சிவசக்தி ஆனந்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிவசக்தி ஆனந்தன்
நா.உ
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2001
தனிநபர் தகவல்
பிறப்பு 29 சூலை 1964 (1964-07-29) (அகவை 52)
தேசியம் இலங்கைத் தமிழர்
அரசியல் கட்சி ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி
பிற அரசியல்
சார்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
சமயம் இந்து

அண்ணாமலை நடேசு சிவசக்தி ஆனந்தன் (பிறப்பு: 29 சூலை 1964)[1] இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

சிவசக்தி ஆனந்தன் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உறுப்பினராவார். இவர் 2001 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக [[வன்னி தேர்தல் மாவட்டம்|வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றம் சென்றார்.[2] 2004,[3] 2010,[4] 2015 தேர்தல்களிலும் இவர் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[5][6][7]

தேர்தல் வரலாறு[தொகு]

தேர்தல் தொகுதி கட்சி வாக்குகள் முடிவு
2001 நாடாளுமன்றம்[2] வன்னி மாவட்டம் ததேகூ 14,023 தேர்வு
2004 நாடாளுமன்றம்[3] வன்னி மாவட்டம் ததேகூ 29,801 தேர்வு
2010 நாடாளுமன்றம்[4] வன்னி மாவட்டம் ததேகூ 11,674 தேர்வு
2015 நாடாளுமன்றம்[8] வன்னி மாவட்டம் ததேகூ 25,027 தேர்வு

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவசக்தி_ஆனந்தன்&oldid=2238876" இருந்து மீள்விக்கப்பட்டது