உள்ளடக்கத்துக்குச் செல்

ஏ. எல். எம். அதாவுல்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏ. எல். எம். அதாவுல்லா
நாடாளுமன்ற உறுப்பினர்
திகாமடுல்லை மாவட்டம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅக்டோபர் 6, 1957 (1957-10-06) (அகவை 67)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
பணிஅரசியல்வாதி
தொழில்பயிற்றப்பட்ட ஆசிரியர்
சமயம்இசுலாம்

ஏ. எல். எம். அதாவுல்லா (A. L. M. Athaullah, பிறப்பு: அக்டோபர் 6, 1957), ஒரு இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில்,(சுதந்திர இலங்கையின் 14 ஆவது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் திகாமடுல்லை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சராகவும் உள்ளார். சுதந்திர இலங்கையின் 11ஆவது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12ஆவது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 ஆவது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.[1][2]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

கொழும்பு 05, C37, கெப்படிபொல மாவத்தையில் வசிக்கும் இவர் இசுலாம் மதத்தைச் சேர்ந்தவர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Parliament of Sri Lanka - A. L. M. Athaullah". www.parliament.lk (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 2025-04-01.
  2. "Athaullah pledges support to President - Breaking News". www.dailymirror.lk (in ஆங்கிலம்). Retrieved 2025-04-01.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._எல்._எம்._அதாவுல்லா&oldid=4242690" இலிருந்து மீள்விக்கப்பட்டது