மங்கள சமரவீர

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மங்கள சமரவீர
Mangala Samaraweera

நா.உ.
Mangala Samaraweera.jpg
இலங்கை வெளியுறவு அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
12 சனவரி 2015
முன்னவர் ஜி. எல். பீரிஸ்
இலங்கை வெளியுறவு அமைச்சர்
பதவியில்
2005–2007
முன்னவர் அனுரா பண்டாரநாயக்கா
பின்வந்தவர் ரோகித்த போகொல்லாகம
மாத்தறை தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
1989
தனிநபர் தகவல்
பிறப்பு மங்கள பின்சிறி சமரவீர
ஏப்ரல் 21, 1956 (1956-04-21) (அகவை 65)
மாத்தறை, இலங்கை
தேசியம் இலங்கை இலங்கையர்
அரசியல் கட்சி இலங்கை சுதந்திரக் கட்சி (1983-2007)
ஐக்கிய தேசியக் கட்சி (2010-இன்று)
பணி அரசியல்வாதி
சமயம் தேரவாத பௌத்தம்

மங்கள சமரவீர (Mangala Pinsiri Samaraweera, சிங்களம்: මංගල පින්සිරි සමරවීර; பிறப்பு: ஏப்ரல் 21, 1956), இலங்கை அரசியல்வாதி. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் மாத்தறை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 10வது நாடாளுமன்றம் (1994), சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

141/5, கல்கனுவ ரோட், கொரக்கன, மொரட்டுவையில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர், இவர் 2005-2007 வரை இலங்கை வெளிவிவகார அமைச்சராகக் கடமையாற்றினார். இவர் முன்னாள் இலங்கை அமைச்சரான மாகாநாம சமரவீரவின் மகனாவர்.

ஜூன் 2005 தேர்தல்களில் பிரச்சாரப் பிரிவுத் தலைவராத் தொழிற்பட்டு மகிந்த ராஜபக்சவின் வெற்றிக்கு வித்திட்டார். இத்தேர்தல் வெற்றிக்காக மகிந்த ராஜப்பக்ச விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்து ரணில் விக்கிரமசிங்கவிற்கு வடக்குக் கிழக்கில் தமிழர்கள் வாக்களிக்காமல் செய்தாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.[1][2]

உசாத்துணை[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mahinda 'gave money' to LTTE" (in ஆங்கிலம்). Sandeshaya (BBC). 29 March, 2007. http://www.bbc.co.uk/sinhala/news/story/2007/03/070329_mahinda_ltte.shtml. பார்த்த நாள்: 2008-05-21. 
  2. Samarasinghe, Sonali (2007-02-28). "Govt.’s reality check as the war rains down from the east" (in ஆங்கிலம்). the morningleader (Leader Publications (Pvt) Ltd.). http://www.themorningleader.lk/20070228/politics.html. பார்த்த நாள்: 2008-05-21. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்கள_சமரவீர&oldid=3035527" இருந்து மீள்விக்கப்பட்டது