ரவூப் ஹக்கீம்
ரவூப் ஹக்கீம் Rauff Hakeem | |
---|---|
![]() | |
நகர அபிவிருத்தி, மற்றும் நீர்ப்பாசனம், நீர்விநியோக அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 12 சனவரி 2015 | |
குடியரசுத் தலைவர் | மைத்திரிபால சிறிசேன |
பிரதமர் | ரணில் விக்கிரமசிங்க |
நீதி அமைச்சர் | |
பதவியில் 22 நவம்பர் 2010 – 28 டிசம்பர் 2014 | |
முன்னவர் | அத்தாவுட செனிவிரத்தின |
தபால், தொலைத்தொடர்பு அமைச்சர் | |
பதவியில் 2005–2010 | |
கண்டி மாவட்டம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | ஏப்ரல் 13, 1960 நாவலப்பிட்டி |
தேசியம் | இலங்கையர் |
அரசியல் கட்சி | சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு |
வாழ்க்கை துணைவர்(கள்) | சானாசு அக்கீம் |
இருப்பிடம் | 263, காலி வீதி, Colombo 03 |
படித்த கல்வி நிறுவனங்கள் | கொழும்பு றோயல் கல்லூரி |
பணி | வழக்கறிஞர் |
தொழில் | LLB, LLM |
சமயம் | இசுலாம் |
அப்துல் ரவூப் ஹக்கீம் (Abdul Rauff Hakeem, பிறப்பு: ஏப்ரல் 13, 1960), இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், முசுலிம் அரசியல்வாதியும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், வழக்கறிஞரும் ஆவார். இவர் 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணியில் கண்டி மாவட்டத்தில் இருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் ஆவார். இவர் 1994, 2000, 2001, 2004 தேர்தல்களிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.[1] இவர் 2015 செப்டம்பர் 4 அன்று நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[2][3] [4]
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்[தொகு]
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நிறுவனத் தலைவர் எம். எச். எம். அஷ்ரப் உலங்குவானூர்தி விபத்தில் இறந்ததை அடுத்து இவர் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். 2010 நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசிய கட்சி செய்து கொண்ட உடன்படிக்கைக்கமைய ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்று பின்பு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் இணைந்து அமைச்சரானார். 2014 டிசம்பர் 28 அன்று சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அரசில் இருந்து விலகி அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடும் கூட்டு எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு தமது ஆதரவைத் தெரிவித்தது. ரவூப் ஹக்கீம் அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.[5]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ ரவூப் ஹக்கீம்
- ↑ "இலங்கையின் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது". பிபிசி தமிழ் (4 செப்டம்பர் 2015). பார்த்த நாள் 4 செப்டம்பர் 2015.
- ↑ http://www.priu.gov.lk/Govt_Ministers/Indexministers.html
- ↑ http://www.news.lk/news/sri-lanka/item/9565-new-ministers-sworn-in
- ↑ SLMC pledges support to MS, தி ஐலண்டு, டிசம்பர் 29, 2014
- 1960 பிறப்புகள்
- இலங்கை முசுலிம் அரசியல்வாதிகள்
- இலங்கையின் 10வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 11வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 12வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 13வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 14வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- கொழும்பு றோயல் கல்லூரி பழைய மாணவர்கள்
- இலங்கையின் நீதி அமைச்சர்கள்
- வாழும் நபர்கள்
- கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள்
- இலங்கை வழக்கறிஞர்கள்
- சிறீலங்கா முசுலிம் காங்கிரசு அரசியல்வாதிகள்
- இலங்கையின் 15வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- கண்டி மாவட்ட நபர்கள்
- இருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்
- இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்