கோவிந்தன் கருணாகரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜனா கருணாகரன்
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2020
பதவியில்
1989–1994
மட்டகக்ளப்பு மாவட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்
பதவியில்
2012–2017
தனிநபர் தகவல்
பிறப்பு கோவிந்தன் கருணாகரன்
1 அக்டோபர் 1963 (1963-10-01) (அகவை 59)
அரசியல் கட்சி டெலோ
பிற அரசியல்
சார்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

ஜனா என அழைக்கப்படும் கோவிந்தன் கருணாகரன் (Govinthan Karunakaran; பிறப்பு: 1 அக்டோபர் 1963), இலங்கைத் தமிழ் அரசியல்வாதி ஆவார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

கருணாகரன் 1963 அக்டோபர் 1 இல் பிறந்தார்.[1][2] செட்டிப்பாளையம் மகா வித்தியாலயத்திலும், புனித மிக்கேல் கல்லூரி தேசியப் பாடசாலையிலும் கல்வி கற்றார்.[2] தமிழருக்கு எதிரான கறுப்பு யூலை வன்முறைகளை அடுத்து இவர் 1983 ஆகத்து மாதத்தில் பாடசாலையை விட்டு வெளியேறி, 1983 நவம்பரில் தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) என்ற ஈழப் போராட்டக் குழுவில் இணைந்தார்.[2][3] ஆயுதப் பயிற்சியைப் பெற்றுக் கொண்டு, 1987 சூனில் அம்பாறை-மட்டக்களப்பு மாவட்ட டெலோவில் பிராந்தியத் தலைவரானார்.[2] பின்னர் டெலோவின் பொதுச் செயலாளரானார்.[2]

தேர்தல் அரசியலில்[தொகு]

கருணாகரன் 1989 நாடாளுமன்றத் தேர்தலில் ஈஎன்டிஎல்எஃப்/ஈபிஆர்எல்எப்/டெலோ/தவிகூ வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார்.[4] 2012 மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்திஒல் போட்டியிட்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினரானார்.[5][6]

கருணாகரன் 2015 நாடாளுமன்றத் தேர்தலில் ததேகூ வேட்பாளராகப் போட்டியிட்டுத் தெரிவாகவில்லை.[7][8] 2020 நாடாளுமன்றத் தேர்தலில் ததேகூ வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.[9][10]

கோ. கருணாகரனின் தேர்தல் வரலாறு
தேர்தல் தொகுதி கட்சி கூட்டணி வாக்குகள் முடிவு
1989 நாடாளுமன்றம்[4] மட்டக்களப்பு மாவட்டம் தமிழீழ விடுதலை இயக்கம் ஈதேசவிமு/ஈபுவிமு/டெலோ/தவிகூ 25,651 தெரிவு
2012 மாகாணசபை[11] மட்டக்களப்பு மாவட்டம் தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16,536 தெரிவு
2015 நாடாளுமன்றம் மட்டக்களப்பு மாவட்டம் தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவு செய்யப்படவில்லை
2020 நாடாளுமன்றம்[10] மட்டக்களப்பு மாவட்டம் தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 26,382 தெரிவு

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 "Directory of Members: Govindan Karunakaram". Sri Jayawardenepura Kotte, Sri Lanka: இலங்கை நாடாளுமன்றம். 13 September 2020 அன்று பார்க்கப்பட்டது.
 2. 2.0 2.1 2.2 2.3 2.4 de Silva, W. P. P.; Ferdinando, T. C. L.. 9th Parliament of Sri Lanka. Colombo Sri Lanka: Associated Newspapers of Ceylon Limited. பக். 268. Archived from the original on 23 June 2015. https://web.archive.org/web/20150623233447/http://noolaham.net/project/148/14715/14715.pdf. 
 3. D. B. S. Jeyaraj (8 August 2020). "TNA suffers electoral setback in North and East polls". Daily Mirror (Colombo, Sri Lanka). http://www.dailymirror.lk/opinion/TNA-suffers-electoral-setback-in-North-and-East-polls/172-193440. பார்த்த நாள்: 13 September 2020. 
 4. 4.0 4.1 "Results of Parliamentary General Election – 1989" (PDF). Rajagiriya, Sri Lanka: Election Commission of Sri Lanka. p. 33. 13 September 2020 அன்று பார்க்கப்பட்டது.
 5. "Preferential votes". Daily News (Colombo, Sri Lanka). 10 September 2012. http://archives.dailynews.lk/2012/09/10/pol08.asp. பார்த்த நாள்: 13 September 2020. 
 6. "Eastern Province Chief Minister assumes duties". Sunday Times (Colombo, Sri Lanka). 30 September 2012. http://www.sundaytimes.lk/120930/news/eastern-province-chief-minister-assumes-duties-14666.html. பார்த்த நாள்: 13 September 2020. 
 7. "Part I : Section (I) — General - Government Notifications - The Parliamentary Elections Act, No. 1 of 1981" (PDF). இலங்கை அரச வர்த்தமானி Extraordinary. எண். 1923/3. Colombo, Sri Lanka. 13 July 2015. p. 269A. 11 August 2015 அன்று பார்க்கப்பட்டது.
 8. "Ranil tops with over 500,000 votes in Colombo". Daily Mirror (Colombo, Sri Lanka). 19 August 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo. பார்த்த நாள்: 13 September 2020. 
 9. "Part I : Section (I) — General - Government Notifications - Parliamentary Elections Act, No. 1 of 1981" (PDF). இலங்கை அரச வர்த்தமானி Extraordinary. எண். 2187/26. Colombo, Sri Lanka. 8 August 2020. p. 6A. 9 August 2020 அன்று பார்க்கப்பட்டது.
 10. 10.0 10.1 "General Election 2020: Preferential votes of Batticaloa District". Ceylon Today (Colombo, Sri Lanka). 7 August 2020. Archived from the original on 27 அக்டோபர் 2020. https://web.archive.org/web/20201027100203/https://ceylontoday.lk/news/general-election-2020-preferential-votes-of-batticaloa-district. பார்த்த நாள்: 13 September 2020. 
 11. "Batticaloa preferences" (PDF). Rajagiriya, Sri Lanka: Department of Elections. p. 1. 29 April 2014 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவிந்தன்_கருணாகரன்&oldid=3433972" இருந்து மீள்விக்கப்பட்டது