காமினி ஜயவிக்கிரம பெரேரா
காமினி ஜயவிக்கிரம பெரேரா | |
---|---|
குருநாகலை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 2010 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | சனவரி 29, 1941 இலங்கை |
தேசியம் | இலங்கையர் |
அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி |
பணி | அரசியல்வாதி |
தொழில் | நில உரிமையாளர். |
சமயம் | பௌத்தம் |
காமினி ஜயவிக்கிரம பெரேரா (Gamini Jayawickrama Perera, பிறப்பு: சனவரி 29 1941), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் குருநாகலை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 10வது நாடாளுமன்றம் (1994), சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இவர் 2015 செப்டம்பர் 4 அன்று வனவளங்கள் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1][2][3]
வாழ்க்கைக் குறிப்பு[தொகு]
80, குருப்பு ரோட், பொரல்லை, கொழும்பு 08 இல் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர், நில உரிமையாளர்.
உசாத்துணை[தொகு]
- காமினி ஜயவிக்கிரம பெரேரா பரணிடப்பட்டது 2010-03-24 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "இலங்கையின் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது". பிபிசி தமிழ். 4 செப்டம்பர் 2015. 4 செப்டம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2003-12-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-09-04 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2015-09-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-09-04 அன்று பார்க்கப்பட்டது.
- இலங்கை அரசியல்வாதிகள்
- 1941 பிறப்புகள்
- இலங்கையின் 10வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 11வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 12வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 13வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 14வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- வாழும் நபர்கள்
- இருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்
- இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்