அங்கஜன் இராமநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அங்கஜன் இராமநாதன்
Angajan Ramanathan

நா.உ
தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2015
யாழ்ப்பாண மாவட்டத்துக்கான வட மாகாண சபை உறுப்பினர்
பதவியில்
17 அக்டோபர் 2013 – ஆகத்து 2015
தனிநபர் தகவல்
பிறப்பு 9 சூலை 1983 (1983-07-09) (அகவை 34)
தேசியம் இலங்கைத் தமிழர்
அரசியல் கட்சி இலங்கை சுதந்திரக் கட்சி
பிற அரசியல்
சார்புகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
சமயம் இந்து

அங்கஜன் இராமநாதன் (பிறப்பு: 9 சூலை 1983)[1] இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இலங்கை சுதந்திரக் கட்சி உறுப்பினரான இவர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினரானார்.[2]

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

அங்கஜன் இராமநாதன் 1983 சூலை 9 இல் சதாசிவம் இராமநாதன் என்பவருக்குப் பிறந்தவர். தந்தை சதாசிவம் இராமநாதன் முன்னாள் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவின் சகோதரர் பசில் ராஜபக்சவின் நெருங்கிய சகாவாக இருந்தவர்.[3] சதாசிவம் ஈழப்போர்க் காலத்தில் வெளிநாடுகளுக்கு அகதிகளை அனுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு பெரும் பொருள் ஈட்டியவர்.[4][5]

அரசியலில்[தொகு]

இராமநாதன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் வேட்பாளராக 2010 நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு 3,461 விருப்பு வாக்குகள் பெற்றுத் தோல்வியடைந்தார்.[6] தேர்தல் காலத்தில் இராமநாதனும் அவரது ஆதரவாளர்களும் ஈபிடிபி துணை இராணுவக் குழுவினால் தாக்கப்பட்டனர்.[7] இதற்கு அடுத்த நாள் இராமநாதனின் ஆதரவாளர்கள் யாழ்ப்பாண நகர முதல்வர் யோகேசுவரி பற்குணராஜா மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர், ஆனாலும் அவர் காயமடையவில்லை.[8] 2010 ஆகத்து மாதத்தில் இராமநாதன் இலங்கை சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.[9]

இராமநாதன் 2013 மாகாணசபைத் தேர்தலில் வடமாகாணத்தில் போட்டியிட்டு வட மாகாண சபை உறுப்பினரானார்.[10][11]

2015 நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார். ஆனாலும், அவர் ஐமசுகூ இன் தேசியப் பட்டியலூடாக நாடாளுமன்றம் சென்றார்.[12][13]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Directory of Members: Angajan Ramanathan". இலங்கை நாடாளுமன்றம்.
 2. Balachandran, P. K. (22 ஆகத்து 2015). "SL President Sirisena Gains Control Over Parliament And Party". The New Indian Express. http://www.newindianexpress.com/world/SL-President-Sirisena-Gains-Control-Over-Parliament-And-Party/2015/08/22/article2986881.ece1. பார்த்த நாள்: 1 செப்டம்பர் 2015. 
 3. ரத்னஜீவன் ஹூல் (14 செப்டம்பர் 2013). "The Collapsing Den of Thieves". Sri Lanka Guardian. http://www.srilankaguardian.org/2013/09/the-collapsing-den-of-thieves.html. 
 4. "Big time racket of former a human smuggler and a paramilitary leader". Sri Lanka Guardian. 23 சனவரி 2012. http://www.srilankaguardian.org/2012/01/big-time-racket-of-former-human.html. 
 5. Jayadevan, Rajasingham (9 செப்டம்பர் 2013). "Inevitable TNA victory". Sri Lanka Guardian. http://www.slguardian.org/inevitable-tna-victory/. 
 6. "Parliamentary General Election - 2010 Jaffna Preferences". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
 7. "SLFP candidate attacked in Jaffna". தமிழ்நெட். 1 ஏப்ரல் 2010. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=31469. 
 8. "Ruling UPFA Mayor of Jaffna reports of an attempt on her life". தமிழ்நெட். 1 ஏப்ரல் 2010. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=31473. 
 9. "Rajapaksa appoints new SLFP organizer to North". தமிழ்நெட். 22 ஆகத்து 2010. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=32465. 
 10. "PART I : SECTION (I) ó GENERAL Government Notifications PROVINCIAL COUNCILS ELECTIONS ACT, No. 2 OF 1988 Northern Province Provincial Council". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1829/33. 25 September 2013. http://www.documents.gov.lk/Extgzt/2013/PDF/Sep/1829_33/PG%201763%20%28E%29%20%20I-%201%20%20%28P.C%29.pdf. 
 11. "PROVINCIAL COUNCIL ELECTIONS 2013 ñ Results and preferential votes: Northern Province". டெய்லிமிரர். 26 செப்டம்பர் 2013. http://www.dailymirror.lk/news/infographics/36078-provincial-council-elections-2013--results-and-preferential-votes-northern-province.html. 
 12. "PART I : SECTION (I) — GENERAL Government Notifications PARLIAMENTARY ELECTION — 2015 Declaration under Article 99A of the Constitution". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1928/25. 21 August 2015. http://www.documents.gov.lk/Extgzt/2015/PDF/Aug/1928_25/1928_25%20E.pdf. 
 13. "UPFA finalises National list". டெய்லிமிரர். 21 ஆகத்து 2015. http://www.dailymirror.lk/84379/upfa-finalises-national-list. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்கஜன்_இராமநாதன்&oldid=2238978" இருந்து மீள்விக்கப்பட்டது