உவெசுலி கல்லூரி, கொழும்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உவெசுலி கல்லூரி, கொழும்பு
Wesley College, Colombo
Wesley College, Colombo, Sri Lanka (crest and logo).png
குறிக்கோளுரைOra Et labora
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
Pray and labour on
உருவாக்கம்மார்ச்சு 2, 1874
சார்புமெதடிசத் திருச்சபை
முதல்வர்ஷாந்தி மெக்லலண்ட் (2009-இன்று)
நிருவாகப் பணியாளர்
275
மாணவர்கள்3500
அமைவிடம்தெமட்டகொடை, கொழும்பு 9, மேற்கு மாகாணம், இலங்கை
Colorsஇரட்டை நீலம் (கருநீலம், இளநீலம்)
இணையதளம்http://www.wesleycollege.lk

உவெசுலி கல்லூரி (Wesley College, வெஸ்லி கல்லூரி) இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் ஆண்கள் பள்ளி ஆகும். இது 1874, மார்ச் 2 இல் நிறுவப்பட்டது.

1874 மார்ச் 2 ஆம் நாள் மெதடிஸ்தத் திருச்சபையின் நிறுவனர் ஜோன் உவெசுலியின் நினைவாக அவரது நினைவு நாள் அன்று கொழும்பின் நடுப்பகுதியில் புறக்கோட்டையில் டாம் வீதியில் கொழும்பு மெதடிஸ்த திருச்சபையினரால் உவெசுலி கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து கொழும்பில் பொரல்லைக்கு இடமாற்றப்பட்டது. இக்கல்லூரியின் முதல் அதிபராக வண. சாமுவேல் வில்க்கின் பணியாற்றினார். இப்பாடசாலை முக்கியமாக சீர்திருத்தக் கிறித்தவர்களுக்கு என ஆரம்பிக்கப்பட்டதாயினும், இப்போது இங்கு பல மதத்தவர்களும் ஆங்கிலம், சிங்களம், தமிழ் என மூன்று மொழிகளிலும் ஆரம்ப, மற்றும் இடைநிலைக் கல்வியைப் பெறுகின்றனர். இப்பள்ளியில் ஆண்டு ஒன்று முதல் 13 வரை வகுப்புகள் நடைபெறுகின்றன.

உவெசுலி கல்லூரியில் படித்தவர்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]