அத்துரலியே ரத்தன தேரர்
அத்துரலியே ரத்தன தேரர் Athuraliye Rathana Thero நா.உ. | |
---|---|
![]() | |
தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 2021 | |
பதவியில் 2015–2020 | |
கம்பகா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2010–2015 | |
களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2004–2010 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | ரஞ்சித் வெலிக்கந்த 10 அக்டோபர் 1962 அத்துரலிய, மாத்தறை மாவட்டம், இலங்கை |
தேசியம் | இலங்கையர் |
அரசியல் கட்சி | மக்கள் கட்சியின் நமது சக்தி |
இருப்பிடம் | ஒபேசேகரபுர, ராஜகிரிய |
படித்த கல்வி நிறுவனங்கள் | பேராதனைப் பல்கலைக்கழகம் |
பணி | அரசியல்வாதி, சமூக செயற்பாட்டாளர் |
தொழில் | பௌத்த மதகுரு |
அத்துரலியே ரத்தன தேரர் (Athuraliye Rathana Thero, சிங்களம்: අතුරලියේ රතන හිමි, பிறப்பு: 10 அக்டோபர் 1962) இலங்கை அரசியல்வாதியும் பௌத்த துறவியும் ஆவார். இலங்கையின் 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஜாதிக எல உறுமய என்ற கட்சியின் சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூட்டமைப்பில் கம்பகா மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்டார். சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றத்திலும் (2004) பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இவரது சொந்த இடம் மாத்தறை மாவட்டத்தில் உள்ள அக்குரசை தேர்தல் தொகுதியில் உள்ள அதுரலிய என்ற ஊராகும். இவர் தனது கட்சியினருடன் 2014 நவம்பரில் ஆளும் ஐமசுமு கூட்டணியில் இருந்து விலகினார்.[1]
அதுரலிய ரத்தன தேரர், ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக 2015-இல் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[2]
2019 இலங்கை உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து இலங்கை அரசில் பதவி வகிக்கும் முஸ்லீம் அமைச்சர்களையும், மாகாண ஆளுநர்களையும் பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தி உண்ணாநோன்பு மேற்கொண்டார்.[3][4]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ JHU breaks away from Rajapaksa's ruling UPFA, தமிழ்நெட், நவம்பர் 18, 2014
- ↑ "Archived copy". 2015-09-26 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-09-26 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
- ↑ Nine Muslim Ministers and two Governors step down in Sri Lanka
- ↑ இலங்கை முஸ்லிம்கள் விவகாரம் - மீண்டும் அமைச்சரான பதவி விலகிய இருவர்
வெளி இணைப்புகள்[தொகு]
- அதுரலிய ரதன தேரர் பரணிடப்பட்டது 2010-10-06 at the வந்தவழி இயந்திரம் நாடாளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளம்
- 1962 பிறப்புகள்
- வாழும் நபர்கள்
- இலங்கையின் 13வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 14வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 15வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 16வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி அரசியல்வாதிகள்
- இலங்கைப் பௌத்த துறவிகள்
- மாத்தறை மாவட்ட நபர்கள்
- இலங்கை அரசியல்வாதிகள்
- இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்