அ. அரவிந்தகுமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருணாசலம் அரவிந்தகுமார்
நா.உ.
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
ஆகத்து 2020
தொகுதி பதுளை மாவட்டம்
பதவியில்
ஆகத்து 2015 – மார்ச் 2020
தொகுதி பதுளை மாவட்டம்
ஊவா மாகாணசபை உறுப்பினர்
பதவியில்
2004–2014
தொகுதி பதுளை மாவட்டம்
தனிநபர் தகவல்
பிறப்பு 17 நவம்பர் 1954 (1954-11-17) (அகவை 68)
தேசியம் இலங்கையர், மலையகத் தமிழர்
அரசியல் கட்சி மலையக மக்கள் முன்னணி
பிற அரசியல்
சார்புகள்
தமிழ் முற்போக்குக் கூட்டணி
இருப்பிடம் பதுலுப்பிட்டி வீதி, பதுளை
பணி அரசியல்வாதி
சமயம் இந்து

அருணாசலம் அரவிந்தகுமார் (பிறப்பு: 17 நவம்பர் 1954)[1] இலங்கையின் மலையக அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், மலையக மக்கள் முன்னணியின் பொருளாளரும் ஆவார்.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

அரவிந்தகுமார் கம்பளை புனித யோசேப்பு கல்லூரியிலும், கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் கல்லூரியிலும் கல்வி கற்றார்.[2]

அரசியலில்[தொகு]

அரவிந்தகுமார் மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினராவார். அக்கட்சியின் நிதிச்செயலாளராகப் பணியாற்றினார்.[3][4] 2015 சூன் மாதத்தில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் உபதலைவர்களில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்டார்.[5]

இவர் 2004 மாகாணசபைத் தேர்தலில் மலையக மக்கள் முன்னணி வேட்பாளராக பதுளை மாவட்டத்தில் போட்டியிட்டு 5,059 வாக்குகள் பெற்று ஊவா மாகாணசபையின் உறுப்பினராக 2004 ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்டார்.[6] 2009 மாகாணசபைத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[7]

2010 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[8][9] 2015 தேர்தலில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக பதுளை மாவட்டத்தில் போட்டியிட்டு 53,741 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[10][11][12][13]

2020 தேர்தலில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக பதுளை மாவட்டத்தில் போட்டியிட்டு 45,491 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[14][15]

தேர்தல் வரலாறு[தொகு]

தேர்தல் தொகுதி கட்சி கூட்டணி வாக்குகள் முடிவு
2004 மாகாணசபை[6] பதுளை மாவட்டம் மமமு மமமு 5,059 தெரிவானார்
2009 மாகாணசபை[7] பதுளை மாவட்டம் மமமு மமமு 7,863 தெரிவானார்
2010 நாடாளுமன்றம் பதுளை மாவட்டம் மமமு மமமு தெரிவு
செய்யப்படவில்லை
2015 நாடாளுமன்றம்[16] பதுளை மாவட்டம் மமமு ஐதேக 53,741 தெரிவானார்
2020 நாடாளுமன்றம் பதுளை மாவட்டம் மமமு ஐதேக 45,491 தெரிவானார்

மேற்கோள்கள்[தொகு]

 1. "Directory of Members: A. Aravindh Kumar". இலங்கை நாடாளுமன்றம்.
 2. "More than 50 new faces in House". சண்டே டைம்சு. 23 ஆகத்து 2015. 
 3. "Rathakrishnan elected as Leader of Upcountry People's Front". Tamil Diplomat. 10 செப்டம்பர் 2015. http://tamildiplomat.com/rathakrishnan-elected-as-leader-of-upcountry-peoples-front/. 
 4. Kithsiri, Piyal (20 மார்ச் 2013). "Nearly 3,000 estate workers denied EPF and ETF". சிலோன் டுடே. Archived from the original on 2016-03-04. https://web.archive.org/web/20160304094158/http://www.ceylontoday.lk/51-27565-news-detail-nearly-3000-estate-workers-denied-epf-and-etf.html. 
 5. "Tamil Progressive Alliance elects working committee". Eye Sri Lanka. 5 சூன் 2015. http://www.eyesrilanka.com/2015/06/05/tamil-progressive-alliance-elects-working-committee/. 
 6. 6.0 6.1 "Results of Provincial Council Elections 2004" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். 2009-01-07 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2015-08-30 அன்று பார்க்கப்பட்டது.
 7. 7.0 7.1 "Preferences Badulla" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். 2009-12-10 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2015-09-13 அன்று பார்க்கப்பட்டது.
 8. "PART I : SECTION (I) — GENERAL Government Notifications THE PARLIAMENTARY ELECTIONS ACT, No. 1 OF 1981 Notice Under Section 24(1) GENERAL ELECTIONS OF MEMBERS OF THE PARLIAMENT". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1643/07. 2 March 2010. http://www.documents.gov.lk/Extgzt/2010/PDF/Mar/1643_7/1643_7(E).pdf. பார்த்த நாள்: 13 செப்டம்பர் 2015. 
 9. "Parliamentary General Election - 2010 Badulla District". இலங்கைத் தேர்தல் திணைக்களம். 2010-04-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-09-13 அன்று பார்க்கப்பட்டது.
 10. "Ranil tops with over 500,000 votes in Colombo". டெய்லிமிரர். 19 ஆகத்து 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo. 
 11. "Preferential Votes". டெய்லிநியூஸ். 19 ஆகத்து 2015. Archived from the original on 2015-08-20. https://archive.today/20150820025307/http://www.dailynews.lk/?q=political/preferential-votes-2. 
 12. "PM Ranil receives highest Preferential votes with 500,566". hirunews.lk. 18 ஆகத்து 2015. 19 ஆகத்து 2015 அன்று பார்க்கப்பட்டது.
 13. "Preferential votes- General Election 2015". adaderana.lk. 18 ஆகத்து 2015. 19 ஆகத்து 2015 அன்று பார்க்கப்பட்டது.
 14. "Part I : Section (I) — General - Government Notifications - Parliamentary Elections Act, No. 1 of 1981" (PDF). இலங்கை அரச வர்த்தமானி Extraordinary. எண். 2187/26. Colombo, Sri Lanka. 8 August 2020. p. 5A. 9 August 2020 அன்று பார்க்கப்பட்டது.
 15. "General Election 2020: Preferential votes of Badulla District". Ceylon Today (Colombo, Sri Lanka). 7 August 2020. Archived from the original on 27 அக்டோபர் 2020. https://web.archive.org/web/20201027090934/https://ceylontoday.lk/news/general-election-2020-preferential-votes-of-badulla-district. பார்த்த நாள்: 17 September 2020. 
 16. Jayakody, Pradeep (28 ஆகத்து 2015). "The Comparison of Preferential Votes in 2015 & 2010". டெய்லிமிரர். http://www.dailymirror.lk/85309/the-comparison-of-preferential-votes-in-2015-2010. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._அரவிந்தகுமார்&oldid=3592290" இருந்து மீள்விக்கப்பட்டது