மாவை சேனாதிராஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மாவை சேனாதிராஜா

நாஉ
தேசியப் பட்டியல் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1989–1994
முன்னவர் அ. அமிர்தலிங்கம், தவிகூ
பதவியில்
1999–2000
முன்னவர் நீலன் திருச்செல்வம், தவிகூ
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2000
தனிநபர் தகவல்
பிறப்பு அக்டோபர் 27, 1942 (1942-10-27) (அகவை 74)
தேசியம் இலங்கைத் தமிழர்
அரசியல் கட்சி இலங்கைத் தமிழரசுக் கட்சி
பிற அரசியல்
சார்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
இருப்பிடம் 241/5, டபிள்யூ. ஏ. சில்வா ஒழுங்கை, வெள்ளவத்தை, இலங்கை
சமயம் இந்து

மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) என அழைக்கப்படும் சோமசுந்தரம் சேனாதிராஜா (பிறப்பு: அக்டோபர் 27, 1942) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஆவார்.

மாவை சேனாதிராஜா 1989 முதல் 1994 வரையிலும், பின்னர் 1999 முதல் 2000 ஆம் ஆண்டு வரையிலும் இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேசியப் பட்டியலில் இருந்து தெரிவு செய்யப்பட்ட உறுப்பினராக இருந்தவர். இவர் படுகொலை செய்யப்பட்ட அ. அமிர்தலிங்கம், மற்றும் நீலன் திருச்செல்வம் ஆகியோருக்குப் பதிலாக இரு நாடாளுமன்றங்களுக்கும் முறையே நியமிக்கப்பட்டார்.[1][2]

2000 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், 2001, 2004, 2010 தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.செப்டம்பர் , 2014இல் அவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. டி. பி. எஸ். ஜெயராஜ் (1 January 2006). "The benign parliamentarian from Batticaloa". TransCurrents.
  2. "Senathirajah - new TULF MP". The Island, Sri Lanka (15 August 1999).
  3. "இலங்கை வடக்கு மாகாணம் தமிழரசுக் கட்சியின் தலைவராக மாவை சேனாதிராஜா தேர்வு" 3. தீக்கதிர் தமிழ் நாளிதழ் (8 செப்டம்பர் 2014). பார்த்த நாள் 8 செப்டம்பர் 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாவை_சேனாதிராஜா&oldid=2238823" இருந்து மீள்விக்கப்பட்டது