உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கை நாடாளுமன்றம், 1947-1972

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Parliament of Ceylon
(1947-1972)
இலங்கை நாடாளுமன்றம்
வகை
வகைஇருமன்ற முறைமை
அவைகள்பிரதிநிதிகள் சபை
செனட்
காலக்கோடு
குடியேற்றநாடுபிரித்தானிய இலங்கை
தோற்றம்1947
முன்னிருந்த அமைப்புஇலங்கை அரசாங்க சபை
பின்வந்த அமைப்புதேசிய அரசுப் பேரவை
கலைப்பு1972
தலைமையும் அமைப்பும்
தேர்தல்
பிரதிநிதிகள் சபை இறுதித் தேர்தல்இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1970
தலைமையகம்
கொழும்பு காலிமுகத்திடலில் உள்ள இலங்கை நாடாளுமன்றக் கட்டடம். இக்கட்டடம் இலங்கை நாடாளுமன்றத்தினால் 1982 வரை பயன்படுத்தப்பட்டது. பழைய நாடாளுமன்றக் கட்டடம் என இன்று அழைக்கப்படுகிறது. இங்கு இலங்கை அரசுத்தலைவரின் செயலகம் அமைந்துள்ளது.

இலங்கை நாடாளுமன்றம், 1947-1972 (Parliament of Ceylon) என்பது பிரித்தானிய இலங்கையின் (இன்றைய இலங்கை) சட்டவாக்க மன்றம் ஆகும். இது சோல்பரி ஆணைக்குழுவின் பரிந்துரைப்படி 1947 ஆம் ஆண்டில் இலங்கை விடுதலை அடைய முன்னர் இலங்கை அரசாங்க சபைக்குப் பதிலாக நிறுவப்பட்டது.

இலங்கை நாடாளுமன்றம் பிரித்தானியாவின் வெஸ்ட்மின்ஸ்டர் முறையில் இரு அவைகளாக அமைக்கப்பட்டது. இலங்கை செனட் சபை என்ற மேலவைக்கு நியமனத்தின் அடிப்படையில் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். கீழவை எனப்படும் பிரதிநிதிகள் சபைக்கான உறுப்பினர்கள் மக்கள் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிரதிநிதிகள் சபையில் 101 உறுப்பினர்கள் இருந்தனர். இவர்களில் 95 பேர் நேரடியாக மக்கள் வாக்கெடுப்பு மூலமும், ஆறு பேர் மகாதேசாதிபதியின் பரிந்துரையிலும் நியமனம் செய்யப்பட்டனர். 1960 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 157 ஆக (தேர்ந்தெடுக்கப்பட்ட 151 பேரும் நியமன உறுப்பினர்கள் 6 பேருமாக) அதிகரிக்கப்பட்டது. செனட் சபையில் 30 உறுப்பினர்கள் இருந்தனர். இவர்களில் 15 பேரை உறுப்பினர்கள் சபையும், 15 பேரை மகாதேசாதிபதியும் தேர்ந்தெடுத்தனர்.

1971 ஆம் ஆண்டு அக்டோபர் 2 இல் சோல்பரி அரசியலமைப்பின் எட்டாம் திருத்தம் அமுலாக்கப்பட்டு செனட் சபை முடிவுக்கு வந்தது. புதிய குடியரசுக்கான அரசியலமைப்பு 1972 மே 22 ஆம் நாள் நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு நாடாளுமன்றம் ஒரு அவை முறையாக மாற்றப்பட்டு தேசிய அரசுப் பேரவை (National State Assembly) எனப் பெயர் மாற்றப்பட்டது.

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  • "CEYLON (CONSTITUTION) ORDER IN COUNCIL". LawNet, Government of Sri Lanka. Archived from the original on 2010-07-16. பார்க்கப்பட்ட நாள் 2021-08-14.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கை_நாடாளுமன்றம்,_1947-1972&oldid=3544432" இலிருந்து மீள்விக்கப்பட்டது