இலங்கையின் 16-வது நாடாளுமன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இலங்கையின் 16-வது நாடாளுமன்றம்
(இலங்கைக் குடியரசின் 9-வது நாடாளுமன்றம்)
15-வது 17-வது
மேலோட்டம்
சட்டப் பேரவைஇலங்கை நாடாளுமன்றம்
கூடும் இடம்இலங்கை நாடாளுமன்றக் கட்டடம்
தவணை20 ஆகத்து 2020 (2020-08-20) –
தேர்தல்5 ஆகத்து 2020
அரசுராஜபக்ச
இணையதளம்parliament.lk
உறுப்பினர்கள்
உறுப்பினர்கள்225
சபாநாயகர்மகிந்த யாப்பா அபேவர்தன (2020-இன்று)
துணை சபாநாயகரும்
குழுக்களின் தலைவரும்
ரஞ்சித் சியம்பலாபிட்டிய (2020-இன்று)
குழுக்களின் துணைத் தலைவர்அங்கஜன் இராமநாதன் (2020-இன்று)
பிரதமர்மகிந்த ராசபக்ச (இபொமு) (2020-இன்று)
எதிர்க்கட்சித் தலைவர்சஜித் பிரேமதாச (2020- )
தலைமை எதிர்க்கட்சிக் கொரடா
  • - () ()
அமைப்பு 16th Sri Lanka Parliment August 2020.svg
அமர்வுகள்
1-வது20 ஆகத்து 2020 –

இலங்கையின் 16-வது நாடாளுமன்றம் (16th Parliament of Sri Lanka) அல்லது இலங்கைக் குடியரசின் 9-வது நாடாளுமன்றம் என்பது 2020 ஆகத்து 20 இல் நடைபெற்ற இலங்கை நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகளின் படி அமைக்கப்பட்ட தற்போதைய இலங்கை நாடாளுமன்றம் ஆகும். இதன் முதலாவது அமர்வு 2020 ஆகத்து 20 இல் இடம்பெற்றது. இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் படி நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் முதலாவது அமர்வில் இருந்து நான்கரை முதல் ஐந்து ஆன்டுகளாகும்.

தேர்தல்[தொகு]

தேர்தல் தொகுதிகளின்படி வெற்றியாளர்கள்

இபொமு ஐமச ததேகூ இசுக ஈமசக – ஏனைய கட்சிகள்

16-வது நாடாளுமன்றத் தேர்தல் 2020 ஆகத்து 5 இல் நடைபெறது.[1] மொத்தமுள்ள 225 இடங்களில் ஆளும் இலங்கை பொதுசன முன்னணி 145 இடங்களைக் கைப்பற்றி பெரும் வெற்றி பெற்றது.[2][3][4] ஐக்கிய மக்கள் சக்தி 54 இடங்களையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 10 இடங்களையும், மக்கள் விடுதலை முன்னணி 3 இடங்களையும் கைப்பற்றின.[5][6][7] முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஒரேயொரு இடத்தை மட்டும் கைப்பற்றி வரலாறு காணாத தோல்வியடைந்தது.[8]

முடிவுகள்[தொகு]

தேசிய வாரியாக[தொகு]

