அமீர் அலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எம். எஸ். எஸ். அமீர் அலி
M. S. S. Ameer Ali

நா.உ
அனர்த்த நிவாரண சேவைகளுக்கான அமைச்சர்
பதவியில்
2007–2010
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
17 ஆகத்து 2015
பதவியில்
02 ஏப்ரல் 2004 – 08 ஏப்ரல் 2010
தனிநபர் தகவல்
பிறப்பு மார்ச்சு 9, 1961 (1961-03-09) (அகவை 60)
அரசியல் கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரசு

எம். எஸ். எஸ். அமீர் அலி (M. S. S. Ameer Ali, பிறப்பு: 20 டிசம்பர் 1961) இலங்கை முசுலிம் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சரும் ஆவார்.[1] இவர் அகில இலங்கை மக்கள் காங்கிரசு கட்சியின் உறுப்பினர் ஆவார்.

அரசியலில்[தொகு]

அமீர் அலி ஆரம்பத்தில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு கட்சியின் சார்பில் 2004 தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 21,232 விருப்பு வாக்குகள் பெற்று கட்சியில் முதலிடத்தில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[2]

2008 ஆம் ஆண்டில் இவர் முசுலிம் காங்கிரசு கட்சியில் இருந்து விலகி ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசு கட்சியில் சேர்ந்தார். 2010 தேர்தலில் மக்கள் காங்கிரசு கட்சியின் சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 16,246 விருப்பு வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.[3]

2015 நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் காங்கிரசின் சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 16,611 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்கு இரண்டாவது தடவையாகத் தெரிவு செய்யப்பட்டார்.[4][5][6]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமீர்_அலி&oldid=3035251" இருந்து மீள்விக்கப்பட்டது