2009 வவுனியா நகரசபை தேர்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2009 வவுனியா நகரசபை தேர்தல் 2009 ஆகஸ்டு 8 ஆம் நாள்[1][2] நடத்தப்பட்டது. வவுனியா நகரசபைக்கு 11 பேரைத் தெரிவுச் செய்யும் வகையில் இத்தேர்தல் அமைந்தது. 2009 மே 18 ஆம் நாள் ஈழப்போர் முடிவடைந்ததாக இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதலாவது உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் இதுவாகும். அத்துடன் வட மாகாணத்தில் 11 ஆண்டுகளுக்குப் பின்னர் இடம்பெற்ற முதலாவது உள்ளூராட்சி சபைத் தேர்தலும் இதுவாகும். மொத்தமுள்ள 11 இடங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்து வந்த மிதவாதக் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த இலங்கைத் தமிழரசுக் கட்சி 5 இடங்களைப் பெற்று வெற்றி பெற்றது[3]. 52 விழுக்காடு வாக்காளர்கள் இத்தேர்தலில் வாக்களித்தார்கள். வவுனியா நகரசபைக்கு கடைசியாக 1994, மார்ச் 1 ஆம் நாள் தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

வேட்புமனுத் தாக்கல்[தொகு]

இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜூன் 18 தொடக்கம் ஜூன் 25 ஆம் நாள் பகல் 12.00 மணி வரை வேட்பு மணுக்கள் ஏற்கப்பட்டன[2]. இக்கால எல்லையில்

  1. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி,
  2. ஐக்கிய தேசியக் கட்சி,
  3. இலங்கை தமிழரசுக் கட்சி,
  4. தமிழ் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு,
  5. இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்,
  6. தமிழர் விடுதலைக் கூட்டணி
  7. சுயேட்சைக் குழு 1
  8. சுயேட்சைக் குழு 2
  9. சுயேட்சைக் குழு 3

ஆகிய குழுக்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தன். ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணி தாக்கல் செய்தல் வேட்பு மனுக்கள் தேர்தல் தெரிவு அதிகாரியால் செல்லுபடியற்றதாக அறிவிக்கப்பட்டது[1].

மொத்தம் 135 பேர் 11 இடங்களுக்காகப் போட்டியிட்டனர்.

முடிவுகள்[தொகு]

இலங்கைத் தமிழரசுக் கட்சி 5 இடங்களைக் கைப்பற்றி முதலாவது இடத்தில் இடம்பெற்றது.

கூட்டணி / கட்சி / சுயேட்சைக்குழு வாக்குகள் % இடங்கள்
இலங்கைத் தமிழரசுக் கட்சி (தமிழ் தேசிய கூட்டமைப்பு) 4,279 34.81% 5
தமிழ் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு 4,136 33.65% 3
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 3,045 24.77% 2
இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 587 4.78% 1
ஐக்கிய தேசியக் கட்சி 228 1.85% 0
இலங்கை முன்னேற்ற முன்னணி 10 0.08% 0
சுயேட்சைக் குழு 1 6 0.05% 0
சுயேட்சைக் குழு 3 1 0.01% 0
சுயேட்சைக் குழு 2 0 0.00% 0
தேர்வு பெற்ற வாக்குகள் 12,292 100.00% 11
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 558
மொத்த வாக்குகள் 12,850
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 24,626
வாக்களித்தோர் (%) 52.18%
Source:[4]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 பெரேரா, சமிந்த (2009-06-26). "Vavuniya and Jaffna polls on August 8" (in ஆங்கிலம்). டெயிலி நியூஸ் (The Associated Newspapers of Ceylon Ltd.) இம் மூலத்தில் இருந்து 2009-06-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090628194307/http://www.dailynews.lk/2009/06/26/pol01.asp. பார்த்த நாள்: 2009-06-26. 
  2. 2.0 2.1 "யாழ். மாநகர சபை-வவுனியா நகர சபை தேர்தல் ஆகஸ்ட் 8 இல்:தேர்தல் செயலகம் அறிவிப்பு" (in தமிழ்). வீரகேசரி (Express Newspapers Ceylon (Pvt) Ltd). 6-25-2009. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=15404. பார்த்த நாள்: 2009-06-26. [தொடர்பிழந்த இணைப்பு]
  3. Government and pro-rebel party win local elections[தொடர்பிழந்த இணைப்பு], த வாசிங்டன் போஸ்ட்
  4. "Local Authorities Election 2009 Final Results Vavuniya Urban Council". Department of Elections, Sri Lanka. Archived from the original on 10 டிசம்பர் 2009. பார்க்கப்பட்ட நாள் 8 August 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)