தே. ம. சுவாமிநாதன்
டி. எம். சுவாமிநாதன் D. M. Swaminathan | |
---|---|
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 11 நவம்பர் 2015 | |
பிரதமர் | ரணில் விக்கிரமசிங்க |
முன்னையவர் | திலக் மாரப்பன |
புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம், இந்து அலுவல்கள் அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 12 சனவரி 2015 | |
பிரதமர் | ரணில் விக்கிரமசிங்க |
இலங்கை மேல் மாகாண ஆளுநர் | |
பதவியில் 11 சூலை 1994 – 1 டிசம்பர் 1994 | |
முன்னையவர் | சுப்பையா சர்வானந்தா |
பின்னவர் | கே. விக்னராஜா |
தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2010 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இலங்கையர் |
அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | ஐக்கிய தேசிய முன்னணி |
துணைவர் | காயத்ரி கார்த்திகேசன் |
உறவுகள் | சர் பொன்னம்பலம் அருணாசலம், சர் அருணாசலம் மகாதேவா, வி. மாணிக்கவாசகர், சிவா செல்லையா, சர் முத்து குமாரசுவாமி |
பிள்ளைகள் | சோபனா, பிரகாஷ் |
வாழிடம்(s) | 125, ரொஸ்மீட் இடம், கொழும்பு 7, இலங்கை. |
முன்னாள் கல்லூரி | கொழும்பு றோயல் கல்லூரி |
தேவ மனோகரன் சுவாமிநாதன் (Deva Manoharan Swaminathan) இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும், அரசியல்வாதியும் ஆவார். ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான[1] இவர், இந்து மத விவகாரம் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சராக 2015 சனவரி 12 முதல் நியமிக்கப்பட்டார்.[2] 2015 நவம்பர் 11 முதல் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.[3] முன்னாள் மேல் மாகாண ஆளுநராகவும், தேசிய சேமிப்பு வங்கியின் தலைவராகவும் பணியாற்றினார்.
குடும்பமும், கல்வியும்
[தொகு]சுவாமிநாதன் வட இலங்கையில் புகழ் பெற்ற அரசியல் குடும்பத்தில் எம். சுவாமிநாதன், லலிதாம்பிகை ஆகியோருக்குப் பிறந்தவர். முன்னைநாள் மேலவை உறுப்பினர் சர் சங்கரப்பிள்ளை பரராஜசிங்கம் இவரது தாய்வழிப் பாட்டனார் ஆவார். சேர் பொன்னம்பலம் அருணாசலம் தந்தை வழிப் பூட்டனார் ஆவார்.[4] கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி பயின்ற சுவாமிநாதன்,[4] இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் கற்று உச்சநீதிமன்ற சட்டவறிஞராக வெளியேறினார்.[4] சட்டக் கல்லூரியின் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றினார்.[4]
சட்டப் பணி
[தொகு]கொழும்பில் தனது சட்டவறிஞர் பணியை ஆரம்பித்த சுவாமிநாதன், 1971 இல் டி. எம். சுவாமிநாதன் அசோசியேட்சு என்ற சட்ட நிறுவனத்தை ஆரம்பித்தார்.[5]
அரசியலில்
[தொகு]அரசுத்தலைவர் ஜே. ஆர். ஜெயவர்தனா, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரான சுவாமிநாதனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, பொதுச் சேவைகள் ஆணையம், கல்விச் சேவைகள் குழு ஆகியவற்றில் உறுப்பினராக நியமித்தார். பின்னர் அரசுத்தலைவர் ரணசிங்க பிரேமதாசாவின் கீழ் உள்ளூராட்சி சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் சேவையாற்றினார். 2002 இல் தேசிய சேமிப்பு வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.[6][7]
அரசுத்தலைவர் விஜயதுங்கா மேல்மாகாணசபை ஆளுனர் சுப்பையா சர்வானந்தாவை சர்ச்சைக்குரிய வகையில் பதவி நீக்கம் செய்ததை அடுத்து, அவரது இடத்துக்கு சூன் 2004 இல் சுவாமிநாதன் நியமிக்கப்பட்டார்.[8]
2010 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 2015 சனவரி 12 இல் அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் இந்து மத விவகாரம் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[2] மீண்டும் இவர் 2015 செப்டம்பர் 4 அன்று புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[9][10][11] 2015 நவம்பர் 11 முதல் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராகவும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.[3]
சமூக சேவை
[தொகு]சுவாமிநாதன் கொழும்பு பொன்னம்பலவாணேசுவரர் கோயிலின் அறங்காவல் குழுத் தலைவராவார். இவர் கொழும்பு விவேகானந்த சபையின் நூற்றாண்டுத் தலைவராகவும் இருந்துள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ *Parliament profile
- ↑ 2.0 2.1 New Cabinet ministers sworn in, டெய்லிமிரர், சனவரி 12, 2015
- ↑ 3.0 3.1 "புதிய சட்டம் ஒழுங்கு அமைச்சர் பொறுப்பேற்றார்". பிபிசி. 11 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 11 நவம்பர் 2015.
- ↑ 4.0 4.1 4.2 4.3 "Partner". D. M. Swaminathan Associates. Archived from the original on 2014-04-03. பார்க்கப்பட்ட நாள் 2015-09-04.
- ↑ "About Us". D. M. Swaminathan Associates. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-09-04.
- ↑ "Swaminathan, NSB chairman". தி ஐலண்டு. 21 மார்ச் 2002 இம் மூலத்தில் இருந்து 2015-09-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150918232807/http://www.island.lk/2002/03/21/busine07.html.
- ↑ Sirimanna, Bandula (27 மே 2012). "NSB-TFC share deal cannot be justified whatsoever, says former NSB chairman". சண்டே டைம்சு. http://www.sundaytimes.lk/120527/BusinessTimes/bt14.html.
- ↑ "A Shabby Abuse of Power". Tamil Times XIII (6): 3. 15 சூன் 1994. பன்னாட்டுத் தர தொடர் எண்:0266-4488. http://noolaham.net/project/34/3382/3382.pdf.
- ↑ "இலங்கையின் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது". பிபிசி தமிழ். 4 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 4 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2003-12-04. பார்க்கப்பட்ட நாள் 2015-09-04.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-09-06. பார்க்கப்பட்ட நாள் 2015-09-04.
- 1945 பிறப்புகள்
- வாழும் நபர்கள்
- இலங்கையின் 14வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 15வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- கொழும்பு றோயல் கல்லூரி பழைய மாணவர்கள்
- இலங்கை மேல் மாகாண ஆளுநர்கள்
- இலங்கை இந்துக்கள்
- இலங்கைத் தமிழ் வழக்கறிஞர்கள்
- இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள்
- ஐக்கிய தேசியக் கட்சி அரசியல்வாதிகள்
- கொழும்பு மாவட்ட நபர்கள்
- இலங்கை அமைச்சர்கள்
- இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்