ரிசாத் பதியுதீன்
ரிசாட் பதியுதீன் Rishad Bathiudeen | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் வன்னி மாவட்டம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2001 | |
கைத்தொழில், வர்த்தகத்துறை அமைச்சர் | |
பதவியில் 23 ஏப்ரல் 2010 – 3 சூலை 2019 | |
குடியரசுத் தலைவர் | மைத்திரிபால சிறிசேன மகிந்த ராசபக்ச |
பிரதமர் | ரணில் விக்கிரமசிங்க தி. மு. ஜயரத்ன |
மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | நவம்பர் 27, 1972 |
தேசியம் | இலங்கைn |
அரசியல் கட்சி | அகில இலங்கை மக்கள் காங்கிரசு |
பிற அரசியல் தொடர்புகள் | ஐக்கிய மக்கள் சக்தி |
வாழிடம்(s) | 26B Summit Flats, Keppetipola Mawatha, கொழும்பு 05 |
முன்னாள் கல்லூரி | மொறட்டுவைப் பல்கலைக்கழகம் |
தொழில் | குடிசார் பொறியாளர் |
இணையத்தளம் | http://www.rishadbathiudeen.lk |
ரிசாத் பதியுதீன் (Rishad Bathiudeen, பிறப்பு: நவம்பர் 27, 1972) இலங்கை முசுலிம் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சரும் ஆவார். அகில இலங்கை மக்கள் காங்கிரசு கட்சியின் நிறுவனத் தலைவர் ஆவார். இவர் நாடாளுமன்ற உறுப்பினராக வன்னி மாவட்டத்தில் இருந்து 2001 தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004, 2010, 2015, 2020 தேர்தல்களில் மீண்டும் தெரிவானார். மகிந்த ராசபக்ச, மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைகளில் மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சராகவும், கைத்தொழில், வர்த்தகத்துறை அமைச்சராகவும் பதவியில் இருந்தார்.[1][2][3] ரிசாத் பதியுதீன் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் படித்து குடிசார் பொறியியலில் தொழிநுட்பத்தில் தேசிய டிப்புளோமா பட்டம் பட்டம் பெற்றவர்.
கைது
[தொகு]2019 அரசுத்தலைவர் தேர்தலின் போது, மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த ரிஷாட் பதியுதீன், 222 அரசு பேருந்துகள் மூலம் இடம்பெயர்ந்த வாக்காளர்களை மன்னாருக்கு அழைத்துச் சென்றதன் மூலம் தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் அவரது அமைச்சின் கீழிருந்த ரூபா 95 இலட்சத்திற்கும் அதிகமான நிதியை முறைகேடாக பயன்பத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில், பதியுதீன் மீது குற்றம்சாட்டப்பட்டு, 2020 அக்டோபர் 19 இல் அவரது தெகிவளை வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.[4] பின்னர் 2020 நவம்பர் 25 இல் பிணையில் விடுவிக்கப்பட்டார்.[5]
2021 ஏப்ரல் 24 அதிகாலையில் 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களுக்கு உதவினார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், ரிசாட் பதியுதீனும், அவரது சகோதரர் ரியாச் பதியுதீனும் குற்றப் புலனாய்வுத் துறையினரால் அவர்களது வீடுகளில் வைத்துக் கைது செய்யப்பட்டனர்.[6]
2021 மலையகப் பெண்கள் மரணத்தில்
[தொகு]இவரது வீட்டில் பணிப்பெண்களாக இருந்த மலையகத் தமிழ்ப் பெண்களின் மரணத்தில் இவரது குடும்பத்தினரை 23 சூலை 2021 அன்று காவல்துறை விசாரனைக்கு ஆட்படுத்தப்பட்டனர்.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "இலங்கையின் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது". பிபிசி தமிழ். 4 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 4 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2003-12-04. பார்க்கப்பட்ட நாள் 2015-09-04.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-09-06. பார்க்கப்பட்ட நாள் 2015-09-04.
- ↑ "Rishad Bathiudeen arrested by CID". News First. பார்க்கப்பட்ட நாள் 20 October 2020.
- ↑ "MP Rishad Bathiudeen released on bail". Colombo Page. பார்க்கப்பட்ட நாள் 24 ஏப்ரல் 2021.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "CID arrests MP Rishad Bathiudeen and his brother". Colombo Page. பார்க்கப்பட்ட நாள் 24 ஏப்ரல் 2021.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ இலங்கை எம்.பி. ரிஷாட் வீட்டில் மலையக சிறுமி மர்ம சாவு: மேலும் சிலர் பாதிப்பு எனப் புகார்
வெளி இணைப்புகள்
[தொகு]- இலங்கை முசுலிம் அரசியல்வாதிகள்
- 1972 பிறப்புகள்
- வாழும் நபர்கள்
- இலங்கையின் 12வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 13வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 14வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 15வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- மன்னார் மாவட்ட நபர்கள்
- ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி அரசியல்வாதிகள்
- இலங்கை அமைச்சர்கள்
- இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்
- இலங்கையின் 16வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் வட மாகாண நபர்கள்