விஜயகலா மகேசுவரன்
விஜயகலா மகேஸ்வரன் Vijayakala Maheswaran | |
---|---|
சிறுவர் விவகாரங்களுக்கான இராசாங்க அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 9 செப்டம்பர் 2015 | |
பெண்கள் விவகாரப் பிரதி அமைச்சர் | |
பதவியில் 12 சனவரி 2015 – 17 ஆகத்து 2015 | |
யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2010 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 23 நவம்பர் 1972 களபூமி, காரைநகர், யாழ்ப்பாண மாவட்டம், இலங்கை |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி |
துணைவர் | தியாகராஜா மகேஸ்வரன் |
வாழிடம்(s) | 32, 36ம் ஒழுங்கை, வெள்ளவத்தை, கொழும்பு 6, இலங்கை |
வேலை | தொழிற்சங்கவாதி |
விஜயகலா மகேசுவரன் (Vijayakala Maheswaran, பிறப்பு:23 நவம்பர் 1972) என்பவர் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
ஆரம்ப வாழ்க்கை
[தொகு]விஜயகலா 1972 நவம்பர் 23 அன்று[1] யாழ்ப்பாண மாவட்டம், காரைநகரில் மார்க்கண்டு என்பவருக்குப் பிறந்தவர்.[2] காரைநகர் இந்துக் கல்லூரியில் கல்வி பயின்றார்.[2][3]
விஜயகலா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேசுவரனைத் திருமணம் புரிந்தார். மகேசுவரன் 2008 சனவரி 1இல் அரச துணை இராணுவக் குழுவினரால் கொழும்பில் படுகொலை செய்யப்பட்டார்.[4][5] இவர்களுக்கு இரண்டு பெண்கள், ஒரு ஆண் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.[2]
அரசியலில்
[தொகு]விஜயகலா தனது கணவரின் படுகொலைக்குப் பிறகு அரசியலில் இறங்கினார். 2010 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளராக யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதற் தடவையாக நாடாளுமன்றம் சென்றார்.[6] 2015 சனாதிபதித் தேர்தலை அடுத்து இவர் பெண்கள் விவகாரப் பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[7][8] 2015 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் யாழ்ப்பாண மாவட்டத்தில் நிறுத்தப்பட்டு 13,071 விருப்பு வாக்குகள் பெற்று தெரிவானார்.[9][10] 2015 செப்டம்பர் 9 இல் இவர் சிறுவர் விவகாரங்களுக்கான இராசாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[11][12][13]
பதவி விலகல்
[தொகு]2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாரளுமன்றத்தில் தமிழர்களின் சுதந்திரத்தைக்காக்க மீண்டும் விடுதலைப்புலிகள் வரவாண்டும் என்று பேசியதால் எழுந்த சர்ச்சையின் காரணமாக தனது பதவியை விட்டு விலகினார்.[14]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Directory of Members: Maheswaran, (Mrs.) Vijayakala". இலங்கை நாடாளுமன்றம்.
- ↑ 2.0 2.1 2.2 "தரும பூஷணம் தியாகராஜா மகேஸ்வரன்". p. 25.
- ↑ "New faces in Parliament". சண்டே டைம்சு. 18 ஏப்ரல் 2010. http://www.sundaytimes.lk/100418/News/page8.pdf.
- ↑ டி. பி. எஸ். ஜெயராஜ் (16 மார்ச் 2008). "Assassinating Tamil Parliamentarians: The unceasing waves". தெ நேசன் இம் மூலத்தில் இருந்து 2014-02-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140220083850/http://www.nation.lk/2008/03/16/newsfe1.htm.
- ↑ "Maheswaran MP assassinated in Colombo". தமிழ்நெட். 1 சனவரி 2008. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=24140.
- ↑ "Parliamentary General Election - 2010 Jaffna Preferences" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2010-05-13. பார்க்கப்பட்ட நாள் 2015-08-21.
- ↑ "New Cabinet ministers sworn in". டெய்லிமிரர். 12 சனவரி 2015. http://www.dailymirror.lk/61073/new-cabinet-ministers-sworn-in.
- ↑ "New Cabinet takes oaths". த நேசன். 12 சனவரி 2015 இம் மூலத்தில் இருந்து 2015-01-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150118145912/http://www.nation.lk/edition/latest-top-stories/item/37306-new-cabinet-takes-oaths.html.
- ↑ "Ranil tops with over 500,000 votes in Colombo". டெய்லிமிரர். 19 ஆகத்து 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo.
- ↑ "Preferential Votes". டெய்லிநியூசு. 19 ஆகத்து 2015 இம் மூலத்தில் இருந்து 2015-08-20 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20150820025307/http://www.dailynews.lk/?q=political/preferential-votes-2.
- ↑ "PART I : SECTION (I) — GENERAL Appointments & c., by the President". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1932/69. 18 September 2015. http://www.documents.gov.lk/Extgzt/2015/PDF/Sep/1932_69/1932_69%20E.pdf.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "New State and Deputy Ministers". டெய்லிமிரர். 9 செப்டம்பர் 2015. http://www.dailymirror.lk/86665/state-and-deputy-ministers.
- ↑ "State and Deputy Ministers take oaths (Updated Full List)". த நேசன். 9 செப்டம்பர் 2015 இம் மூலத்தில் இருந்து 2015-09-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150910214552/http://nation.lk/online/2015/09/09/state-and-deputy-ministers-take-oaths/.
- ↑ "விடுதலைப்புலிகள் திரும்பி வர வேண்டும்"- சர்ச்சையாகப் பேசிய இலங்கை பெண் அமைச்சர் திடீர் ராஜினாமா
- 1972 பிறப்புகள்
- இலங்கை அரசியல்வாதிகள்
- இலங்கையின் 14வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 15வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கைத் தமிழ்ப் பெண் அரசியல்வாதிகள்
- யாழ்ப்பாணத்து நபர்கள்
- வாழும் நபர்கள்
- இலங்கை இந்துக்கள்
- இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள்
- ஐக்கிய தேசியக் கட்சி அரசியல்வாதிகள்
- இலங்கையின் துணை அமைச்சர்கள்
- இலங்கையின் இராசாங்க அமைச்சர்கள்
- இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்
- இலங்கையின் வட மாகாண நபர்கள்