மகிந்த சமரசிங்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகிந்த சமரசிங்க
பெருந்தோட்டத்துறை அமைச்சர்
களுத்துறை தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2010
தனிநபர் தகவல்
பிறப்பு சனவரி 30, 1956 (1956-01-30) (அகவை 67)
இலங்கை
தேசியம் இலங்கையர்
அரசியல் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
படித்த கல்வி நிறுவனங்கள் லா ட்ரோப் பல்கலைக்கழகம்
பணி அரசியல்வாதி
சமயம் பௌத்தம்

மகிந்த சமரசிங்க (Mahinda Samarasinghe, பிறப்பு: சனவரி 30, 1956), இலங்கை அரசியல்வாதி. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் களுத்துறை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 10வது நாடாளுமன்றம் (1994), சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இவர் 2015 செப்டம்பர் 4 அன்று தொழில்பயிற்சி மற்றும் அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1][2] [3]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

கொழும்பில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர். 1956ஆம் ஆண்டு கொழும்பில் பிறந்த மகிந்த சமரசிங்க, ஆத்திரேலியாவில் லா டிரோப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். 1988 ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்து மேல் மாகாணத்தின் மாகாண சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சர்வதேச தொழிலாளர் அமைப்பு, உலக சுகாதார அமைப்பு, சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் மற்றும் சர்வதேச வானிலை அமைப்பு ஆகியவற்றில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தினார். அமெரிக்கா மற்றும் மெக்சிகோவிற்கான இலங்கையின் தூதுவராக நியமிக்கப்படவுள்ளதால், இவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார்.[4]

உசாத்துணை[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகிந்த_சமரசிங்க&oldid=3566015" இருந்து மீள்விக்கப்பட்டது