எம். ஏ. எம். மகரூப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மதிப்பிற்குரிய
எம். ஏ. எம். மகரூப்
நா. உ இ. மா. ச
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2000–2004
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2015
திருகோணமலை மாவட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்.
பதவியில்
2008–2012
தனிநபர் தகவல்
பிறப்பு 25 ஏப்ரல் 1957 (1957-04-25) (அகவை 64)
அரசியல் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி
பிற அரசியல்
சார்புகள்
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி
பணி அரசியல்வாதி, தொழிலதிபர்
சமயம் இசுலாம்
இனம் இலங்கைச் சோனகர்

முகம்மது அப்துல்லா முகம்மது மகரூப் (ஆங்கில மொழி: Mohamed Abdullah Mohamed Maharoof; பிறப்பு: 25 ஏப்பிரல் 1957; சின்ன மகரூப் எனவும் அழைக்கப்படுகிறார்.) இலங்கையின் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

மகரூப் 25 ஏப்பிரல் 1957இல் பிறந்தார்.[1] இவர் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரான இம்ரான் மகரூப்பின் உறவினர் ஆவார்.[2]

அரசியல் வாழ்க்கை[தொகு]

மகரூப் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக திருகோணமலை மாவட்டத்தில் 2000 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். நாடாளுமன்றத்திற்கும் தெரிவானார்.[3] இவர் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளராக 2001 நாடாளுமன்ற தேர்தலில் மறு தடவை போட்டியிட்டார்.[4] மகரூப் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசுவின் வேட்பாளராக2004 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் மத்தியில் நான்காவதாக வந்த பிறகு மீண்டும் போட்டியிட்டு தோற்றார்.[5]

மகரூப் 2008 மே 10இல் நடைபெற்ற 1வது கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று மாகானசபை உறுப்பினரானார்.[6][7][8] மகரூப் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளராக 2012 கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர்கள் மத்தியில் இரண்டாவதாக வந்த பிறகு மீண்டும் போட்டியிட்டு தோற்றார். இவர் 2012 இலங்கை மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தனர்.[9]

மகரூப் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளராக 2015 நாடாளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு 35,456 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.[10][11][12][13][14]

அரசியல் வரலாறு[தொகு]

எம். எ. எம். மகரூப்பின் அரசியல் வரலாறு
தேர்தல் தொகுதி அரசியல் கட்சி வாக்குகள் முடிவு
2000 நாடாளுமன்றத் தேர்தல்[3] திருகோணமலை மாவட்டம் ஐக்கிய தேசியக் கட்சி 21,348 தெரிவானார்
2001 நாடாளுமன்றத் தேர்தல்[4] திருகோணமலை மாவட்டம் ஐக்கிய தேசிய முன்னணி 25,264 தெரிவானார்
2004 நாடாளுமன்றத் தேர்தல்[5] திருகோணமலை மாவட்டம் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு 16,617 தெரிவாகவில்லை
2008 மாகாணசபைத் தேர்தல் திருகோணமலை மாவட்டம் ஐக்கிய தேசிய முன்னணி தெரிவானார்
2012 மாகாணசபைத் தேர்தல்[9] திருகோணமலை மாவட்டம் ஐக்கிய தேசியக் கட்சி 9,827 தெரிவாகவில்லை
2015 நாடாளுமன்றத் தேர்தல்[15] திருகோணமலை மாவட்டம் ஐக்கிய தேசியக் கட்சி 35,456 தெரிவானார்

வாழ்க்கை குறிப்பு[தொகு]

மகரூப் 25 ஏப்பிரல் 1957ல் பிறந்தார். இவர் ஹிஜ்ரா வீதி, கிண்ணியாவில் வசிக்கிறார்.[16]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Directory of Members: Abdullah Mahrooff". இலங்கை நாடாளுமன்றம்.
 2. Santiago, Melanie (18 August 2015). "General Election 2015: Full list of preferential votes". நியூஸ் பெர்ஸ்ட். http://newsfirst.lk/english/2015/08/general-election-2015-full-list-of-preferential-votes/107433. 
 3. 3.0 3.1 "General Election 2000 Preferences". Department of Elections, Sri Lanka.
 4. 4.0 4.1 "General Election 2001 Preferences". Department of Elections, Sri Lanka.
 5. 5.0 5.1 "General Election 2004 Preferences". Department of Elections, Sri Lanka.
 6. "Members of the Eastern Provincial Council". கிழக்கு மாகாண சபை.
 7. "PART I : SECTION (I) — GENERAL Government Notifications PROVINCIAL COUNCILS ELECTIONS ACT, No. 2 OF 1988 Eastern Province Provincial Council". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1549/17. 15 May 2008. http://www.documents.gov.lk/Extgzt/2008/pdf/May/1549_17/1549_17E.pdf. 
 8. "PART I : SECTION (I) — GENERAL Government Notifications PROVINCIAL COUNCILS ELECTIONS ACT, No. 2 OF 1988 Eastern Province Provincial Council". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1549/17. 15 May 2008. http://www.documents.gov.lk/Extgzt/2008/pdf/May/1549_17/1549_17E.pdf. 
 9. 9.0 9.1 "Preferences". Department of Elections, Sri Lanka.
 10. "PM Ranil receives highest Preferential votes with 500,566". hirunews.lk (18 ஆகத்து 2015). பார்த்த நாள் 19 ஆகத்து 2015.
 11. "Preferential votes- General Election 2015". adaderana.lk (18 ஆகத்து 2015). பார்த்த நாள் 19 ஆகத்து 2015.
 12. "PART I : SECTION (I) — GENERAL Government Notifications PARLIAMENTARY ELECTIONS ACT, No. 1 OF 1981". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1928/03. 19 August 2015. http://www.documents.gov.lk/Extgzt/2015/PDF/Aug/1928_03/1928_03%20E.pdf. 
 13. "Ranil tops with over 500,000 votes in Colombo". The Daily Mirror (Sri Lanka). 19 August 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo. 
 14. "Preferential Votes". Daily News (Sri Lanka). 19 August 2015. http://www.dailynews.lk/?q=political/preferential-votes-2. 
 15. Jayakody, Pradeep (28 August 2015). "The Comparison of Preferential Votes in 2015 & 2010". The Daily Mirror (Sri Lanka). http://www.dailymirror.lk/85309/the-comparison-of-preferential-votes-in-2015-2010. 
 16. http://www.parliament.lk/en/members-of-parliament/directory-of-members/viewMember/152
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._ஏ._எம்._மகரூப்&oldid=2784388" இருந்து மீள்விக்கப்பட்டது