எம். எஸ். தௌஃபீக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம். எஸ். தௌஃபீக்
M. S. Thowfeek
நாடாளுமன்ற உறுப்பினர்
உள்நாட்டுப் போக்குவரத்துத்துறை பிரதி அமைச்சர்
பதவியில்
21 சனவரி 2015 – 17 ஆகத்து 2015
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
ஆகத்து 2020
தொகுதிதிருகோணமலை மாவட்டம்
பதவியில்
சனவரி 2016 – மார்ச் 2020
முன்னையவர்ஏ. ஆர். ஏ. அபீசு
தொகுதிதேசியப் பட்டியல்
பதவியில்
2010 – ஆகத்து 2015
தொகுதிதிருகோணமலை மாவட்டம்
பதவியில்
2001–2004
தொகுதிதேசியப் பட்டியல்
பதவியில்
2000–2001
தொகுதிதிருகோணமலை மாவட்டம்
கிழக்கு மாகாண சபை உறுப்பினர்
பதவியில்
2008–2010
பின்னவர்ஏ. ஆர். முகமது
தொகுதிதிருகோணமலை மாவட்டம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
முகமது சரீப் தௌபீக்

7 சனவரி 1971 (1971-01-07) (அகவை 53)
அரசியல் கட்சிசிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு
பிற அரசியல்
தொடர்புகள்
ஐக்கிய மக்கள் சக்தி

முகம்மது சரிப் தௌஃபீக் (Mohamed Shariff Thowfeek, பிறப்பு: 7 சனவரி 1971)[1] இலங்கை முசுலிம் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் துணை அமைச்சரும் ஆவார்.

அரசியல் பணி[தொகு]

தௌஃபீக் 2000 நாடாளுமன்றத் தேர்தலில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு சார்பில் மக்கள் கூட்டணி வேட்பாளராக திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு, தெரிவு செய்யப்பட்டு நாடாளுமன்றம் சென்றார்.[2] முஸ்லிம் காங்கிரசு கட்சிக்கும் மக்கள் கூட்டணிக்குமிடையேயான கூட்டு ஒப்பந்தம் 2001 சூன் மாதத்தில் முறிவடைந்தது. 2001 அக்டோபரில் முசுலிம் காங்கிரசு எதிர்க்கட்சிக் கூட்டணியான ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்தது.[3][4][5][6] தௌஃபீக் 2001 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[7] ஆனாலும், இவர் தேசியப் பட்டியலில் சேர்க்கப்பட்டு நாடாளுமன்றம் சென்றார்.[8][9] 2004 தேர்தலில் முசுலிம் காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டு கட்சிப் பட்டியலில் மூன்றாவதாக வந்து, தெரிவு செய்யப்படவில்லை.[10]

பின்னர், தௌஃபீக் 2008 மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிட்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினராகத் தெரிந்தெடுக்கப்பட்டார்.[11] மீண்டும் 2010 நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.[12] இவர் மைத்திரிபால சிறிசேனவின் அமைச்சரவையில் 2015 சனவரியில் உள்ளூர் போக்குவரத்து பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[13][14][15]

2015 நாடாளுமன்றத் தேர்தலில் தௌஃபீக் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளராக திருகோணமலையில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[16][17] ஆனாலும், 2016 சனவரியில் முசுலிம் காங்கிரசு உறுப்பினர் ஏ. ஏர். ஏ. ஹபீசு தனது தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவியைத் துறந்ததை அடுத்து தௌஃபீக் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[18][19][20] 2020 நாடாளுமன்றத் தேர்தலில் முசுலிம் காங்கிரசு சார்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராகப் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.[21][22]

தேர்தல் வரலாறு[தொகு]

எம். எசு. தௌஃபீக்கின் தேர்தல் வரலாறு
தேர்தல் தொகுதி கட்சி கூட்டணி வாக்குகள் முடிவு
2000 நாடாளுமன்றம் திருகோணமலை மாவட்டம் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு மக்கள் கூட்டணி 15,588 தெரிவு
2001 நாடாளுமன்றம் திருகோணமலை மாவட்டம் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு ஐக்கிய தேசிய முன்னணி தெரிவு செய்யப்படவில்லை
2004 நாடாளுமன்றம் திருகோணமலை மாவட்டம் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு 21,465 தெரிவு செய்யப்படவில்லை
2008 மாகாணசபை திருகோணமலை மாவட்டம் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு ஐக்கிய தேசிய முன்னணி தெரிவு
2010 நாடாளுமன்றம் திருகோணமலை மாவட்டம் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு ஐக்கிய தேசிய முன்னணி 23,588 தெரிவு
2015 நாடாளுமன்றம் திருகோணமலை மாவட்டம் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு ஐக்கிய தேசிய முன்னணி தெரிவு செய்யப்படவில்லை
2020 நாடாளுமன்றம்[23] திருகோணமலை மாவட்டம் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு ஐக்கிய மக்கள் சக்தி 43,759 தெரிவு

மேற்கோள்கள்[தொகு]

