ருவான் விஜேவர்தன

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ருவான் விஜேவர்தன
Ruwan Wijewardene
Ruwan Wijewardene.jpg
ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
14 செப்டம்பர் 2020
முன்னவர் சஜித் பிரேமதாச
கம்பகா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
22 ஏப்ரல் 2010 – 3 மார்ச் 2020
பெரும்பான்மை 157,932
பாதுகாப்பு இராசாங்க அமைச்சர்
பதவியில்
12 சனவரி 2015 – 17 நவம்பர் 2019
குடியரசுத் தலைவர் மைத்திரிபால சிறிசேன
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
வெகுசன ஊடக அமைச்சர்[1]
பதவியில்
22 பெப்ரவரி 2019 – 17 நவம்பர் 2019
குடியரசுத் தலைவர் மைத்திரிபால சிறிசேன
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
தனிநபர் தகவல்
பிறப்பு 4 ஆகத்து 1975 (1975-08-04) (அகவை 45)
தேசியம் இலங்கை இலங்கையர்
அரசியல் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி
பெற்றோர் ரஞ்சித் விஜேவர்தன
ரஞ்சனி (சேனநாயக்க) விஜேவர்தன
இருப்பிடம் கிரிலப்பனை, கொழும்பு
படித்த கல்வி நிறுவனங்கள் புனித தோமையர் பாடசாலை, கொழும்பு
சசெக்சு பல்கலைக்கழகம்
பணி அரசியல்
சமயம் பௌத்தம்

தினேந்திரா ருவான் விஜேவர்தன (Dinendra Ruwan Wijewardene, சிங்களம்: දිනෙන්ද්‍ර රුවන් විජෙවර්ධන, பிறப்பு: 4 ஆகத்து 1975) இலங்கை அரசியல்வாதி ஆவார். ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரான இவர் மைத்திரிபால சிறிசேனவின் அமைச்சரவையில் பாதுகாப்பு இராசாங்க அமைச்சராகப் பதவியில் இருந்தார்.[2] இவர் கம்பகா மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[3] இவர் 2020 செப்டம்பர் 14 இல் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டார்.[4]

இவர் 2010 இல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படும் முன்னர் மேல் மாகாண சபை உறுப்பினராக இருந்தார்.[5] He was appointed as the acting minister of defence few times after 2019.[6][7]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

ருவான் விஜேவர்தன விஜய பத்திரிகைக் குழுமத்தின் தலைவர் ரஞ்சித் விஜேவர்தன, ரஞ்சனி சேனநாயக்க ஆகியோரின் இளைய மகன் ஆவார். இவரது தாய்வழி பூட்டன் இலங்கையின் முதலாவது பிரதமர் டி. எஸ். சேனநாயக்கா ஆவர். இவரது தந்தை-வழி பாட்டனார் டி. ஆர். விஜயவர்தனா பிரபல பத்திரிகையாளர், ஏரிக்கரைப் பத்திரிகைக் குழுமப்த்தை ஆரம்பித்தவர். ருவான் இலங்கையின் முதலாவது நிறைவேற்றதிகார அரசுத்தலைவர் ஜே. ஆர். ஜெயவர்தனாவின் மருமகனும், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உச்டன்பிறவா சகோதரரும் ஆவார்.[8][9] இவர் இங்கிலாந்து, சசெக்சு பல்கலைக்க்ழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்.

அரசியலில்[தொகு]

விஜேவர்தன 2009 மேல் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 2010 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு கம்பகா மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.[10] ஆனாலும், 2020 தேர்தலில் தோல்வியடைந்தார். 2020 செப்டம்பர் 14 இல் இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[11][12][13][14][15][16]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ருவான்_விஜேவர்தன&oldid=3034364" இருந்து மீள்விக்கப்பட்டது