உள்ளடக்கத்துக்குச் செல்

எதிர்க்கட்சித் தலைவர் (இலங்கை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
{{{body}}} எதிர்க்கட்சித் தலைவர்
தற்போது
இரா. சம்பந்தன்

03 செப்டம்பர் 2015 முதல்
பதவிக் காலம்அரசில் அங்கம் வகிக்காத முக்கிய அரசியல் கட்சியின் தலைவர்

இலங்கையில் எதிர்க்கட்சித் தலைவர் (Leader of the Opposition) என்பவர் முக்கிய எதிர்க்கட்சிக்குத் தலைமை தாங்குபவர் ஆவார். இக்கட்சி இலங்கை நாடாளுமன்றத்தில் அரசில் அங்கம் வகிக்காத மிகப் பெரும் கட்சியின் தலைவர் அல்லது நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரும் கட்சியின் தலைவர் ஆவார். இப்பதவி பொதுநலவாய நாடுகளில் அங்கம் வகிக்கும் நாடுகளில் ஒரு பொதுவான அரசியல் பதவியாகும்.

தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆவார்.

எதிர்க்கட்சித் தலைவர்கள் (1947–இன்று)[தொகு]

அரசுத்தலைவராகவோ அல்லது பிரதமர்களாகவோ பதவியில் இருந்தவர்கள் சாய்வெழுத்தில் தரப்பட்டிருக்கிறது.

பிரதிநிதிகள் சபை (1947–1972)[தொகு]

# தலைவர் அரசியல் கட்சி பதவிக் காலம்
1 என். எம். பெரேரா லங்கா சமசமாஜக் கட்சி 1947–1952
2 சாலமன் பண்டாரநாயக்கா இலங்கை சுதந்திரக் கட்சி 1952–1956
(1) என். எம். பெரேரா லங்கா சமசமாஜக் கட்சி 1956–1959
3 சி. பி. டி. சில்வா இலங்கை சுதந்திரக் கட்சி 1960
4 டட்லி சேனாநாயக்க ஐக்கிய தேசியக் கட்சி 1960–1964
5 சிறிமாவோ பண்டாரநாயக்கா இலங்கை சுதந்திரக் கட்சி 1965–1970
6 ஜே. ஆர். ஜெயவர்தனா ஐக்கிய தேசியக் கட்சி 1970–1972

தேசிய அரசுப் பேரவை (1972–1978)[தொகு]

# தலைவர் அரசியல் கட்சி பதவிக்காலம்
(6) ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா ஐக்கிய தேசியக் கட்சி 1972–1977
7 அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தமிழர் விடுதலைக் கூட்டணி 1977–1978

நாடாளுமன்றம் (1978–இன்று)[தொகு]

# தலைவர் அரசியல் கட்சி பதவிக்காலம்
(7) அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தமிழர் விடுதலைக் கூட்டணி 1978–1983
8 அனுரா பண்டாரநாயக்கா இலங்கை சுதந்திரக் கட்சி 1983–1988
(5) சிறிமாவோ பண்டாரநாயக்கா இலங்கை சுதந்திரக் கட்சி 1989–1994
9 காமினி திசாநாயக்கா ஐக்கிய தேசியக் கட்சி 1994
10 ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சி 1994–2001
11 இரத்தினசிறி விக்கிரமநாயக்க இலங்கை சுதந்திரக் கட்சி 2001
12 மகிந்த ராசபக்ச இலங்கை சுதந்திரக் கட்சி 2001–2004
(10) ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சி 22 ஏப்ரல் 2004 – 9 சனவரி 2015
13 நிமல் சிரிபால டி சில்வா இலங்கை சுதந்திரக் கட்சி 16 சனவரி 2015 – 26 சூன் 2015
14 இரா. சம்பந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 03 செப்டம்பர் 2015 - இன்று

மேற்கோள்கள்[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]