இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2024
| |||||||||||||||||||||||||
நாடாளுமன்றத்தின் அனைத்து 225 இடங்கள் அதிகபட்சமாக 113 தொகுதிகள் தேவைப்படுகிறது | |||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பதிவு செய்த வாக்காளர்கள் | 17,140,354[1] | ||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||
|
இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தல்கள் (Parliamentary elections) 17-வது நாடாளுமன்றத்திற்காக (இலங்கைக் குடியரசின் 10-வது நாடாளுமன்றத்திற்காக) 225 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 2024 நவம்பர் 14 இல் நடைபெறும். இலங்கையின் 16-வது நாடாளுமன்றம் 2024 செப்டம்பர் 24 இல் கலைக்கப்பட்டது, புதிய நாடாளுமன்றத்திற்கான வேட்பாளர் நியமனப் பத்திரங்கள் 2024 அக்டோபர் 4 முதல் 11 வரை ஏற்றுக்கொள்ளப்படும். தேர்தலுக்குப் பின், புதிய நாடாளுமன்றம் 2024 நவம்பர் 21 இல் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.[2][3][4]
பின்னணி
[தொகு]புதிதாகப் பதவியேற்ற அரசுத்தலைவர் அனுர குமார திசாநாயக்க 2024 செப்டெம்பர் 24 இல் தனது தேர்தல் உறுதிமொழியின் ஒரு பகுதியாக தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். இதன்படி, ஆகத்து 2025 இல் அதன் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னதாகவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.[5]
தேர்தல் முறைமை
[தொகு]நாடாளுமன்றத்தில் 225 உறுப்பினர்கள் ஐந்தாண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 196 உறுப்பினர்கள் 22 பல-உறுப்பினர்கள் கொண்ட தேர்தல் மாவட்டங்களில் இருந்து திறந்த பட்டியல் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்; வாக்காளர்கள் தாங்கள் வாக்களிக்கும் கட்சிப் பட்டியலில் மூன்று வேட்பாளர்களை விருப்பத் தெரிவு மூலம் வரிசைப்படுத்தலாம்.[6] ஏனைய 29 இடங்கள் தேசியப் பட்டியலிலிருந்து தெரிவுசெய்யப்பட்டு, கட்சியின் செயலாளர்களால் நியமிக்கப்பட்ட பட்டியல் அங்கத்தவர்கள் மற்றும் கட்சி பெறும் நாடளாவிய விகிதாசார வாக்குகளின்படி இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
நாடாளுமன்றத்தைக் கலைக்கும் ஒவ்வொரு பிரகடனமும் வர்த்தமானியில் வெளியிடப்பட வேண்டும், வேட்புமனு தாக்கல் காலம், தேர்தல் தேதி ஆகியனவும் குறிப்பிடப்பட வேண்டும். புதிய நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் முந்தைய நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குள் நிகழ வேண்டும்.[7]
18 வயதிற்கு மேற்பட்ட இலங்கைக் குடியுரிமை பெற்ற ஒருவர், ஒவ்வொரு ஆண்டும் சூன் 1 அன்று எந்த இடத்தில் சாதாரண வதிவாளராக இருக்கின்றாரோ அந்த இடத்தில் தனது வாக்கைப் பதிவு செய்து கொள்ளலாம்.[8] தேர்தலில் வாக்களிப்பது கட்டாயமல்ல. ஒவ்வொரு வாக்காளரும் தத்தம் ஆளடையாளத்தை செல்லுபடியான ஆளடையாள ஆவணம் ஒன்றின் மூலம் நிரூபிக்க வேண்டும்.[8] வாக்காளர் ஒருவர் தமக்கு விருப்பமான ஒரு கட்சிக்கும், அக்கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஆகக்கூடியது மூவருக்கு தனது விருப்பத்தேர்வுகளையும் இடலாம். ஆனாலும் வேட்பாளர் விருப்பத்தேர்வு கட்டாயமானது அல்ல.[8]
தேர்தலுக்கு முன் நாடாளுமன்ற உறுப்பினர் பங்கீட்டில் மாற்றங்கள்
[தொகு]25 செப்டம்பர் 2024 அன்று, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை, வேட்பு மனுவில் பட்டியலிடப்பட்டுள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை மற்றும் சுயேச்சைக் குழுக்களிடமிருந்து தேவைப்படும் வைப்புத் தொகை பற்றிய விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வைப்புத் தொகை செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.[9][10]
உறுப்பினர் பங்கீட்டில் மாற்றங்கள்: 2020 முதல் 2024 வரை
[தொகு]மாவட்டம் | உறுப்பினர்களின் எண்ணிக்கை | ||
