2 25,366 4.42% 1 0 156,208 6.11% 6
ஜனநாயக மக்கள் முன்னணி 44,156 4.52% 2 6,844 0.68% 0 0 51,000 2.00% 2
  சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு 20,163 2.06% 1 17,296 1.72% 1 12,056 2.10% 0 0 49,515 1.94% 2
அகில இலங்கை மக்கள் காங்கிரசு 15,491 1.58% 1 0 15,491 0.61% 1
  சுயேட்சைகள் 12,776 1.31% 0 1,042 0.10% 0 2,295 0.40% 0 0 16,113 0.63% 0
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 3,885 0.40% 0 4,331 0.75% 0 0 8,216 0.32% 0
ஜன செத பெரமுன 967 0.10% 0 831 0.08% 0 1,011 0.18% 0 0 2,809 0.11% 0
ஐக்கிய இலங்கை மக்கள் கட்சி 1,283 0.13% 0 535 0.05% 0 255 0.04% 0 0 2,073 0.08% 0
தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி 797 0.08% 0 395 0.04% 0 292 0.05% 0 0 1,484 0.06% 0
  நவ சமசமாசக் கட்சி 1,061 0.11% 0 229 0.02% 0 0 1,290 0.05% 0
ஐக்கிய இலங்கை பெரும் பேரவை 256 0.03% 0 530 0.05% 0 344 0.06% 0 0 1,130 0.04% 0
புதிய சனநாயக முன்னணி 1,046 0.11% 0 0 1,046 0.04% 0
ஐக்கிய சோசலிசக் கட்சி 739 0.13% 0 0 739 0.03% 0
அனைவரும் குடிமக்கள், அனைவரும் அரசர்கள் அமைப்பு 375 0.07% 0 0 375 0.01% 0
இலங்கை தொழிற் கட்சி 120 0.01% 0 155 0.02% 0 56 0.01% 0 0 331 0.01% 0
நமது தேசிய முன்னணி 330 0.03% 0 0 330 0.01% 0
ஐக்கிய அமைதி முன்னணி 292 0.03% 0 0 292 0.01% 0
புதிய சிங்கள மரபு 245 0.02% 0 0 245 0.01% 0
சோசலிச சமத்துவக் கட்சி 220 0.02% 0 0 220 0.01% 0
செல்லுபடியான வாக்குகள் 977,426 100.00% 40 1,004,952 100.00% 40 573,653 100.00% 22 2 2,556,031 100.00% 104
நிராகரிக்கப்பட்டவை 43,762 40,713 28,810 113,285
மொத்த வாக்குகள் 1,021,188 1,045,665 602,463 2,669,316
பதிவு செய்த வாக்காளர்கள் 1,552,734 1,590,076 881,814 4,024,624
வாக்கு வீதம் 65.77% 65.76% 68.32% 66.32%

தென் மாகாணம்[தொகு]

7வது தென் மாகாணசபைக்கான தேர்தல் 29 மார்ச் 2014 இல் நடைபெற்றது:[10]

கூட்டணிகளும் கட்சிகளும் காலி அம்பாந்தோட்டை மாத்தறை மேலதிக
இடங்கள்
மொத்தம்
வாக்குகள் % இடங்கள் வாக்குகள் % இடங்கள் வாக்குகள் % இடங்கள் வாக்குகள் % இடங்கள்
  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 293,619 57.58% 13 174,687 57.42% 8 231,102 59.19% 10 2 699,408 58.06% 33
  ஐக்கிய தேசியக் கட்சி 134,305 26.34% 6 79,829 26.24% 4 96,297 24.66% 4 0 310,431 25.77% 14
  மக்கள் விடுதலை முன்னணி 30,529 5.99% 1 39,345 12.93% 2 39,158 10.03% 2 0 109,032 9.05% 5
சனநாயகக் கட்சி 45,484 8.92% 2 9,547 3.14% 0 20,501 5.25% 1 0 75,532 6.27% 3
  சுயேட்சை 1,277 0.25% 0 277 0.09% 0 616 0.16% 0 0 2,170 0.18% 0
ஐக்கிய இலங்கை மக்கள் கட்சி 1,241 0.24% 0 175 0.06% 0 207 0.05% 0 0 1,623 0.13% 0
  சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு 1,419 0.36% 0 0 1,419 0.12% 0
ஐக்கிய இலங்கை பாரிய பேரவை 611 0.12% 0 156 0.05% 0 168 0.04% 0 0 935 0.08% 0
இலங்கை மக்கள் கட்சி 854 0.17% 0 0 854 0.07% 0
புதிய சனநாயக முன்னணி 425 0.08% 0 225 0.06% 0 0 650 0.05% 0
ஐக்கிய சோசலிசக் கட்சி 604 0.12% 0 0 604 0.05% 0
தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி 366 0.07% 0 95 0.03% 0 139 0.04% 0 0 600 0.05% 0
ஜன செத பெரமுன 172 0.03% 0 100 0.03% 0 95 0.02% 0 0 367 0.03% 0
நமது தேசிய முன்னணி 319 0.08% 0 0 319 0.03% 0
இலங்கை தொழிற் கட்சி 183 0.04% 0 41 0.01% 0 14 0.00% 0 0 238 0.02% 0
லிபரல் கட்சி 84 0.02% 0 71 0.02% 0 0 155 0.01% 0
தாய்நாடு 136 0.03% 0 0 136 0.01% 0
  நவ சமசமாஜக் கட்சி 97 0.02% 0 0 97 0.01% 0
செல்லுபடியான வாக்குகள் 509,890 100.00% 22 304,252 100.00% 14 390,428 100.00% 17 2 1,204,570 100.00% 55
நிராகரிக்கப்பட்டவை 21,135 10,879 15,712 47,726
மொத்த வாக்குகள் 531,025 315,131 406,140 1,252,296
பதிவு செய்த வாக்காளர்கள் 809,882 467,847 608,524 1,886,253
வாக்குவீதம் 65.57% 67.36% 66.74% 66.39%

மேற்கோள்கள்[தொகு]


  1. இலங்கைத் தேர்தல் திணைக்களம்[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Indo Sri Lanka Agreement, 1987". TamilNation.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Introduction". Official Website of the Government of Sri Lanka. இலங்கை அரசு. Archived from the original on 2009-07-07. பார்க்கப்பட்ட நாள் 2014-04-24.
  4. "Amendments to the 1978 Constitution". Official Website of the Government of Sri Lanka. இலங்கை அரசு. Archived from the original on 2009-08-17. பார்க்கப்பட்ட நாள் 2014-04-24.
  5. "North-East merger illegal: SC". LankaNewspapers.com. 17 October 2006. http://www.lankanewspapers.com/news/2006/10/8947.html. 
  6. 6.0 6.1 அகில இலங்கை மக்கள் காங்கிரசு ஒரு மாவட்டத்தில் தனித்தும், ஏனையவற்றில் ஐமசுகூ உடனும் இணைந்து போட்டியிட்டது.
  7. 7.0 7.1 இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இரண்டு மாவட்டங்களில் தனித்தும், ஏனையவற்றில் ஐமசுகூ உடனும் இணைந்து போட்டியிட்டது.
  8. 8.0 8.1 சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு நான்கு மாவட்டங்களில் தனித்தும், ஏனையவற்றில் ஐமசுகூ உடனும் இணைந்து போட்டியிட்டது.
  9. "Provincial Council Elections 2014 : Western Province". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  10. "Provincial Council Elections 2014 : Southern Province". Department of Elections, Sri Lanka. Archived from the original on 2014-04-18. பார்க்கப்பட்ட நாள் 2014-04-24.