தமிழ் முற்போக்குக் கூட்டணி
தமிழ் முற்போக்கு கூட்டணி Tamil Progress Alliance | |
---|---|
தலைவர் | மனோ கணேசன் |
இணைப் பிரதித் தலைவர்கள் | பழனி திகாம்பரம், வே. இராதாகிருஷ்ணன் |
பொதுச் செயலாளர் | அந்தனி லோரன்ஸ் |
தொடக்கம் | சூன் 3, 2015 |
தலைமையகம் | கொழும்பு |
நிறங்கள் | Yellow |
இலங்கை அரசியல் |
தமிழ் முற்போக்கு கூட்டணி (Tamil Progress Alliance, TPA) என்பது இலங்கையின் ஓர் அரசியல் கூட்டணி ஆகும். இலங்கையின் மத்திய, மேல், ஊவா, சபரகமுவா, வடமேல் மாகாணங்களில் வாழும் தமிழ் பேசும் மக்களை அரசியல் ரீதியாக பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்பாக செயற்படுகிறது. இக்கூட்டணி 2015 சூன் 3 ஆம் நாள் கொழும்பு நகரில் ஆரம்பிக்கப்பட்டது. இக்கூட்டணியின் தலைவர் சனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஆவார். அமைச்சர் பழனி திகாம்பரம், இராசாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் ஆகியோர் பிரதித் தலைவர்கள் ஆவர்.[1][2]
கூட்டணி உறுப்புக் கட்சிகள்[தொகு]
அரசியல் கோரிக்கைகள்[தொகு]
- பிரிபடாத இலங்கை என்ற ஒரே நாட்டு வரையறைக்குள் வட, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழும் தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளை முன் வைத்தல்.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "DPF, UPF, WNC form new political alliance". டெய்லி மிரர். 3 சூன் 2015. http://www.dailymirror.lk/74919/dpf-upf-wnc-form-new-political-alliance. பார்த்த நாள்: 4 சூன் 2015.
- ↑ 2.0 2.1 "மனோ கணேசன் தலைமையில் இன்று உதயமானது தமிழ் முற்போக்கு கூட்டணி!". தமிழ்வின். 3 சூன் 2015. http://www.tamilwin.com/show-RUmtyGTXSUgs1H.html. பார்த்த நாள்: 4 சூன் 2015.