டிக்கிரி பண்டா சுபசிங்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிக்கிரி பண்டா சுபசிங்க
Tikiri Banda Subasinghe

நா.உ.
தொழிற்சாலைகள் மற்றும் விஞ்ஞான அலுவல்கள் அமைச்சர்
பதவியில்
மே 1970 – 1 மார்ச் 1977
பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா
பின்வந்தவர் சிறில் மத்தியூ
சோவியத் ஒன்றியத்துக்கான 2வது இலங்கைத் தூதுவர்
பதவியில்
1961–1965
பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா
முன்னவர் குணபால பியசேன மலலசேகரா
பின்வந்தவர் பி. எஃப். பெரேரா
6வது நாடாளுமன்ற சபாநாயகர்
பதவியில்
30 மார்ச் 1960 – 23 ஏப்ரல் 1960
பிரதமர் டட்லி சேனாநாயக்க
முன்னவர் அமீது உசைன் சேக் இசுமாயில்
பின்வந்தவர் ஆர். எஸ். பெல்பொல
பாதுகாப்பு, வெளிவிவகார அமைச்சின் நாடாளுமன்ற செயலாளர்
பதவியில்
1956–1959
பிரதமர் சாலமன் பண்டாரநாயக்கா
பிங்கிரிய தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1947 – மார்ச் 1960
முன்னவர் எவருமில்லை
பின்வந்தவர் லீலானந்த வீரசிங்க
கட்டுகம்பொல தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1965–1977
முன்னவர் லீலானந்த வீரசிங்க
பின்வந்தவர் ஜெயவிக்கிரம பெரேரா
தனிநபர் தகவல்
பிறப்பு 14 ஆகத்து 1913
பிரித்தானிய இலங்கை
இறப்பு 1995 (அகவை 81–82)
அரசியல் கட்சி இலங்கை சுதந்திரக் கட்சி (1965-1977)
பிற அரசியல்
சார்புகள்
லங்கா சமசமாஜக் கட்சி (-1955)
சுயாதீன சோசலிசக் கட்சி (1955-1959)
ஐக்கிய தேசியக் கட்சி (1959)
சுயேட்சை (1960-1965)
வாழ்க்கை துணைவர்(கள்) லொலித்தா சுபசிங்க

டி. பி. சுபசிங்க என அழைக்கப்படும் சுபசிங்க முதியான்சிலாகே டிக்கிரி பண்டா சுபசிங்க (Subasinghe Mudiyanselage Tikiri Banda Subasinghe, 14 ஆகத்து 1913 - 1995) இலங்கையின் இடதுசாரி அரசியல்வாதி ஆவார். இவர் நாடாளுமன்றத்தின் 7வது சபாநாயகராகவும், சோவியத் ஒன்றியத்துக்கான தூதுவராகவும் பணியாற்றியவர்.[1][2] இவர் தொழிற்சாலைகள் மற்றும் விஞ்ஞான அலுவல்கள் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.[3]

சுபசிங்க லங்கா சமசமாஜக் கட்சியின் ஆரம்பகால உறுப்பினராவார். இடதுசாரிகள் இணைந்து நடத்திய சூரிய-மல் இயக்கத்தில் இணைந்து போராடியவர்.[1] சுபசிங்க லங்கா சமசமாஜக் கட்சியின் வேட்பாளராக 1947 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்..[4] மீண்டும் 1952 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[5] 1956 தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார்.[6] சாலமன் பண்டாரநாயக்காவின் அமைச்சரவையில் இவர் பாதுகாப்பு, மற்றும் வெளிவிவகார அமைச்சின் நாடாளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்டார்.[1][3] மார்ச் 1960 தேர்தலில் கட்டுகம்பொலை தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றதை அடுத்து,[7] நாடாளுமன்ற சபாநாயகராக நியமிக்கப்பட்டார். நான்கு மாதங்களின் பின்னர் நடைபெற்ற சூலை 1960 தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[8] 1961 ஆம் ஆண்டில் இவர் சோவியத் ஒன்றியத்துக்கான தூதுவராக நியமிக்கப்பட்டார். 1965 தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[9] 1970 தேர்தலில் இலங்கை சுதந்திரக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[10] 1977 தேர்தலில் போட்டியிட்டுப் பெரும் தோல்வியடைந்தார்.[11]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 "T.B. Subasinghe commemoration". டெய்லிநியூசு. http://archives.dailynews.lk/2009/08/28/news24.asp. பார்த்த நாள்: 30 டிசம்பர் 2013. 
 2. Rupasinghe, Winston. "Revisiting our Russian friends". Sundayobserver இம் மூலத்தில் இருந்து 2013-12-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131230232326/http://www.sundayobserver.lk/2001/pix/PrintPage.asp?REF=%2F2009%2F03%2F01%2Frev09.asp. பார்த்த நாள்: 30 டிசம்பர் 2013. 
 3. 3.0 3.1 "SUBASINGHE, Tikiri Banda (1913-1995), research papers on". AIM25 இம் மூலத்தில் இருந்து 2013-12-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131230233120/http://aim25test.da.ulcc.ac.uk/cgi-bin/vcdf/detail?coll_id=8158&inst_id=16&nv1=browse&nv2=repos. பார்த்த நாள்: 30 டிசம்பர் 2013. 
 4. "Result of Parliamentary General Election 1947". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2015-09-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924115557/http://www.slelections.gov.lk/pdf/Results_1947%20GENERAL%20ELECTION.PDF. 
 5. "Result of Parliamentary General Election 1952". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2015-09-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924115603/http://www.slelections.gov.lk/pdf/Results_1952%20GENERAL%20ELECTION.PDF. 
 6. "Result of Parliamentary General Election 1956". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2015-09-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924115606/http://www.slelections.gov.lk/pdf/Results_1956%20GENERAL%20ELECTION.PDF. 
 7. "Result of Parliamentary General Election March 1960". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2009-12-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091209231748/http://www.slelections.gov.lk/pdf/Results_1960_03_19%20GENERAL%20ELECTION.PDF. 
 8. "Result of Parliamentary General Election July 1960". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2015-09-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924115611/http://www.slelections.gov.lk/pdf/Results_1960_07_20%20GENERAL%20ELECTION.PDF. 
 9. "Result of Parliamentary General Election 1965". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2015-07-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150713003440/http://www.slelections.gov.lk/pdf/Results_1965%20GENERAL%20ELECTION.PDF. 
 10. "Result of Parliamentary General Election 1970". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2009-12-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091209231958/http://www.slelections.gov.lk/pdf/Results_1970%20GENERAL%20ELECTION.PDF. 
 11. "Result of Parliamentary General Election 1977". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2011-07-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110717002624/http://www.slelections.gov.lk/pdf/General%20Election%201977.PDF. 

வெளி இணைப்புகள்[தொகு]