உள்ளடக்கத்துக்குச் செல்

வினோ நோகராதலிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வினோ நோகராதலிங்கம்
Vino Noharathalingam
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
ஆகத்து 2020
தொகுதிவன்னி மாவட்டம்
பதவியில்
2004–2015
தொகுதிவன்னி மாவட்டம்
பதவியில்
2000–2001
தொகுதிவன்னி மாவட்டம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
சுப்பிரமணியம் நோகராதலிங்கம்

7 சூன் 1963 (1963-06-07) (அகவை 61)
அரசியல் கட்சிதமிழீழ விடுதலை இயக்கம்
பிற அரசியல்
தொடர்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

சுப்பிரமணியம் நோகராதலிங்கம், அல்லது பொதுவாக வினோ நோகராதலிங்கம் (பிறப்பு: சூன் 7, 1963) என்பவர் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[1] இவர் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

அரசியலில்

[தொகு]

டெலோ என்ற தமிழீழ விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த வினோ நோகராதலிங்கம் அக்டோபர் 2000 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பட்டியலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார்.[2] 2001 அக்டோபர் 20 இல் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, டெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) என்ற அரசியல் கூட்டை ஆரம்பித்தன.[3][4] டிசம்பர் 2001 தேர்தலில் இவர் டெலோ சார்பில் ததேகூ வேட்பாளராக போட்டியிட்டுத் தேர்வாகவில்லை.[5][6][7]

ஏப்ரல் 2004 தேர்தலில் மீண்டும் போட்டியிட்டுத் தெரிவு செய்யப்பட்டார்.[8] பின்னர் ஏப்ரல் 2010 தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[9][10] 2015 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு ததேகூ உறுப்பினர்களிடையே ஆறாவதாகத் தெரிவாகி, நாடாளுமன்ற வாய்ப்பை இழந்தார்.[11][12][13]

நோகராதலிங்கம் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் மீண்டும் ததேகூ வேட்பாளராகப் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[14][15][16]

தேர்தல் வரலாறு

[தொகு]
வினோ நோகராதலிங்கத்தின் தேர்தல் வரலாறு
தேர்தல் தொகுதி கட்சி கூட்டணி வாக்குகள் முடிவு
2000 நாடாளுமன்றம்[2] வன்னி மாவட்டம் தமிழீழ விடுதலை இயக்கம் 10,959 தெரிவு
2001 நாடாளுமன்றம் வன்னி மாவட்டம் தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவு செய்யப்படவில்லை
2004 நாடாளுமன்றம்[8] வன்னி மாவட்டம் தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 28,252 தெரிவு
2010 நாடாளுமன்றம்[17] வன்னி மாவட்டம் தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 12,120 தெரிவு
2015 நாடாளுமன்றம்[12] வன்னி மாவட்டம் தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 17,721 தெரிவு செய்யப்படவில்லை
2020 நாடாளுமன்றம்[18] வன்னி மாவட்டம் தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 15,180 தெரிவு

