இம்ரான் மகரூப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இம்ரான் மகரூப்
Imran Maharoof

நா.உ மா.ச.உ
திருகோணமலை மாவட்ட இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
ஆகத்து 2020
பதவியில்
ஆகத்து 2015 – மார்ச் 2020
திருகோணமலை மாவட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்
பதவியில்
2012–2015
தனிநபர் தகவல்
பிறப்பு 1 செப்டம்பர் 1983 (1983-09-01) (அகவை 38)
தேசியம் இலங்கைச் சோனகர்
அரசியல் கட்சி ஐக்கிய மக்கள் சக்தி
பிற அரசியல்
சார்புகள்
ஐக்கிய தேசியக் கட்சி
சமயம் இசுலாம்
இணையம் imranmaharoof.com

இம்ரான் மகரூப் (Imran Maharoof, பிறப்பு: 1 செப்டம்பர் 1983)[1] இலங்கை முசுலிம் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

திருகோணமலை மாவட்டம், கிண்ணியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட இம்ரான் மகரூப் முன்னாள் அமைச்சர் எம். ஈ. எச். மகரூப்பின் மகனும்,[2][3] நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. எம். மகரூப்பின் உறவினரும் ஆவார்.[4] கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி பயின்ற இம்ரான் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவம், மற்றும் வங்கியியலில் கற்கை நெறிப் பட்டத்தையும் பெற்றவர்.[5] தனியார் வங்கி ஒன்றில் 2004 முதல் 2010 வரை பணியாற்றினார்.

அரசியலில்[தொகு]

மகரூப் 2010 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பாக ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர்களில் ஒருவராக திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டார். 19,665 விருப்பு வாக்குகள் பெற்றுத் தோல்வியடைந்தார்.[6] பின்னர் அவர் 2012 மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.[7]

மகரூப் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளராக 2015 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 32,582 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[8][9][10] 2020 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[11][12]

தேர்தல் வரலாறு[தொகு]

தேர்தல் தொகுதி கட்சி வாக்குகள் முடிவு
2010 நாடாளுமன்றம்[6] திருகோணமலை மாவட்டம் ஐக்கிய தேசியக் கட்சி ஐக்கிய தேசிய முன்னணி 19,665 தெரிவு செய்யப்படவில்லை
2012 மாகாணசபை[7] திருகோணமலை மாவட்டம் ஐக்கிய தேசியக் கட்சி 10,048 தெரிவு
2015 நாடாளுமன்றம்[13] திருகோணமலை மாவட்டம் ஐக்கிய தேசியக் கட்சி ஐக்கிய தேசிய முன்னணி 32,582 தெரிவு
2020 நாடாளுமன்றம்[14] திருகோணமலை மாவட்டம் ஐக்கிய மக்கள் சக்தி ஐக்கிய மக்கள் சக்தி 39,029 தெரிவு

மேற்கோள்கள்[தொகு]

 1. "Directory of Members: Imran Maharoof". இலங்கை நாடாளுமன்றம்.
 2. Gurunathan, S. (17 டிசம்பர் 2014). "UPFA is like a sinking ship – Maharoof". சிலோன் டுடே. Archived from the original on 2015-09-23. https://web.archive.org/web/20150923222108/http://www.ceylontoday.lk/51-80105-news-detail-upfa-is-like-a-sinking-ship-maharoof.html. 
 3. டி. பி. எஸ். ஜெயராஜ் (22 செப்டம்பர் 2012). "Najeeb Abdul Majeed makes history as the first muslim CM of Sri Lanka". டெய்லிமிரர். http://www.dailymirror.lk/22121/najeeb-abdul-majeed-makes-history-as-the-first-muslim-cm-of-sri-lanka. 
 4. Santiago, Melanie (18 ஆகத்து 2015). "General Election 2015: Full list of preferential votes". நியூஸ் பெர்ஸ்ட். http://newsfirst.lk/english/2015/08/general-election-2015-full-list-of-preferential-votes/107433. 
 5. "More than 50 new faces in House". சண்டே டைம்சு. 23 ஆகத்து 2015. 
 6. 6.0 6.1 "Parliamentary General Election - 2010 Trincomalee Preferences" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். 2010-05-13 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2015-09-20 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 7. 7.0 7.1 "Preferences" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். 2014-04-29 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2015-09-20 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 8. "PART I : SECTION (I) — GENERAL Government Notifications PARLIAMENTARY ELECTIONS ACT, No. 1 OF 1981". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1928/03. 19 August 2015. http://www.documents.gov.lk/Extgzt/2015/PDF/Aug/1928_03/1928_03%20E.pdf. பார்த்த நாள்: 20 செப்டம்பர் 2015. 
 9. "Ranil tops with over 500,000 votes in Colombo". டெய்லிமிரர். 19 ஆகத்து 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo. 
 10. "Preferential Votes". டெய்லிநியூசு. 19 ஆகத்து 2015. Archived from the original on 2015-08-20. https://archive.today/20150820025307/http://www.dailynews.lk/?q=political/preferential-votes-2. 
 11. "Part I : Section (I) — General - Government Notifications - Parliamentary Elections Act, No. 1 of 1981" (PDF). இலங்கை அரச வர்த்தமானி Extraordinary. எண். 2187/26. Colombo, Sri Lanka. 8 August 2020. p. 7A. 9 August 2020 அன்று பார்க்கப்பட்டது.
 12. "General Election 2020: Preferential votes of Trincomalee District". Ceylon Today (Colombo, Sri Lanka). 7 August 2020. https://ceylontoday.lk/news/general-election-2020-preferential-votes-of-trincomalee-district. பார்த்த நாள்: 14 September 2020. 
 13. Jayakody, Pradeep (28 August 2015). "The Comparison of Preferential Votes in 2015 & 2010". Daily Mirror (Colombo, Sri Lanka). http://www.dailymirror.lk/85309/the-comparison-of-preferential-votes-in-2015-2010. பார்த்த நாள்: 20 September 2020. 
 14. "General Election Preferential Votes". Daily News (Colombo Sri Lanka, Sri Lanka): p. 2. 8 August 2020. http://www.dailynews.lk/2020/08/08/political/225317/general-election-preferential-votes. பார்த்த நாள்: 20 September 2020. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இம்ரான்_மகரூப்&oldid=3364011" இருந்து மீள்விக்கப்பட்டது