மனோ கணேசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மனோ கணேசன்
Mano Ganesan at Bring Them Home event.jpg
ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர்
சனநாயகத் தொழிலாளர் காங்கிரசின் தலைவர்
கொழும்பு மாவட்டம் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2001–2010
தனிநபர் தகவல்
பிறப்பு திசம்பர் 17, 1959 (1959-12-17) (அகவை 55)
அரசியல் கட்சி ஜனநாயக மக்கள் முன்னணி
பிற அரசியல்
சார்புகள்
ஐக்கிய தேசிய முன்னணி
பணி தொழிற்சங்கவாதி, அரசியல்வாதி
சமயம் இந்து

மனோ கணேசன் (Mano Ganesan, பிறப்பு: டிசம்பர் 17, 1959) இலங்கை அரசியல்வாதியும், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், சனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் என்ற தொழிற்சங்கத்தின் தலைவரும் ஆவார். இவர் 2001 முதல் 2010 வரை நாடாளுமன்ற உறுப்பினராக கொழும்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளராகவும் பணியாற்றுகிறார்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

மனோ கணேசன் பிரபல தமிழ் தொழிற்சங்கவாதியும், திரைப்பட நடிகரும், இயக்குனருமான மறைந்த வி. பி. கணேசனின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசனின் உடன்பிறந்தவரும் ஆவார்.[1]

அரசியலில்[தொகு]

மனோ கணேசன் முதன் முதலில் மேல் மாகாண சபையில் மேலக மக்கள் முன்னணி என்ற தனது அரசியல் கட்சி உறுப்பினராக அரசியலில் இறங்கினார். இலங்கை நாடாளுமன்றத்திற்கு முதன் முதலில் 2001 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2004 தேர்தலில் தனது சனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணி கூட்டணியில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2010 தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி கூட்டணியில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார். அதே வேளையில் கொழும்பு மாவட்டத்தில் சனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் போட்டியிட்ட இவரது சகோதரர் பிரபா கணேசன் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். ஆனாலும், பிரபா கணேசன் பின்னர் இக்கட்சியில் இருந்து விலகி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் இணைந்து கொண்டார்[2].

அமெரிக்காவின் விடுதலைக் காப்பாளர்கள் விருது[தொகு]

அமெரிக்காவின் விடுதலைக் காப்பாளர் விருது (Freedom Defender’s Award) மனித உரிமைகளுக்கான சிம்பாப்வே வழக்கறிஞர்களுக்கும், மனோ கணேசனுக்கும் வழங்கப்படுவதாக 2007 டிசம்பர் 10 இல் அமெரிக்காவின் அப்போதைய அரசுச் செயலாளர் காண்டலீசா ரைஸ் வாசிங்டன், டி. சி.யில் அறிவித்தார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Voting for a cause... Nation - September 12, 2010
  2. பிரபா, திகாம்பரம் அரசில் இணைவு, தினகரன், ஆகத்து 6, 2012
  3. "Mano Ganesan to receive US Freedom Defenders Award". TamilWeek TW news-features (December 11, 2007). பார்த்த நாள் 2007-12-14.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனோ_கணேசன்&oldid=1671818" இருந்து மீள்விக்கப்பட்டது