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Directory of Members: S. Noharathalingam". Sri Jayawardenepura Kotte, Sri Lanka: இலங்கை நாடாளுமன்றம். பார்க்கப்பட்ட நாள் 25 September 2020.
  2. 2.0 2.1 "Parliamentary General Election - 2000 - Preferences" (PDF). Rajagiriya, Sri Lanka: Department of Elections. p. 5. Archived from the original (PDF) on 4 March 2010.
  3. D. B. S. Jeyaraj (27 March 2010). "Tamil National Alliance enters critical third phase – 1". Daily Mirror (Colombo, Sri Lanka) இம் மூலத்தில் இருந்து 4 April 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100404042520/http://www.dailymirror.lk/print/index.php/opinion1/6933.html. 
  4. "Tamil parties sign MOU". தமிழ்நெட். 20 October 2001. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=6400. பார்த்த நாள்: 25 September 2020. 
  5. "Part I : Section (I) — General - Government Notifications - The Parliamentary Elections Act, No. 1 of 1981 - Notice Under Section 24(1) - General Elections of Members of the Parliament" (PDF). இலங்கை அரச வர்த்தமானி Extraordinary. Colombo, Sri Lanka. 3 November 2001. p. 170A. Archived from the original (PDF) on 6 April 2004.
  6. "Tamil Alliance files nominations in East and Vavuniya". தமிழ்நெட். 26 October 2001. https://www.tamilnet.com/art.html?catid=13&artid=6417. பார்த்த நாள்: 25 September 2020. 
  7. "Parliamentary General Election - 2001 - Preferences" (PDF). Rajagiriya, Sri Lanka: Department of Elections. p. 5. Archived from the original (PDF) on 4 March 2010.
  8. 8.0 8.1 "Parliamentary General Election - 2004 - Preferences" (PDF). Rajagiriya, Sri Lanka: Department of Elections. p. 199. Archived from the original (PDF) on 4 March 2010.
  9. "Part I : Section (I) — General - Government Notifications - The Parliamentary Elections Act, No. 1 of 1981" (PDF). இலங்கை அரச வர்த்தமானி Extraordinary. No. 1649/2. Colombo, Sri Lanka. 12 April 2010. p. 4A. பார்க்கப்பட்ட நாள் 25 April 2010.
  10. "General Elections 2010 -- Preferential Votes". Sunday Times (Colombo, Sri Lanka). 11 April 2010. http://www.sundaytimes.lk/100411/News/page1.pdf. பார்த்த நாள்: 25 September 2020. 
  11. "Part I : Section (I) — General - Government Notifications - The Parliamentary Elections Act, No. 1 of 1981" (PDF). இலங்கை அரச வர்த்தமானி Extraordinary. No. 1923/3. Colombo, Sri Lanka. 13 July 2015. p. 254A. பார்க்கப்பட்ட நாள் 11 August 2015.
  12. 12.0 12.1 "Ranil tops with over 500,000 votes in Colombo". Daily Mirror (Colombo, Sri Lanka). 19 August 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo. பார்த்த நாள்: 25 September 2020. 
  13. "Preferential Votes". Daily News (Colombo, Sri Lanka). 19 August 2015 இம் மூலத்தில் இருந்து 20 August 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20150820025307/http://www.dailynews.lk/?q=political/preferential-votes-2. 
  14. "Part I : Section (I) — General - Government Notifications - Parliamentary Elections Act, No. 1 of 1981" (PDF). இலங்கை அரச வர்த்தமானி Extraordinary. No. 2187/26. Colombo, Sri Lanka. 8 August 2020. p. 5A. பார்க்கப்பட்ட நாள் 9 August 2020.
  15. "General Election 2020: Preferential votes of Vanni District". Ceylon Today (Colombo, Sri Lanka). 7 August 2020 இம் மூலத்தில் இருந்து 27 அக்டோபர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201027100600/https://ceylontoday.lk/news/general-election-2020-preferential-votes-of-vanni-district. பார்த்த நாள்: 25 September 2020. 
  16. D. B. S. Jeyaraj (8 August 2020). "TNA suffers electoral setback in North and East polls". Daily Mirror (Colombo, Sri Lanka). http://www.dailymirror.lk/opinion/TNA-suffers-electoral-setback-in-North-and-East-polls/172-193440. பார்த்த நாள்: 25 September 2020. 
  17. "Parliamentary General Election - 2010 - Vanni Preferences" (PDF). Rajagiriya, Sri Lanka: Department of Elections. Archived from the original (PDF) on 13 May 2010.
  18. "General Election Preferential Votes". Daily News (Colombo Sri Lanka, Sri Lanka): p. 2. 8 August 2020. http://www.dailynews.lk/2020/08/08/political/225317/general-election-preferential-votes. பார்த்த நாள்: 25 September 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வினோ_நோகராதலிங்கம்&oldid=3792580" இலிருந்து மீள்விக்கப்பட்டது