இலங்கையில் மனித உரிமைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இலங்கைப் பிரச்சினை

பின்னணி
தமிழீழம் * இலங்கைஇலங்கை வரலாற்றுக் காலக்கோடு * இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு
இலங்கை அரசு
ஈழப் போரின் தொடக்கம் * கறுப்பு யூலைஇனக்கலவரங்கள் * மனித உரிமைகள்இலங்கை அரச பயங்கரவாதம்சிங்களப் பேரினவாதம்தாக்குதல்கள்
விடுதலைப் புலிகள்
புலிகள்தமிழீழம்* தமிழ்த் தேசியம் * புலிகளின் தாக்குதல்கள் * யாழ் முஸ்லீம்கள் கட்டாய வெளியேற்றம்
முக்கிய நபர்கள்
வே. பிரபாகரன்
மகிந்த ராஜபக்ச
சரத் பொன்சேகா
இந்தியத் தலையீடு
பூமாலை நடவடிக்கை
இந்திய இலங்கை ஒப்பந்தம்
இந்திய அமைதி காக்கும் படை
ராஜீவ் காந்திRAW
மேலும் பார்க்க
இலங்கை இராணுவம்
ஈழ இயக்கங்கள்
கொல்லப்பட்ட முக்கிய நபர்கள்

இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக பன்னாட்டு மன்னிப்பு அவை [1] போன்ற உலகின் முக்கிய மனித உரிமைகள் நிறுவனங்களும், ஐக்கிய அமெரிக்க அரச திணைக்களம் [2] ஐரோப்பிய ஒன்றியம் [3] போன்ற பன்னாட்டு நிறுவனங்களும் கவலை வெளியிட்டுள்ளன. இலங்கை அரசும், தமிழீழ விடுதலைப் புலிகளும் மனித உரிமைகளை மீறுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளன. அமெரிக்கா இலன்கையில் நடந்த உரிமைமீரலுக்கு உள்நாட்டு விசாரணையை ஆதரிப்போம் என்று தெரிவித்துள்ளது. [4] 2003 இல் இடம் பெற்று வந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள் காரணமாக இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பாக குறிப்பிடத்தக்க முன்னேற்றம் உள்ளதாக பன்னாட்டு மன்னிப்பு அவை அறிகை வெளியிட்டது.[5] ஆயினும் 2007ஆம் ஆண்டிற்கான பன்னாட்டு மன்னிப்பு அவையின் அறிக்கையில் அதிகரிக்கும் அரசியற் கொலைகள், குழந்தை ஆட்சேர்ப்பு, ஆட்கடத்தல்கள், கிழக்கின் இராணுவ நடவடிக்கைகள் காரணமாகவும் பெண்களுக் கெதிரான வன்முறகள் தூக்குத்தண்டனை, இலங்கை காவல் துறையினர் கட்டுப்பாட்டில் இருந்த கைதிகள் தாக்கப்பட்டமைப் போன்ற மனித உரிமை மீறல்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. மேலும் இவ்வறிக்கை பல மீறல் சம்பவங்கள் இடம்பெற்றப் போதிலும் விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்குமிடையான சமாதான ஒப்பந்தம் நடைமுறையில் இருந்ததாக குறிப்பிடுகிறது[6].

இலங்கையில் பேச்சுச் சுதந்திரம்[தொகு]

பேச்சுச் சுதந்திரம் என்பது ஒரு நபர் தாம் விரும்பும் மொழியில் தமது எண்ணத்தை அல்லது எண்ணக்கருவை சுதந்திரமாக வாய்வழி பேச்சின் ஊடாக வெளிப்படுத்துதல் அல்லது உரையாடுதல் ஆகும். அதாவது தனது கருத்தை எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி, எவ்வித இடையூறும் இன்றி, எவ்வித அச்சுறுத்தலும் இன்றி எந்த இடத்திலும் பேசுவதற்கான சுதந்திரமாகும். இது அடிப்படை மனிதவுரிமைகளில் ஒன்றாகும்.