  1. "Directory of Members: M.S. Thowfeek". இலங்கை நாடாளுமன்றம்.
  2. "General Election 2000 Preferences" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2016-01-30.
  3. Farook, Latheef (23 December 2014). "SLMC: Liability on the Muslim community". டெய்லி எஃப்டி இம் மூலத்தில் இருந்து 24 செப்டம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924043125/http://www.ft.lk/2014/12/23/slmc-liability-on-the-muslim-community/. 
  4. Satyapalan, Franklin R. (21 June 2001). "SLMC-NUA quit PA coalition". தி ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 3 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160303195512/http://www.island.lk/2001/06/21/news02.html. 
  5. "Sri Lanka govt. faces collapse as Muslims leave". தமிழ்நெட். 20 June 2001. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=6089. 
  6. "UNP to contest as UNF with elephant symbol". தமிழ்நெட். 21 October 2001. https://www.tamilnet.com/art.html?catid=13&artid=6403. 
  7. Ferdinando, Shamindra (28 July 2002). "The voters could not keep some lucky guys out of parliament". தி ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 29 மார்ச் 2003 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20030329212035/https://island.lk/2002/07/28/featur03.html. 
  8. "National List MPs". டெய்லி நியூசு. 12 December 2001. http://archives.dailynews.lk/2001/12/12/pol02.html. 
  9. "SLMC submits National List". தி ஐலண்டு. 12 December 2001 இம் மூலத்தில் இருந்து 22 மே 2003 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20030522065646/http://origin.island.lk/2001/12/12/news07.html. 
  10. "General Election 2004 Preferences" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2010-03-04. பார்க்கப்பட்ட நாள் 2016-01-30.
  11. "PART I : SECTION (I) — GENERAL Government Notifications PROVINCIAL COUNCILS ELECTIONS ACT, No. 2 OF 1988 Eastern Province Provincial Council". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1549/17. 15 May 2008. http://www.documents.gov.lk/Extgzt/2008/pdf/May/1549_17/1549_17E.pdf. பார்த்த நாள்: 30 ஜனவரி 2016. 
  12. "Parliamentary General Election - 2010 Trincomalee Preferences" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2010-05-13. பார்க்கப்பட்ட நாள் 2016-01-30.
  13. "PART I : SECTION (I) — GENERAL Appointments & c., by the President". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1898/70. 23 January 2015. http://www.documents.gov.lk/Extgzt/2015/PDF/Jan/1898_70/1898_70%20%28E%29.pdf. பார்த்த நாள்: 30 ஜனவரி 2016. 
  14. "Ranjan Social Services Dy Minister". டெய்லிமிரர். 21 January 2015. http://www.dailymirror.lk/61819/rtu. 
  15. "More new ministers sworn in". த நேசன். 21 January 2015 இம் மூலத்தில் இருந்து 28 ஜனவரி 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150128140802/http://www.nation.lk/edition/breaking-news/item/37574-more-new-ministers-sworn-in.html. 
  16. "PART I : SECTION (I) — GENERAL Government Notifications THE PARLIAMENTARY ELECTIONS ACT, No. 1 OF 1981 Notice Under Section 24(1) GENERAL ELECTIONS OF MEMBERS OF THE PARLIAMENT". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1923/03. 13 July 2015. http://www.documents.gov.lk/Extgzt/2015/PDF/Jul/1923_03/1923_03E.pdf. பார்த்த நாள்: 30 ஜனவரி 2016. 
  17. "Ranil tops with over 500,000 votes in Colombo". டெய்லிமிரர். 19 August 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo. 
  18. "PART I : SECTION (I) — GENERAL Government Notifications THE PARLIAMENTARY ELECTIONS ACT, No. 1 OF 1981 Filling of a vacancy under Section 64 (5)". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1950/50. 22 January 2016. http://www.documents.gov.lk/Extgzt/2016/PDF/Jan/1950_50/G%2022916%20%20E.pdf. [தொடர்பிழந்த இணைப்பு]
  19. "Thowfeek sworn in as MP". டெய்லிமிரர். 26 January 2016. http://www.dailymirror.lk/104243/thowfeek-sworn. 
  20. "M.S Thowfeek takes oath as MP". டெய்லிநியூசு. 26 January 2016. http://www.dailynews.lk/?q=2016/01/26/local/ms-thowfeek-takes-oath-mp. 
  21. "Part I : Section (I) — General - Government Notifications - Parliamentary Elections Act, No. 1 of 1981" (PDF). இலங்கை அரச வர்த்தமானி Extraordinary. No. 2187/26. Colombo, Sri Lanka. 8 August 2020. p. 7A. பார்க்கப்பட்ட நாள் 9 August 2020.
  22. "General Election 2020: Preferential votes of Trincomalee District". Ceylon Today (Colombo, Sri Lanka). 7 August 2020 இம் மூலத்தில் இருந்து 24 செப்டம்பர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200924220408/https://ceylontoday.lk/news/general-election-2020-preferential-votes-of-trincomalee-district. பார்த்த நாள்: 14 September 2020. 
  23. "General Election Preferential Votes". Daily News (Colombo Sri Lanka, Sri Lanka): p. 2. 8 August 2020. http://www.dailynews.lk/2020/08/08/political/225317/general-election-preferential-votes. பார்த்த நாள்: 20 September 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._எஸ்._தௌஃபீக்&oldid=3593826" இலிருந்து மீள்விக்கப்பட்டது