---|---|---|---|
2020 | 2024 | மாற்றம் (+/-) | |
அம்பாறை | 7 | 7 | – |
அனுராதபுரம் | 9 | 9 | – |
பதுளை | 9 | 9 | – |
மட்டக்களப்பு | 5 | 5 | – |
கொழும்பு | 19 | 18 | -1 |
காலி | 9 | 9 | – |
கம்பகா | 18 | 19 | +1 |
அம்பாந்தோட்டை | 7 | 7 | – |
யாழ்ப்பாணம் | 7 | 6 | -1 |
களுத்துறை | 10 | 11 | +1 |
கண்டி | 12 | 12 | – |
கேகாலை | 9 | 9 | – |
குருணாகல் | 15 | 15 | – |
மாத்தளை | 5 | 5 | – |
மாத்தறை | 7 | 7 | – |
மொனராகலை | 6 | 6 | – |
நுவரெலியா | 8 | 8 | – |
பொலன்னறுவை | 5 | 5 | – |
புத்தளம் | 8 | 8 | – |
இரத்தினபுரி | 11 | 11 | – |
திருகோணமலை | 4 | 4 | – |
வன்னி | 6 | 6 | – |
தேசியப்பட்டியல் | 29 | 29 | – |
மொத்தம் | 225 | 225 | – |
தேர்தலுக்கு முந்தைய நிலவரம்
[தொகு]அண்மைய இலங்கைத் தேர்தல் முடிவுகள் | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தேர்தல் திகதிகள் | தேசிய மக்கள் சக்தி | ஐக்கிய மக்கள் சக்தி | ஐக்கிய தேசியக் கட்சி | இலங்கை பொதுசன முன்னணி (இ.சு.ம.கூ) |
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு | மக்கள் கூட்டணி | சுயேச்சைகள் | |||||||
வாக்குகள் | % | வாக்குகள் | % | வாக்குகள் | % | வாக்குகள் | % | வாக்குகள் | % | வாக்குகள் | % | வாக்குகள் | % | |
2024 அரசுத்தலைவர்[b] | 5,634,915 | 42.31 | 4,363,035 | 32.76 | 2,299,767 | 17.27 | 342,781 | 2.57 | இல்லை [c] | இல்லை | இல்லை [d] | இல்லை | 407,473 | 3.06 |
2020 நாடாளுமன்றம் | 445,958 | 3.84 | 2,771,980 | 23.90 | 249,435 | 2.15 | 6,853,690 | 59.09 | 327,168 | 2.82 | இல்லை [e] | இல்லை | 223,622 | 1.93 |
2018 உள்ளூராட்சி | 710,932[f] | 5.75 | இல்லை [g] | இல்லை | 3,640,620[h] | 29.42 | 5,006,837[i] | 40.47 | 337,877 | 2.73 | இல்லை [j] | இல்லை | 374,132 | 3.02% |
தேர்தலுக்கு முந்தைய இலங்கை அரசியல் வரைபடம் | ||||||
---|---|---|---|---|---|---|
இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2024 | இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2020 | |||||
ஒவ்வொரு தேர்தல் மாவட்டம் அல்லது நகராட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெறுகின்றனர் ■ தேமக ■ ஐமக ■ ததேகூ ■ இ.பொ.ச.மு ■ ஏனைய கட்சிகள் |
தேர்தல் அட்டவணை
[தொகு]திகதி | நாள் | நிகழ்வு |
---|---|---|
21 செப்டம்பர் 2024 | சனிக்கிழமை | 2024 அரசுத்தலைவர் தேர்தலில் அனுர குமார திசாநாயக்க அரசுத்தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். |
24 செப்டம்பர் 2024 | செவ்வாய்க்கிழமை | அரசுத்தலைவர் திசாநாயக்க நாடாளுமன்றத்தைக் கலைத்து நாடாளுமன்றத்திற்கான தேர்தலை அறிவித்தார்.[11] |
4-10 அக்டோபர் 2024 | வேட்பு மனுக்கள் ஏற்கப்படுதல்[12] | |
14 நவம்பர் 2024 | வியாழக்கிழமை | தேர்தல் நாள் |
போட்டியிடும் கட்சிகள்
[தொகு]குறி. | கட்சி | சின்னம் | கொள்கை | தலைவர் | 2020-இல் வென்ற இடங்கள் | தேர்தலுக்கு முந்தைய நிலவரம் | நிலை | ||
---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்கு (%) | இருக்கைகள் | ||||||||
இபொசமு | இலங்கை பொதுசன முன்னணி | சிங்கள பௌத்த தேசியம் வலதுசாரி பரப்பியம் |
மகிந்த ராசபக்ச | 59.09% | 145 / 225 [a]
|
106 / 225
|
அரசு | ||
ஐமச | ஐக்கிய மக்கள் சக்தி | தாராளவாத பழமையியம் முற்போக்குவாதம் |
சஜித் பிரேமதாச | 23.90% | 54 / 225
|
72 / 225
|
எதிர்க்கட்சி | ||
இதக | இலங்கைத் தமிழரசுக் கட்சி | தமிழ்த் தேசியம் | சிவஞானம் சிறீதரன் (உறுதிப்படுத்தப்படவில்லை) |
2.82% | 10 / 225 [k]
|
6 / 225
|
எதிர்க்கட்சி | ||
ஜததேகூ | சனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி | தமிழ்த் தேசியம் | இல்லை | இல்லை | 4 / 225
|
எதிர்க்கட்சி | |||
தேமச | தேசிய மக்கள் சக்தி | சனநாயக சோசலிசம் ஏகாதிபத்திய எதிர்ப்பு இடதுசாரி பரப்பியம் |