இந்திய இராணுவக் கால பேச்சுச் சுதந்திர அச்சுறுத்தல்[தொகு]

1987 ஆம் ஆண்டு இந்திய அமைதி காக்கும் படை இலங்கை வடக்கு கிழக்கு தமிழர் வாழ் பகுதிகளுக்கு வந்திருந்தக் காலங்களில் “புலி, தமிழீழம், எல்.டி.டி.ஈ” போன்ற சொற்கள் மக்களின் வாய்வழி பேச்சின் போது பயன் படுத்துவதனை தவிர்த்தே வந்தனர். அவ்வாறு பேசியோர் காரணம் ஆராயப்படாமல் அச்சுறுத்தல் சித்திரவதைகளுக்கு உற்படுதல் போன்றக் காரணங்களால் இதுப் போன்ற சொற்களுக்கான பேச்சு சுதந்திரம் அற்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். அதனால் மக்கள் புலிகளை “பெருசு” என்றும் மாற்று இயக்கங்களை “சிறுசு” என்றும் பேச்சில் பயன்படுத்திக்கொண்டனர்.

இலங்கை வட கிழக்கு பகுதிகளின் பேச்சுச் சுதந்திர அச்சுறுத்தல்[தொகு]

இலங்கையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் குறிப்பாக இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிகளில் “எல்.டி.டி.ஈ, புலி, தமிழீழம்” மற்றும் போர் கருவிகள் தொடர்பானச் சொற்கள் யாருடையவாவது பேச்சின் போது பயன்படுவது இராணுவத்தினரிற்கு காதுகளுக்கு கேட்குமானால், பேசியவர் மேலதிக விசாரணை மற்றும் சித்திரவதைகளுக்கு ஆளாகும் அச்சுறுத்தல் நிலவுகின்றது.

இலங்கையில் தமிழ் பேசுவதற்கான அச்சுறுத்தல்[தொகு]

இலங்கையில் குறிப்பாக சிங்களவர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் தமிழ் மொழியில் சுதந்திரமாக பேசுவதற்கான அச்சுறுத்தல் இருந்த வண்ணமே உள்ளது. தமிழ் மொழியில் பேசும் போது, தமிழர்களை சிங்கள பெரும்பான்மை இனத்தவர்கள் “தெமலா” என்றும் “தெமலு” என்றும் வேறு சில இழிச்சொற்களை பயன்படுத்தி அவமானப் படுத்தும் நிகழ்வுகள் நிறைய உள்ளன. குறிப்பாக சிங்களவர்கள் அதிகமாக இருக்கும் இடங்களில் பேருந்துக்களில் உட்பட தமிழர்கள் சுதந்திரமாக தமிழ் மொழியில் பேசுவதைத் தவிர்த்து அல்லது குறைத்து வருவோர் அதிகம். சிலர் அச்சத்தின் காரணமாக மெல்லியக் குரலிலேயே பேசிக்கொள்வதனையும் அவதானிக்கலாம்.

மலையக தமிழ் மக்களின் பேச்சுச் சுதந்திரம்[தொகு]

இலங்கை மலையகம் வாழ் தமிழ் மக்கள் தமது தமிழ் மொழி உரையாடல்களை பொது இடங்களில் தவிர்த்து வருவதனை அவதானிக்கலாம். அநேகமாக சிங்கள மக்கள் மத்தியில் வாழும் மலையகத் தமிழர்கள் தமிழில் பேசுவதை சிங்களவர் இழிவு படுத்துவதால் பொது இடங்களில் தமிழ் மொழிக்கு பதில் சிங்கள மொழியில் பேசிக்கொள்வதனையும் பல இடங்களில் அவதானிக்கலாம். பல மலையகத் தமிழர்கள் தமது குழந்தைகளுக்கு சிங்களப் பெயர்களை இடுதல், சிங்கள வழிக்கல்வியில் கற்பித்தல் போன்றவைகளும் பேச்சு சுதந்திர அச்சுறுத்தல் இழிவுப்படுத்தல் வாயிலான ஒரு காரணமாகவும் பார்க்கலாம்.

மேற்கோள்கள்[தொகு]