உள்ளடக்கத்துக்குச் செல்

வலைவாசல்:இலங்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொகு  

இலங்கை - அறிமுகம்


இலங்கை இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு அழகான தீவு தேசம் ஆகும். இலங்கையின் அமைவின் காரணமாக இந்தியப் பெருங்கடலின் நித்திலம் என்ற புகழும் இதற்கு உண்டு. இலங்கை ஒரு பல்லின, பல்சமய, நாடாகும். இலங்கை 2500 ஆண்டு பழைமையான வரலாற்றை கொண்டது. அதற்கு முன்னர் கம்ப இராமாயணத்தில் இலங்கை பற்றிய தகவல்கள் காணப்படுகிறது. 1815 ஆம் ஆண்டு இலங்கையின் கடைசி தன்னாட்சி தனிநாட்டரசான கண்டி இராச்சியம் வீழ்ச்சியடைந்தது தொடக்கம் இலங்கை பிரித்தானியாவின் குடியேற்றவாதநாடாக மாறியது. மீண்டும் 1948 பெப்ரவரி 4 ஆம் நாள் விடுதலை பெற்று தன்னுரிமைத் (சுதந்திர) தனி நாடாகியது. 1972 ஆம் ஆண்டு இலங்கை தன்னை குடியரசாக அறிவித்துக்கொண்டது. 1948 ஆண்டுக்குப் பின்னரான இலஙகையில் தோன்றிய இனமுறுகள் ஒரு உள்நாட்டு யுத்தத்தை (போரை) ஏற்படுத்தியது. 2002 ஆம் முதல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே யுத்த (போர்) நிறுத்த ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டு, பல மீறல்கள்களுக்கு பின்னும், நடைமுறையிலுள்ளது.

தொகு  

தேர்வுக் கட்டுரை


யாழ்ப்பாண நகரம் இலங்கைத்தீவின் வட கோடியிலுள்ள ஒரு நகராகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மேற்குப் பகுதியில் யாழ்ப்பாண நீரேரியைப் பார்த்தபடி அமைந்துள்ளது. இலங்கையின் தலைநகரான கொழும்பிலிருந்து 396 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள இந் நகரம், நீண்ட காலமாகவே நாட்டிலுள்ள இரண்டாவது பெரிய நகரமாக விளங்கி வருகிறது. 1987 ஆம் ஆண்டுக்கு முன்னர் வடமாகாணத்தின் தலைநகரமாக விளங்கிய யாழ்ப்பாணம், அந்த ஆண்டில், தற்காலிகமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து உருவான வட-கிழக்கு மாகாணசபைக்குத் திருகோணமலையைத் தலைநகரமாக்கியபின், மாகாணத் தலைநகரம் என்ற அந்தஸ்த்தை இழந்தது.


மேலும்...

தொகு  

இலங்கை செய்திகள்


விக்கிசெய்திகளில் இலங்கை


தொகு  

இணைய மூலங்கள்

தொகு  

தொடர்புடைய நுழைவாயில்கள்


இதுவரை உருவாக்கப்படவில்லை

தொகு  

தெரியுமா உங்களுக்கு?...


  • இலங்கை இந்து சமுத்திரத்தில் முத்து என அழைக்கப்படுகின்றது.
  • இலங்கை கிரிக்கட் உலகக்கிண்ணத்தை 1996 ல் கைப்பற்றியது.
  • தெற்கு ஆசியாவில் இலங்கையே கல்வி அறிவு கூடிய நாடாகும்.
  • இலங்கையின் முதலாவது அதிபர் (சனாதிபதி) வில்லியம் கொபல்லாவ ஆவார்.


தொகு  

தொடர்பான பகுப்புகள்

தொகு  

தேர்வுப் படிமம்


கண்டி நகரில் அமைந்துள்ள இலங்கையின் மிகப் புனிதமான வணக்கத் தலங்களில் ஒன்றான தலதா மாளிகை. 1592 தொடக்கம் 1815 வரை இருந்த கண்டி இராச்சியத்தின் அரசர்களின் அரண்மனை வளாகத்தின் உள்ளேயே இவ்வாலயம் அமைந்துள்ளது.

தொகு  

தொடர்புடைய வலைவாசல்கள்


தமிழர்தமிழர்
தமிழர்
தமிழ்தமிழ்
தமிழ்
வரலாறுவரலாறு
வரலாறு
இந்தியாஇந்தியா
இந்தியா
தமிழீழம்தமிழீழம்
தமிழீழம்
தமிழர் தமிழ் வரலாறு இந்தியா தமிழீழம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:இலங்கை&oldid=1592203" இலிருந்து மீள்விக்கப்பட்டது