அதுரலிய ரத்தன தேரர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அதுரலிய ரதன தேரர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
அதுரலிய ரத்தன தேரர்
Athuraliye Rathana Thero

நா.உ
Athuraliye Rathana Thero.jpg
களுத்துறை மாவட்டம் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2004–2010
கம்பகா மாவட்டம் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2010
தனிநபர் தகவல்
தேசியம் இலங்கையின் கொடி இலங்கையர்
அரசியல் கட்சி ஜாதிக எல உறுமய
இருப்பிடம் ஒபயசேகரபுர, ராஜகிரி
பணி பௌத்த மதகுரு, அரசியல்வாதி
சமயம் பௌத்தர்

அதுரலிய ரத்தன தேரர் (Athuraliye Rathana Thero) இலங்கை அரசியல்வாதியும் பௌத்த துறவியும் ஆவார். இலங்கையின் 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஜாதிக எல உறுமய என்ற கட்சியின் சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூட்டமைப்பில் கம்பகா மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றத்திலும் (2004) பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இவரது சொந்த இடம் மாத்தறை மாவட்டத்தில் உள்ள அக்குரசை தேர்தல் தொகுதியில் உள்ள அதுரலிய என்ற ஊராகும். இவர் தனது கட்சியினருடன் 2014 நவம்பரில் ஆளும் ஐமசுமு கூட்டணியில் இருந்து விலகினார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. JHU breaks away from Rajapaksa's ruling UPFA, தமிழ்நெட், நவம்பர் 18, 2014

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அதுரலிய_ரத்தன_தேரர்&oldid=2238925" இருந்து மீள்விக்கப்பட்டது