உள்ளடக்கத்துக்குச் செல்

பிரபா கணேசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரபா கணேசன்
தொ­லைத்­தொ­டர்பு, தகவல் தொழில்­நுட்ப பிரதி அமைச்­ச­ர்
பதவியில்
21 ஆகத்து 2014 – ஆகத்து 2015
இலங்கை நாடாளுமன்றம்
கொழும்பு
பதவியில்
2010–2015
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசனவரி 4, 1964 (1964-01-04) (அகவை 60)
இலங்கை
வேலைஅரசியல்வாதி

பிரபா கணேசன் ( Praba Ganeshan, பிறப்பு: சனவரி 4 1964), இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், சனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆவார். இவர் இலங்கையின் 7வது நாடாளுமன்றத்திற்கான, 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் கொழும்பு மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். இவர் பின்னர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் இணைந்தார். 2014 ஆகத்து 21 இல் இவருக்கு தொ­லைத்­தொ­டர்பு, தகவல் தொழில்­நுட்ப பிரதி அமைச்­ச­ர் பதவி வழங்கப்பட்டது.[1]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

பிரபா கணேசன் பிரபல நடிகர் வி. பி. கணேசனின் மகனும், அரசியல்வாதி மனோ கணேசனின் சகோதரரும் ஆவார். கொழும்பு உவெசுலி கல்லூரியில் கல்வி பயின்றார். ஆரம்பத்தில் மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணி கட்சியில் இணைந்திருந்த இவர் 2010 தேர்தலில் இக்கட்சியின் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணி கூட்டணியின் கீழ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற சில நாட்களிலேயே இவர் ஜனநாயக மக்கள் முன்னணியில் இருந்து விலகி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் இணைந்தார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Two More New Tamil Deputy Ministers, ஏசியன் டிரிபியூன், ஆகத்து 21, 2014

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரபா_கணேசன்&oldid=3013874" இலிருந்து மீள்விக்கப்பட்டது