வார்ப்புரு பேச்சு:இலங்கை இனப்பிரச்சினை

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதற்கு பின்னிற்கு இருக்கும் ஒழுங்கைப்பு முறை விளங்க வில்லை. விடுதலைப் புலிகள் என்று ஒரு பெரும் பிரிவு இருக்கின்றது. பேரினவாத இலங்கை அரசு என்ற ஒரு பெரும் இருக்க வேண்டும் அல்லவா?? காலனித்துவ தாக்கங்கள் பின்னணி குறிப்பிடப்படவேயில்லை. இந்த வார்ப்புருவை மிகவும் கவனமாக கட்டமைக்க வேண்டும். நடுநிலைமை இங்கு மிகவும் கவனாமாக பேணப்படவேண்டும். டெரன்ஸ், இங்கு மொழிபெயர்ப்பு மட்டும் போதாது. ஒரு நுண்ணிய புரிந்துணர்வும் வேண்டும். --Natkeeran 01:18, 9 நவம்பர் 2007 (UTC)Reply[பதில் அளி]

திடிரென்ன்று இப்படி குற்றஞ் சொல்லக் கூடாது. இது ஒரு ஆரம்பம் தானே.
இவ்வார்புரு முதலில் பின்னணியைச் சொல்லி பின்னர் இரண்டு முக்கிய தரப்பினர் இருவரையும் சொல்லி பின் ஏனைய பகுதிகளுக்குச் செல்கிறது. இங்கு ஈழப் போரின் தொடக்கம் எனக் குறிப்பிட்டுள்ளப் பகுதியை பார்த்தால் அது நீங்கள் கேட்ட இலங்கை அரசு என்ற பெரும் பிரிவுக்கு பொருத்தமாகத்தான் இருக்கிறது. மாற்றங்கங்கள் செய்யலாம். காலணித்துவ தாக்கம் பற்றி உள்நாட்டுப் போரின் தொடகம் என்ற கட்டுரையில் அல்லது இலங்கை இனப்பிரசினையில் குடியேற்றவாதத்தின் தாக்கம் போன்ற ஒரு கட்டுரையை எழுதி அதை பின்னணி என்ற தலைப்பின் கீழ் இணைக்கலாம்.
///இங்கு மொழிபெயர்ப்பு மட்டும் போதாது. ஒரு நுண்ணிய புரிந்துணர்வும் வேண்டும்./// தெரிந்தவர் தொடங்காதப் போது இங்கு தவியில் யாராவது தொடங்கத் தானே வேண்டும். ஈழப் போர் பற்றிய எனது அறிவை நீங்கள் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறீர்கள்.அதற்கு பதில் எழுதாமல் நான் மொழிப்பெயர்ப்பு மட்டுமல்லாது அக்கடுரைகளை வாசித்து நடுநிலைமையை பேணி வருகிறேன் என்பதை மட்டும் தெரிவிக்கிறேன்.--டெரன்ஸ் \பேச்சு 01:41, 9 நவம்பர் 2007 (UTC)Reply[பதில் அளி]