பழனி திகாம்பரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பழனி திகாம்பரம்
Palani Digambaram

நா.உ. மா.ச.உ.
Palani Digambaran.jpg
மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர்
பதவியில்
4 செப்டம்பர் 2015 – 2020
தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர்
பதவியில்
12 சனவரி 2015 – ஆகத்து 2015
தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர்
பதவியில்
21 ஆகத்து 2014 – 10 டிசம்பர் 2014
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2010
மத்திய மாகாணசபை உறுப்பினர்
பதவியில்
2004–2010
பின்வந்தவர் ஜி. எம். எம். பியசிறி
தனிநபர் தகவல்
பிறப்பு 10 சனவரி 1967 (1967-01-10) (அகவை 54)
அரசியல் கட்சி தொழிலாளர் தேசிய சங்கம்
சமயம் இந்து
இனம் மலையகத் தமிழர்

எஸ். உடையப்பன் பழனி அழகன் திகாம்பரம் (S. Udeiappan Palani Alagan Digambaram, பிறப்பு: 10 சனவரி 1967)[1] என்பவர் இலங்கை அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், தொழிலதிபரும் ஆவார்.

திகாம்பரம் ஆடைத் தொழிற்சாலை உரிமையாளரும், தொழிலாளர் தேசிய சங்கம் என்ற தொழிற்சங்கத்தின் தலைவரும் ஆவார்.[2][3]

திகாம்பரம் 2004 மாகாணசபைத் தேர்தலில் மலையக மக்கள் முன்னணியின் வேட்பாளராக நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு மத்திய மாகாண சபைக்குத் தெரிவானார்.[4] இவர் 2009 மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[5]

2010 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளராகப் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார்.[6][7] தேசியப் பட்டியல் தொடர்பாக ஐக்கிய தேசிய முன்னணியுடன் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக திகாம்பரம் அக்கூட்டணியில் இருந்து 2010 ஏப்ரல் 22 இல் விலகினார்.[8] திகாம்பரம் பின்னர் எக்கூட்டணியிலும் சேராமல் சுயேட்சையாக நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினராகத் தொடர்ந்திருந்தார்.[9]

2014 ஆகத்து 21 இல் இவர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் இணைந்து தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[10][11] பின்னர் 2014 டிசம்பர் 10 இல் ஆளும் கூட்டணியில் இருந்து விலகி 2-015 அரசுதலைவர் தேர்தலில் பொது எதிர்க்கட்சி வேட்பாளராகப் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேனவிற்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார்.[12][13] தேர்தலின் பின்னர் புதிய அரசுத்தலைவர் சிறிசேன இவரை தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக நியமித்தார்.[14][15]

2015 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு 105,528 விருப்பு வாக்குகள் பெற்று வெற்றி பெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.[16][17][18] 2015 செப்டம்பர் 4 அன்று மைத்திரிபால சிறிசேனவின் அரசில் மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[19][20] [21]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Directory of Members: Thigambaram, Palany". இலங்கை நாடாளுமன்றம்.
 2. "New faces in Parliament". சண்டே டைம்சு. 18 ஏப்ரல் 2010. http://www.sundaytimes.lk/100418/News/page8.pdf. 
 3. "Decline of Tamil representation outside the North and East". dbsjeyaraj.com (23 ஏப்ரல் 2010).
 4. "Results of Provincial Council Elections 2004". இலங்கை தேர்தல் திணைக்களம்.
 5. "Preferences Nuwara Eliya". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
 6. "Parliamentary General Election - 2010 Nuwara Eliya Preferences". இலங்கைத் தேர்தல் திணைக்கள்ம்.
 7. "General Elections 2010 - Preferential Votes". சண்டேடைம்சு. 11 ஏப்ரல் 2010. http://www.sundaytimes.lk/100411/News/page1.pdf. 
 8. Perera, Yohan (23 ஏப்ரல் 2010). "Workers Union leaves UNF". டெய்லிமிரர். http://www.dailymirror.lk/print/index.php/news/front-page-news/8813.html. 
 9. Indrajith, Saman (23 ஏப்ரல் 2010). "NUW to back govt.". ஐலண்டு. http://www.island.lk/2010/04/23/news19.html. 
 10. Somawardana, Melissa (21 ஆகத்து 2014). "Prabha Ganesan and Digambaran sworn in as Deputy Ministers". நியூஸ் ஃபர்ஸ்ட். http://newsfirst.lk/english/2014/08/praba-ganesan-p-digambaran-sworn-deputy-ministers/50251. 
 11. "Two more Deputy Ministers take oaths before President in Si Lanka". Colombo Page. 21 ஆகத்து 2014. http://www.colombopage.com/archive_14B/Aug21_1408629270CH.php. 
 12. Ferdinando, Shamindra (11 டிசம்பர் 2014). "Two deputy ministers quit; CWC suffers split". தி ஐலண்டு. http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=115736. 
 13. Srinivasan, Meera (11 டிசம்பர் 2014). "2 more MPs leave Rajapaksa government". தி இந்து. http://www.thehindu.com/news/international/south-asia/2-more-mps-leave-rajapaksa-government/article6680195.ece. 
 14. "New Cabinet ministers sworn in". டெய்லிமிரர். 12 சனவரி 2015. http://www.dailymirror.lk/61073/new-cabinet-ministers-sworn-in. 
 15. "New Cabinet takes oaths". தெ நேசன். 12 சனவரி 2015. http://www.nation.lk/edition/latest-top-stories/item/37306-new-cabinet-takes-oaths.html. 
 16. "PART I : SECTION (I) — GENERAL Government Notifications PARLIAMENTARY ELECTIONS ACT, No. 1 OF 1981". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1928/03. 19 August 2015. http://www.documents.gov.lk/Extgzt/2015/PDF/Aug/1928_03/1928_03%20E.pdf. 
 17. "Ranil tops with over 500,000 votes in Colombo". டெய்லிமிரர். 19 ஆகத்து 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo. 
 18. "Preferential Votes". டெய்லிநியூஸ். 19 ஆகத்து 2015. http://www.dailynews.lk/?q=political/preferential-votes-2. 
 19. "இலங்கையின் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது". பிபிசி தமிழ் (4 செப்டம்பர் 2015). பார்த்த நாள் 4 செப்டம்பர் 2015.
 20. http://www.priu.gov.lk/Govt_Ministers/Indexministers.html
 21. http://www.news.lk/news/sri-lanka/item/9565-new-ministers-sworn-in
"https://ta.wikipedia.org/w/index.php?title=பழனி_திகாம்பரம்&oldid=3039588" இருந்து மீள்விக்கப்பட்டது