அனுர குமார திசாநாயக்க | 3.84% | 3 / 225
|
3 / 225
|
எதிர்க்கட்சி | ||
ததேமமு | தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி | தமிழ்த் தேசியம் | கஜேந்திரகுமார் பொன்னம்பலம் | 0.58% | 2 / 225
|
2 / 225
|
எதிர்க்கட்சி | ||
ஈமசக | ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | டக்ளஸ் தேவானந்தா | 0.53% | 2 / 225
|
2 / 225
|
அரசு | |||
புசமு | புதிய சனநாயக முன்னணி | எரிவாயுக் கலன் | ரணில் விக்கிரமசிங்க | இல்லை | இல்லை | இல்லை | புதியது |
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 2020 நாடாளுமன்றத் தேர்தலில் சிறீலங்கா சுதந்திர மக்கள் கூட்டமைப்பு வென்ற இடங்கள்.
- ↑ முதற்சுற்று முடிவுகள்
- ↑ போட்டியிடவில்லை
- ↑ போட்டியிடவில்லை
- ↑ போட்டியிடவில்லை
- ↑ மக்கள் விடுதலை முன்னணி மட்டும்
- ↑ ஐதேகவின் ஒரு பகுதி
- ↑ ஐ.தேமு தலைமையில் கூட்டணி
- ↑ ஏனைய கட்சிகளுடன் கூட்டணி
- ↑ போட்டியிடவில்லை
- ↑ 2020 தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) வென்ற இடங்கள்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Elections in Sri Lanka". www.ifes.org (in ஆங்கிலம்). Archived from the original on 25 September 2024. பார்க்கப்பட்ட நாள் 25 September 2024.
- ↑ The Gazette Extraordinary (24 September 2024). "Proclamation by the President" (PDF). Department of Government Printing. Archived (PDF) from the original on 24 September 2024. பார்க்கப்பட்ட நாள் 24 September 2024.
- ↑ Balasuriya, Darshana Sanjeewa (24 September 2024). "General election on November 14". Daily Mirror. Archived from the original on 24 September 2024. பார்க்கப்பட்ட நாள் 24 September 2024.
- ↑ Ng, Kelly (24 September 2024). "Sri Lanka's new president dissolves parliament". BBC. Archived from the original on 24 September 2024. பார்க்கப்பட்ட நாள் 24 September 2024.
- ↑ Mallawarachi, Bharatha (25 September 2024). "Sri Lanka's new president calls a parliamentary election for November to consolidate his mandate". Associated Press. Archived from the original on 25 September 2024. பார்க்கப்பட்ட நாள் 25 September 2024.
- ↑ "The Electoral System". The Parliament of Sri Lanka. 14 December 2012. Archived from the original on 6 September 2024. பார்க்கப்பட்ட நாள் 6 September 2024.
- ↑ "The Constitution of the D. S. R. of Sri Lanka" (PDF). The Parliament of Sri Lanka. 30 March 2023. Archived (PDF) from the original on 18 September 2024. பார்க்கப்பட்ட நாள் 24 September 2024.
- ↑ 8.0 8.1 8.2 "Qualifications to register as an Elector". தேர்தல் திணைக்களம். Archived from the original on 2013-01-21. பார்க்கப்பட்ட நாள் 15 ஆகத்து 2015.
- ↑ "Parliamentary Election – 2024 (Media release No.:PE/2024/01)" (PDF). Election Commission of Sri Lanka. 25 September 2024. Archived (PDF) from the original on 26 September 2024. பார்க்கப்பட்ட நாள் 26 September 2024.
- ↑ "2024 General Election: Number of MPs elected from each district revealed". Ada Derana. 25 September 2024. Archived from the original on 26 September 2024. பார்க்கப்பட்ட நாள் 26 September 2024.
- ↑ "Sri Lanka's new president calls a parliamentary election for November to consolidate his mandate". AP News (in ஆங்கிலம்). 24 September 2024. பார்க்கப்பட்ட நாள் 29 September 2024.
- ↑ "Nomination period for General Election ends today - Breaking News | Daily Mirror". www.dailymirror.lk. பார்க்கப்பட்ட நாள் 13 October 2024.