2020 இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[9][10][11]
16th Sri Lanka Parliment August 2020.svg
கட்சிகளும் கூட்டணிகளும் வாக்குகள் % இருக்கைகள்
தேர்தல் மாவட்டம் தேசியப் பட்டியல் மொத்தம் +/–
  6,853,690 59.09 128 17 145 Green Arrow Up Darker.svg50
  2,771,980 23.90 47 7 54 புதியது
  445,958 3.84 2 1 3 Red Arrow Down.svg3
  327,168 2.82 9 1 10 Red Arrow Down.svg6
  ஐக்கிய தேசியக் கட்சி (ரணில் அணி) 249,435 2.15 0 1 1 Red Arrow Down.svg105
  67,766 0.58 1 1 2 Green Arrow Up Darker.svg2
67,758 0.58 0 1 1 Green Arrow Up Darker.svg1
  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 67,692 0.58 1 0 1 Green Arrow Up Darker.svg1
  இலங்கை சுதந்திரக் கட்சி[v] 66,579 0.57 1 0 1 Green Arrow Up Darker.svg1
  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 61,464 0.53 2 0 2 Green Arrow Up Darker.svg1
முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு 55,981 0.48 1 0 1 Green Arrow Up Darker.svg1
  51,301 0.44 1 0 1 Green Arrow Up Darker.svg1
  அகில இலங்கை மக்கள் காங்கிரசு[vi] 43,319 0.37 1 0 1 Green Arrow Up Darker.svg1
  தேசியக் காங்கிரஸ்[ii] 39,272 0.34 1 0 1 Green Arrow Up Darker.svg1
  சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு[vii] 34,428 0.30 1 0 1 Straight Line Steady.svg
ஐக்கிய அமைதிக் கூட்டணி 31,054 0.27 0 0 0 Straight Line Steady.svg
  அகில இலங்கைத் தமிழர் மகாசபை 30,031 0.26 0 0 0 Straight Line Steady.svg
  தேசிய அபிவிருத்தி முன்னணி 14,686 0.13 0 0 0 Straight Line Steady.svg
  முன்னிலை சோசலிசக் கட்சி 14,522 0.13 0 0 0 Straight Line Steady.svg
தமிழர் சோசலிச சனநாயகக் கட்சி 11,464 0.10 0 0 0 Straight Line Steady.svg
  தமிழர் விடுதலைக் கூட்டணி 9,855 0.08 0 0 0 Straight Line Steady.svg
இலங்கை சோசலிசக் கட்சி 9,368 0.08 0 0 0 Straight Line Steady.svg
மக்கள் நல முன்னணி 7,361 0.06 0 0 0 Straight Line Steady.svg
சிங்கள தேசிய முன்னணி 5,056 0.04 0 0 0 Straight Line Steady.svg
  புதிய சனநாயக முன்னணி 4,883 0.04 0 0 0 Straight Line Steady.svg
ஐக்கிய இடது முன்னணி 4,879 0.04 0 0 0 Straight Line Steady.svg
  இலங்கை லிபரல் கட்சி 4,345 0.04 0 0 0 Straight Line Steady.svg
  தேசிய மக்கள் கட்சி 3,813 0.03 0 0 0 Straight Line Steady.svg
  சனநாயக ஐக்கிய தேசிய முன்னணி 3,611 0.03 0 0 0 Straight Line Steady.svg
தேசிய சனநாயக முன்னணி 3,488 0.03 0 0 0 Straight Line Steady.svg
  இலங்கைத் தொழிற் கட்சி 3,134 0.03 0 0 0 Straight Line Steady.svg
  சனநாயக இடது முன்னணி 2,964 0.03 0 0 0 Straight Line Steady.svg
புதிய சிங்கள மரபு 1,397 0.01 0 0 0 Straight Line Steady.svg
  ஐக்கிய சோசலிசக் கட்சி 1,189 0.01 0 0 0 Straight Line Steady.svg
தாய்நாடு மக்கள் கட்சி 1,087 0.01 0 0 0 Straight Line Steady.svg
  ஈழவர் சனநாயக முன்னணி 1,035 0.01 0 0 0 Straight Line Steady.svg
  சோசலிச சமத்துவக் கட்சி 780 0.01 0 0 0 Straight Line Steady.svg
  லங்கா சமசமாஜக் கட்சி[iv] 737 0.01 0 0 0 Straight Line Steady.svg
அனைத்துக் குடிகளும் மன்னர்களே அமைப்பு 632 0.01 0 0 0 Straight Line Steady.svg
  சனநாயக ஒற்றுமைக் கூட்டணி 145 0.00 0 0 0 Straight Line Steady.svg
  சுயேச்சைகள் 223,622 1.93 0 0 0 Straight Line Steady.svg
செல்லுபடியான வாக்குகள் 11,598,929 100% 196 29 225 Straight Line Steady.svg
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 744,373 6.03%
மொத்த வாக்குகள் 12,343,302
பதிவு செய்த வாக்காளர்கள்/வாக்குவீதம் 16,263,885 75.89%

மேற்கோள்கள்[தொகு]