ச. வியாழேந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சதாசிவம் வியாழேந்திரன்(அமல்)
நா.உ
கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான பிரதி அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
நவம்பர் 2, 2018
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
ஆகத்து 17, 2015
தனிநபர் தகவல்
தேசியம் இலங்கைத் தமிழர்
அரசியல் கட்சி தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
பிற அரசியல்
சார்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
படித்த கல்வி நிறுவனங்கள் மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை
பணி ஆசிரியர்

சதாசிவம் (அமல்) வியாழேந்திரன் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

வியாழேந்திரன் செங்கலடி வெப்பவெட்டுவான் அரசினர் தமிழ்ப் பாடசாலையிலும், ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்திலும் கல்வி கற்றார்.[1] பின்னர் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[1] அத்துடம் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.[1]

அரசியலில்[தொகு]

வியாழேந்திரன் (அமல் எனவும் அழைக்கப்படுகிறார்) தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) உறுப்பினராவார்.[2] ஆசிரியராகப் பணியாற்றும் இவர் 2015 நாடாளுமன்றத் தேர்தலில் புளொட் கட்சியின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 39,321 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்கு முதன் முறையாகத் தெரிவு செய்யப்பட்டார்.[3][4]

2018 அக்டோபர் 26 இல் இலங்கை அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன ஐதேக தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து அகற்றி, முன்னாள் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவை பிரதமராக அறிவித்தார்.[5] இதனை அடுத்து ராசபக்ச தனது பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ராசபக்சவின் தெரிவிற்கு எதிர்ப்புத் தெரிவித்த நிலையில்,[6] அதன் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் 2018 நவம்பர் 2 இல் ராசபக்சவின் அமைச்சரவையில் கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[7]

தேர்தல் வரலாறு[தொகு]

அமல் வியாழேந்திரனின் தேர்தல் வரலாறு
தேர்தல் தொகுதி கட்சி வாக்குகள் முடிவு
2015 நாடாளுமன்றம்[8] மட்டக்களப்பு மாவட்டம் ததேகூ 39,321 தெரிவு

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "More than 50 new faces in House". சண்டே டைம்சு. 23 ஆகத்து 2015. 
  2. "TNA hands over nominations for all five districts of north and east". Tamil Diplomat. 10 July 2015. http://tamildiplomat.com/tna-hands-over-nominations-for-all-five-districts-of-north-and-east/. 
  3. "Ranil tops with over 500,000 votes in Colombo". டெய்லி மிரர். 19 ஆகத்து 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo. 
  4. "Preferential Votes". டெய்லி நியூசு. 19 ஆகத்து 2015. http://www.dailynews.lk/?q=political/preferential-votes-2. 
  5. "Turmoil in Sri Lanka as ex-president Rajapaksa sworn in as PM" (27-10-2018).
  6. "ஜனாதிபதியின் செயற்பாடு சட்டவிரோதமானது - சுமந்திரன்". வீரகேசரி. 2 நவம்பர் 2018. http://www.virakesari.lk/article/43773. பார்த்த நாள்: 3 நவம்பர் 2018. 
  7. "கிழக்கு மாகாண பிரதியமைச்சராக எஸ். வியாழேந்திரன் பதவியேற்பு". வீரகேசரி. 2 நவம்பர் 2018. http://www.virakesari.lk/article/43778. பார்த்த நாள்: 3 நவம்பர் 2018. 
  8. Jayakody, Pradeep (28-08-2015). "The Comparison of Preferential Votes in 2015 & 2010". The Daily Mirror (Sri Lanka). http://www.dailymirror.lk/85309/the-comparison-of-preferential-votes-in-2015-2010. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._வியாழேந்திரன்&oldid=2943145" இருந்து மீள்விக்கப்பட்டது